வணக்கம், காம்தார் நகருக்கு காந்தக் குரலோனின் பெயர் வைத்தது ஆகப் பொருத்தமான செயல்.
நாம் கடந்து வரும் நண்பர்கள் பிரிந்து போனதும் அவர்களைச் சுற்றிய நினைவுகளையும் சேர்ந்து கடந்துவிடுகிறோம்.
அப்படியில்லாமல் கடந்துபோன நிகழ்வுகளை மீட்டுத் திரும்பவும் வைத்துக்கொள்வதில் இருக்கிறது நம் பேரன்பு.
அப்படி நம்மிடையேயும், காற்றோடும் இவ்வுலகின் அலையோடும் கலந்து நிற்பவர் இசைக் குரலோன் பத்மஸ்ரீ பத்ம விபூஷன் எஸ். பி. பி . அவர் வாழ்ந்த காம்தார் நகருக்கு எஸ். பி பாலசுப்பிரமணியன் சாலை என்று பெயரிட. அறிவித்துள்ள தமிழக அரசுக்கும்…மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகின் சார்பில் நன்றிகள். தமிழ்த் திரையுலகிற்கு முதல்வர் அவர்கள் செய்துவரும் நலன்களும்… திரைத்துறையினரின் மீது கொண்டுள்ள அன்பும்… அவர்களுக்காக முன்னின்று செய்யும் ஆக்கமிகு செயல்களும் மிக மிக நன்றிக்குரியவை. மிகப்பெரும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.
என்றும் எங்கள் மனதில் வாழும் எஸ் பி பாலசுப்பிரமணியம் என்ற அன்பனுக்கு புகழாஞ்சலிகள்.
இப்படிக்கு,
இயக்குநர் பாரதிராஜா
தலைவர்
தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்.