சுற்றுப்புற சூழல் மற்றும் புவி சமநிலை தொடர்பாக இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் ‘வெமா’(WEMAAA)
சுற்றுப்புற சூழல் மற்றும் புவி சமநிலை தொடர்பாக இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் ‘வெமா’(WEMAAA) இந்தியாவில் முதன்முறையாக நூற்றுக்கணக்கிலான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்று கூடி, சமூக முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, விவசாய துறையின் புத்தாக்கம் உள்ளிட்ட பல துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமான சீர்திருத்தங்கள் குறித்தும், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்தும், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தரவுகள், அறிவியல் ரீதியான புதிய கண்டுபிடிப்புகள் என பலவற்றை பரிசீலனை செய்து, விவாதிக்கும் வகையில் மாநாடு ஒன்று ‘வெமா’(WEMAAA) எனும் பெயரில் சென்னையில் நடைபெற்றது. இந்தியாவில் இயங்கும் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதி ஆதாரத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த மாநாட்டில், இந்தியா மட்டுமல்லாமல் பல சர்வதேச நாடுகளில் இருந்து முந்நூறுக்கும் மேற்பட்ட பன்னாட்டு பெரு நிறுவனங்கள், முந்நூறுக்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், 100க்கும் மேற்பட்ட இய ற்கை விவசாயி கள், நூற்றுக்கும் மேற் பட்ட அரசா ங்க உய ர் அதிகாரிகள் உள்ளி ட்ட பல்வேறு தரப்பி னர் கலந்து கொண்டனர். சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் மற்றும் புவி சமநிலை தொடர்பான பல்வேறு கருத்துருக்கள், சமூக அறிவியல் விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் கூற்றுப்படி அடுத்து வரும் 15 முதல் 20 ஆண்டுகாலம், புவியின் இயல்பு நிலைக்கு சவாலான காலம் என ஆராய்ந்து அறிவித்திருக்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு நம்முடைய அடுத்த தலைமுறையினர் ஆரோக்கியமான… சுகாதாரமான சுற்றுச்சூழல் மற்றும் புவி வெப்பமடைதலின் சமநிலை தொடர்பாக பல ஆயிரம் வருடங்களுக்கு முன் அகஸ்திய முனிவர் அருளிச்சென்ற விசயங்களை, தற்போதுள்ள சூழலுக்கு ஏற்றவாறு எளிதாக நடைமுறைப்படுத்துவது குறித்த விவாதம், பல்வேறு கோணங்களில் நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஜூலை மாதம் 19 ஆம் தேதியான இன்று மாலை 6:00 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விவசாயிகள், விஞ்ஞானிகள், பொதுமக்கள் மற்றும் இந்த புவியின் நலன் குறித்து முன்வைக்கும் சிறந்த இரண்டு திட்டங்களை தேர்ந்தெடுத்து, அதற்காக 45 லட்ச ரூபாய் மற்றும் நான்கு கோடி ரூபாய் நிதியை நன்கொடையாக அளிக்கப்பட்டது. பொதுமக்கள், விவசாயிகள், நுகர்வோர், அதிகாரிகள், ஆட்சியாளர்கள் ஆகிய ஒரு சாராருக்கும், கார்ப்பரேட் எனப்படும் பெறு நிறுவனங்களுக்கும் இடையேயான உறவை… நிதி ஆதாரப் பகிர்வை … செம்மையாக செயல்படுத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்று கூடிய இந்த மாநாட்டில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்… சமூக மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்காக ஆற்றி வரும் செயல்கள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் விரிவாகவும், விளக்கமாகவும் விவாதிக்கப்பட்டது. தன்னார்வ தொண்டு பணியில் பன்னிரண்டு துறைகளில் பத்தாண்டிற்கும் மேற்பட்ட அனுபவம் கொண்டிருக்கும் சங்கமாஸ் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் தரவுகள் பிரிவு நிபுணர் ( Strategic Analyst) சுனிஷ் எஸ். தேவன் (SUNEESH S DEVAN,SANGAMAAS INTERNATIO NA …
சுற்றுப்புற சூழல் மற்றும் புவி சமநிலை தொடர்பாக இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் ‘வெமா’(WEMAAA) Read More