- Merry Christmas Movie Review in Tamil
Tips films & match box pictures தயாரிப்பில்,Bollywood இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “மேரி கிறிஸ்துமஸ்”(Merry Christmas). ஹீரோவாக விஜய் சேதுபதியும், ஹீரோயினாக கத்ரீனா கைஃப்பும் நடித்துள்ள இப்படம் தமிழ், இந்தி என இருமொழிகளில் எடுக்கபட்டுள்ளது.
தமிழில் இவர்கள் உடன் ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முக ராஜன், காயத்ரி, ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.பாடல்களுக்கு ஆன இசையை ப்ரீதமும், பின்னணி இசையை டேனியல் B. ஜார்ஜ் உம், ஒளிப்பதிவை மது நீலகண்டனும் செய்துள்ள மேரி கிறிஸ்துமஸ் படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
கதை
ஒரு கிறிஸ்துமஸ் இரவில் நடக்கும் கதை தான் “மேரி கிறிஸ்துமஸ்” படத்தின் கதை.
கிறிஸ்துமஸ் விழாவுக்கு முதல் நாள் துபாயில் இருந்து மும்பைக்கு வரும் சிவில் இன்ஜினியரான ஆல்பர்ட் ஹோட்டல் ஒன்றில் தங்குகிறார். அங்கு தனது வாய் பேசாத மகளுடன் இருக்கும் மரியாவை சந்திக்கிறார். கணவருடனான பிரச்சினையில் இருக்கும் மரியா, அதில் இருந்து தப்பிக்க, ஆல்பர்ட் உடன் நேரத்தை செலவிட நினைக்கிறார். இதனிடையே மகளை தூங்க வைத்துவிட்டு,வெளியே மகிழ்ச்சியாக இருவரும் சென்று விட்டு, திரும்பி வந்து பார்க்கும் போது மரியாவின் கணவர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். எதற்கு பிரச்சனை….? போலீசுக்கு போன் செய்யலாம் என மரியா சொல்லும்போது அங்கிருந்து தான் உடனே செல்ல வேண்டும் என ஆல்பர்ட் சொல்லுகிறார்.மேலும் தான் ஒரு சிவில் இன்ஜினியர் இல்லை என்ற அதிர்ச்சி தகவலையும் போட்டுடைக்கிறார். இதற்கிடையில் இந்த பிரச்சனை ஒரு வழியாக போலீஸ் விசாரணைக்கு செல்கிறது. கொலையா……அல்லது தற்கொலையா….என்ற பாணியில் விசாரணை செல்கிறது.இதில் மரியாவின் கணவரை கொலை செய்தவர் யார்? .. அதற்கான காரணம் என்ன? ஆல்பர்ட் யார்? என்ற கேள்விகளுக்கு விடை கிடைத்ததா என்பதே “மேரி கிறிஸ்துமஸ்” படத்தின் மீதி கதையாகும்.
141 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தில் மிகவும் குறைவான கதா பாத்திரங்களே நடித்து உள்ளது சிறப்பு.குறிப்பாக ஆரம்பம் தொடங்கி இறுதி வரை ஆல்பர்ட் ஆக விஜய் சேதுபதியும், மரியாவாக கத்ரீனா கைஃப் ம் தங்களுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர் . மேலும் தமிழ் வெர்ஷனில் போலீஸ் அதிகாரிகளாக வரும் ராதிகா சரத்குமார், சண்முக ராஜன் இருவரும் வந்த பிறகு படம் சூடு பிடிக்க ஆரம்பிக்கறது.கத்ரீனாவுக்கு ஆன தமிழ் டப்பிங் சிறப்பு. வலுவான திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறப்பான பின்னணி இசை, கதைக்கு ஏற்ற கதா பாத்திரங்கள் என இருந்தாலும்,மெதுவாக நகரும் திரைக்கதை, கொஞ்சம் லாஜிக் மீறல்கள், குற்றம் நடந்த நிலையில் சிசிடிவி கேமரா பதிவுகள் இருக்கிறதா என்று ஆராயாமல் பழைய விசாரணையை கையிலெடுக்கும் போலீஸ் என சில மைனஸ்களும் தென்படுகின்றன. படத்தின் இறுதியில் வரும் அந்த 20 நிமிட கிளைமேக்ஸ் காட்சி சிறப்பு.
மொத்தத்தில் “மேரி கிறிஸ்துமஸ் ” படம்
“ஹாப்பி கிறிஸ்துமஸ்” படமாக அமைந்துருக்கிறது…
பட குழுவினற்கு வாழ்த்துக்கள்.
விமர்சனம் – ராஜூ.