Star Movie Review

Star Movie Review

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட்
மற்றும்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா
மூவிஸ்
வழங்கும்,
தயாரிப்பாளர்கள்
BVSN பிரசாத்
மற்றும்
ஶ்ரீ நிதி சாகர்
மற்றும்
இணை தயாரிப்பாளர் தீபக்
தயாரிப்பில்…
இளன்
இயக்கத்தில்…
யுவன் ஷங்கர் ராஜா
இசையில்…
K.எழில் அரசு
ஒளிப்பதிவில்…
கவின்,
அதிதி பொஹங்கர்,
லால்,
கீதா கைலாசம்
ப்ரீத்தி முகுந்தன்,
ராஜா ராணி’ பாண்டியன்,
தீப்ஸ்
மற்றும்
பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம்
ஸ்டார்.

கதை

சாதாரண குடும்பத்தை சேர்ந்த கலை (கவின்). சிறுவயதில் இருந்தே சினிமா கனவுகளுடன் வளர்கிறார். இவருக்கு வீட்டில் அப்பா, அக்கா சப்போர்ட் செய்கிறார்கள் அம்மாவை தவிர. +2வில் ஜஸ்ட் பாஸ் வாங்கும் கவினை அம்மா இன்ஜினியரிங் படிப்பில் சேர்த்து விடுகிறார். தன் சினிமா ஆசைக்காக அவ்வப்போது பட ஆடீஷன்களில் கலந்து கொள்கிறார். எத்தனை தோல்வி வந்தாலும் அனைத்தையும் எதிர்கொண்டு அடுத்ததை நோக்கி ஓடும் கவினுக்கு எதிர்பாராத விதமாக விபத்து நேர்கிறது. 
அந்த விபத்தினால் அவன் முகம் சேதாரமாகி சினிமாவை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறான். இதனால் சினிமாவை விட்டு விலகி மனைவியுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார். ஆனால் சினிமாவை விட்டு விலகினாலும், மீண்டும் மீண்டும் சினிமா கனவுகள் துரத்திக்கொண்டே இருக்கிறதுகவினுக்கு. தன் ஆசையையும் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல், குடும்ப கஷ்டத்தையும் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கும் கவின், ஒரு கட்டத்தில் தனக்கு பிடித்தவர்களையும் வெறுத்து சினிமா ஓன்றே வாழ்க்கை என முடிவெடுக்க இயக்குநர் வெற்றிமாறனிடமிருந்து அழைப்பு வந்து சினிமாவுக்குள் நடிகராக நுழையும் அந்த சமயத்தில்
கவின் மனைவிக்கு சீரியஸ் என போன் வருகிறது. கவின் சினிமாவை தேர்ந்தெடுத்தாரா? தன் மனைவியை காப்பாற்றினாரா? என்பதே
படத்தின் மீதிக்கதை

தான் ஒரு திறமையான நடிகர் என்பதை நடிப்பிலும், நடனத்திலும், சண்டைக் காட்சிகளிலும் நிரூபித்திருக்கிறார் கவின்.
மகனின் நடிப்பின் வெற்றிக்காக உறுதுணையாக இருக்கும் ஒரு தந்தையாக லாலின் நடிப்பு சிறப்பு. நாயகிககளான அதிதி, ப்ரீத்தி முகுந்தன் சிறப்பாக நடித்துள்ளனர். கவினின் தாயாக கீதா கைலாசத்தின் நடிப்பும் பாராட்டும் வகையில் இருந்தது.
இவர்களை தாண்டி நடிகர் சுகுமார் வரும் காட்சி மிகவும் அற்புதமாக காட்டப்பட்டுள்ளது. சினிமா ஒருவரை எந்தளவு உயர்த்திப் பார்க்கும். அதே அளவிற்கு கீழே தாழ்த்தியும் விடும் என்பதை மிக அழகாக காட்டியிருப்பார்கள். அந்த காட்சியில் சுகுமாரின் சொந்த அனுபவத்தையே இயக்குனர் காட்சிப்படுத்தியிருப்பதற்கு நிச்சயம் அவரை பாராட்ட வேண்டும். மற்றும் மாறன், ராஜா ராணி பாண்டியன்,
தீப்ஸ் என இதில் நடித்திருக்கும் அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
K எழில் அரசுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். யுவன்சங்கர்ராஜாவின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.

நடுத்தர குடும்பத்து இளைஞனின் நடிகனாகும் கதையை எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார்இயக்குநர் இளன். பாராட்டுக்கள்.