வேடியப்பன் தயாரிப்பில் பாஸ்கர் சக்தி இயக்கத்தில்
குங்குமராஜ்
வைரமாலா
வடக்கனாக பர்வேஸ் மெஹ்ரூ
ரமேஷ்வைத்யா
செந்தில் கோச்சடை, ஷமீரா, பிண்ட்டூ
வந்தனா,
பேபி தனிஷா
சுபாஷ்
இன்ஸ்பெக்டராக தங்கமணி பிரபு
மில் மேனேஜர் – ரமேஷ் யந்த்ரா
அக்கவுண்டண்ட் – சாம் டேனியல்
வடக்கன் ஃப்ரெண்ட்டாக ராஜேஷ்
கான்ஸ்டபிளாக ராமையா என மற்றும் பலர் நடித்து ஜூன் 21 ல் வெளியாகும் படம் ரயில்
ஒளிப்பதிவு தேனிஈஸ்வர்
இசை S.J. ஜனனி
கதை
கதையின் நாயகன் குங்குமராஜ் எலக்ட்ரீசியன் குடிக்கு அடிமையானதால் மாமானார் கொடுத்த பைக், பணம் எல்லாவற்றையும் குடித்தே அழித்து விடுகிறார். இதன்பிறகு தொழில் செய்து பிழைக்க மாமனாரிடம் பணம் கேட்கிறார். மாமனார் தர மறுக்கிறார். கதாநாயகன் குங்குமராஜ் வீட்டில் ஒரு போர்ஷனில் வடக்கன் ஒருவர் தங்கி மில்லில் வேலை செய்து வருகிறார். வடக்கன் தன் மனைவியிடம் அன்பாக பழகுவதை கதாநாயகன் தவறாக புரிந்து கொண்டு வடக்கனை கொலை செய்ய நண்பனுடன் திட்டம் போடுகிறார். ஆனால் திடீரென்று வடக்கன் ஆக்ஸிடென்ட்டில்இறந்து அந்த பாடி இவரது வீட்டிற்குள் வைக்கப்படுகிறது. அவரது பாடியை அடக்கம் செய்ய கதாநாயகன் மனைவி அப்பாவிடம் சொல்லி அதற்குன்டானவேலைகளை செய்கிறார். அந்த சம்பவத்திற்கு வரும் வடக்கன் மனைவி, மகள், அப்பா, அம்மா வர அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதே சுவாராஸ்யமானபடத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக குங்குமராஜ் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாகவைரமாலா கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார். வடக்கனாக பர்வேஸ் மெஹ்ரூ நன்றாக நடித்துள்ளார். பாட்டு பாடும்போது கைதட்டல் பெறுகிறார். மற்றும் இதில் நடித்த
ரமேஷ் வைத்யா,
செந்தில் கோச்சடை, ஷமீரா, பிண்ட்டூ
வந்தனா,
பேபி தனிஷா
சுபாஷ்
இன்ஸ்பெக்டராக தங்கமணி பிரபு
மில் மேனேஜர் – ரமேஷ் யந்த்ரா
அக்கவுண்டண்ட் – சாம் டேனியல்
வடக்கன் ஃப்ரெண்ட்டாக ராஜேஷ்
கான்ஸ்டபிளாக ராமையா என இதில் நடித்த அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஜனனியின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதி படத்திற்கு பெரிய பலம்.
இயக்குநர் பாஸ்கர் சக்தி மண்ணில் பிறந்த அனைவருமே பிழைக்க வந்தவர்கள்தான்அதனால் வடக்கன் மற்றவர் என பாகுபாடு பார்க்காமல் எல்லோருமே அன்பாக பழகி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாகசொல்லியுள்ளார்பாராட்டுக்கள்.