R. K. சுரேஷ் நடிக்கும் புதிய படம் “கோட்டைமுனி”
ட்ரீம் லைட் பிக்சர்ஸ் (பி) லிமிடெட் சார்பாக சிங்கப்பூர் N. ஹபீப் மிகுந்த பொருட்ச் செலவி ல் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் கோட்டைமுனி.
புதுமுக இயக்குனரான ந.இளைய பிரபாகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப் படத்தை இயக்குகிறார்.
1980 காலகட்டத்தில் இராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் கடல் அரசனாக நிஜத்தில் வாழ்ந்த கோட்டைமுனி என்பவரின் வாழ்க்கையில், இலங்கை தனுஷ்கோடி பகுதிக்கு இ டையே கடலில் நடந்த கடத்தல் சம்பவங்களை மையப்படுத்தி கேங்க்ஸ்டர் படமாக கோ ட் டைமுனி திரைப்படம் உருவாகிறது.இதில் கோட்டைமுனியாக முற்றிலும் வித்தியா ச மா ன கதாப்பாத்திரத்தில் R.K.சுரேஷ் நடிக்கிறார். நீண்ட நெடுநாளைக்குப் பிறகு முற்றி லும் வித்தியாசமான தோற்றத்தில் வத்திக்குச்சி, காலா படத்தில் நடித்த திலீபன் முக்கிய க தாப்பாத்திரம் ஏற்றிருக்கிறார்.
மேலும் சைத்தான் படப் புகழ் அருந்ததி நாயர் கதை நாயகியாக நடிக்க, ஷரவணசக்தி, ரா ஜசிம்மன், நிழ ல் கள் ரவி, சச்சு, தாமு, முத்துராமன், முத்துக்காளை, திரு முருகன், உள்பட ப லர் நடிக்கின்றனர். கடலும் கடல் சார்ந்த பகுதிகளில் நடக்கும் கதை என்பதால், இதன் பட ப்பிடிப்பு இராமேஸ்வரம், வேதாரண்யம், நாகப்பட்டிணம் ஆகிய கடற்கரைப் பகுதியில் நடக்க இருக்கிறது. தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத அளவிற்கு ஆழ்கடல் சண் டை க் காட்சிகளை புதிய தொழில்நுட்பத்துடன் வித்தியாசமான முறையில் படமாக்குவதற்கு படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ஒளிப்பதிவு: A.M.M. கார்த்திகேயன், இசை: M.S.பாண் டி யன், கலை: SK, படத் தொ குப்பு: நெல்சன் ஆண்டனி, நடனம்: சிவராக் சங்கர், பாடல்க ள்: ப.க ருப்பையா, சண் டைக்காட்சிகள்: டைகர் ஜான்மார்க், மக்கள் தொடர்பு: S.ப்ரியா, தயாரிப்பு நிர்வாகம்: K.S. வெ ங்கடேஷ் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் கோட்டைமுனி திரையில் வெளியிட ப்படும்.