ZEE5 ல் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும், மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸ்

ZEE5 ல் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும், மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸ்

மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளதுஐந்தாம் வேதம் உண்மையா? அது என்னவென்று தெரிந்துகொள்ள, புதிய உலகிற்குள் மூழ்குங்கள், இதோ ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது!!

மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா, மீண்டும் ஐந்தாம் வேதம் எனும் ஒரு அதிரடி புராண சாகச திரில்லருடன் வருகிறார்!

ரசிகர்களின் நீண்டகால காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! பரபரப்பான மோஷன் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த, ஐந்தாம் வேதம் சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது. 90களின் புகழ்பெற்ற புராண சாகச திரில்லரான ‘மர்மதேசம்’ புகழ் இயக்குநர் நாகா இயக்கியிருக்கும், ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் அசத்தலான டீசரை ZEE5 வெளியிட்டுள்ளது. அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள இந்தப் புராணத் தொடரில், சாய் தன்சிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், மற்றும் ஒய்.ஜி. மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த சீரிஸ் ஸ்ட்ரீமாகவுள்ளது.

விரைவில் ஒளிபரப்பாகவுள்ள இந்த சீரிஸின் டீசர், சீரிஸின் மீதான ஆவலை பன்மடங்கு அதிகப்படுத்தி இருக்கிறது.

அனு தனது தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்வத