The Akkaali Movie Review
இந்த படத்தை P. யூகேஸ்வரன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ஜெய்குமார், நாசர், விஜய், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தாரணி, பரத் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு கிரி முர்பி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வித்தியாசமான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் படம் தி அக்காளி
கதை
அக்காலி என்பது பஞ்சாபில் சில பகுதிகளில் பேசப்படும் வழக்கு மொழி. இறப்பில்லாத மனிதன் என்று பெயர். படத்தில் ஜெயக்குமார் காவல்துறை அதிகாரியாக இருக்கிறார். இவருடைய கதைக்களம்: போதைப் பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இப்படி இருக்கும்போது மயானத்தில் புதைக்கப்படும் பிணங்களை எடுத்து அந்த குழிகளில் போதைப் பொருட்களை பதிக்கி வைக்கிறார்கள் என்ற தகவல் கிடைக்கிறது.
இதனால் ஜெயக்குமார் தலைமையிலான குழு ரகசியமாக அதை கவனிக்கிறது. அப்போது பல அதிர்ச்சியான தகவல்கள் எல்லாம் வெளிவருகிறது. சாத்தானை வழிபடும் கும்பல் அங்கு விசித்திரமான பூஜைகள் செய்வதையும், மனிதர்கள் நரபலி கொடுப்பதையும் ஜெயக்குமார் கண்டுபிடிக்கிறார்கள். இது தொடர்பாக அவர் விசாரணையும் நடத்துகிறார். ஆனால், இதை உயரதிகாரி தடுக்கிறார். இருந்தும் ஜெயக்குமார் இதை தீவிரமாக விசாரிக்கிறார்.
இதற்கு பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அப்போது அவரை சுற்றி பல மர்மமான விஷயங்கள் நடைபெறுகிறது. இறுதியில் ஜெயக்குமார் அந்த நபரை கண்டுபிடித்தாரா? அவரை சுற்றி நடக்கும் மர்மங்கள் என்ன? இதனால் ஜெயக்குமாருக்கு என்ன ஆனது? இந்த பிரச்சனைகள் எல்லாம் ஜெயக்குமார் சமாளித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.
இந்த படத்தில் ஜெய்குமார், நாசர், விஜய், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தாரணி, பரத் என எல்லோரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
கிரி முர்பியின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
இசை படத்திற்கு பெரிய பலம்.
சாத்தான்களை வழிபடுபவர்கள், நரபலி கொடுக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்த படத்தை எல்லோரும் ரசிக்கும்படி க்ரைம் திரில்லர் பாணியில் கொடுத்திருக்கிறார் இயக்குனர்
முகமத் ஆசிப் ஹமீது
பாராட்டுக்கள்.