Hollywood Creative Alliance விருதுக்கான தேர்வுப் பட்டியலில் இடம் பிடித்த அட்லியின் ஜவான்

Hollywood Creative Alliance விருதுக்கான தேர்வுப் பட்டியலில் இடம் பிடித்த அட்லியின் ஜவான்

ஹாலிவுட் விருதுகளில் இடம்பிடித்த அட்லியின் ஜவான்

ஹாலிவுட்டில் இடம்பெற்ற தமிழ் இயக்குநராக சாதனைப் படைத்த ஜவான்

பாலிவுட் கிங்கான் ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவான ஜவான் இந்திய திரையுலக வரலாற்றில் பல புதிய சாதனைகளை படைத்த நிலையில், தற்போது ஹா லி வுட்டில் வழங்கப்படும் ஹாலிவுட் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் ( Hollywood Creative Alliance ) விரு துக்கான தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ஹாலிவுட்டில் இடம்பிடித்த தமிழ் இயக்குநராக சாதனை படைத்துள்ளார் இயக்குநர் அட்லி.

தமிழ்த் திரையுலகில் கமர்ஷியல் படங்களுக்கு புது வடிவம் தந்தவர், முன்னணி நட்சத்தி ரங்களை ப்ளாக்பஸ்டர் ஹீரோக்களாக மாற்றியவர் இயக்குநர் அட்லி. தமிழ் சினிமா வசூ லில் வரலாற்றுச் சாதனைப் படைத்து, பின் பாலிவுட் கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் உரு வான, “ஜவான்” மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் இயக்குநர் அட்லி.

ரா ஜா ராணி ப்ளாக்பஸ்டர் வெற்றி மூலம் திரையுலக பயண த்தை துவங்கிய அட்லி, தெ றி, மெர்சல், பிகில் படங்கள் மூல ம் உச்சம் தொட்டு, தற்போது ‘ஜவான்’ மூலம் ஹாலி வுட்டில் இ டம்பெற்ற முதல் தமிழ் இயக்குநராக சாதனை படை த்தி ரு க்கிறார்.

ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, இயக்குநர் அட் லீ இயக்கத்தில், கிங்கான் ஷா ருக்கான் நடிப்பில் உருவான, ‘ஜவான்’ திரைப்படம், இந்தியாவின் அத்தனை முன் ன ணி மொழிகளிலும் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இப்ப டம் இந்தியாவில் திரையரங் குகளில் 3.5 கோடி பார்வையா ளர்களைப் பெற்றது, 1080 கோடி ரூபாய் வசூலித்த, இந்தி யா வில் முதல்ப்படமாக சாதனை படைத்தது.

பல புது வரலாற்றுச் சாதனைகளைப் படைத்த இப்படம், ஹாலிவுட்டில் வருடா வருடம் வழ ங்கப்படும், உலகளவிலான சிறந்த படங்களுக்கான ஹாலிவுட் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் ( Hollywood Creative Alliance ) விருதுக்கான தேர்வுப்பட்டியலில் இந்தியா சார்பில் இடம்பி டித்து ள்ளது. ஒரு தமிழ் படைப்பாளியின் படைப்பு, உலகளவிலான படைப்புகளுடன் இடம்பிடி த் திருப்பதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் இயக்குநர் அட்லி க்குப் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.