டாடா டெக்னாலஜிஸ், மைக்ரோசாஃப்ட் மற்றும் டாடா மோட்டார்ஸுடன் இணைந்து,

டாடா டெக்னாலஜிஸ், மைக்ரோசாஃப்ட் மற்றும் டாடா மோட்டார்ஸுடன் இணைந்து,

டாடா டெக்னாலஜிஸ், மைக்ரோசாஃப்ட் மற்றும் டாடா மோட்டார்ஸுடன் இணைந்து, இன்ஜினியரிங் மாணவர்களுக்கான இனோவெண்ட் ஹேக்கத்தான் மூலம் புதுமையை முன்னெடுக்கிறது, Generative AI இல் கவனம் செலுத்துகிற

·         டாடா டெக்னாலஜிஸ், உற்பத்தித் துறை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள இந்திய பொறியியல் மாணவர்கள், தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்வும் புதுமையான தீர்வுகளை உருவாக்கவும் தளம் அமைக்க, மைக்ரோசாப்ட் மற்றும் டாடா மோட்டார்ஸுடன் இணைந்துள்ளது.

·         இந்த ஆண்டு கருப் பொருளாக, தயாரிப்பு பொறியியல், உற்பத்தி மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் உள்ளிட்ட தயாரிப்பு மேம்பாட்டு மதிப்புச் சங்கிலி முழுவதும் புதுமைகளை இயக்குவதற்கு Generative AI ஐ (செயற்கை நுண்ணறிவு) மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

·         டாடா டெக்னாலஜிஸ் வழங்கும் ரொக்கப் பரிசுகள் மற்றும் ஊதியத்துடன் கூடிய வேலைபயிற்சி(internship),  ஆகிய வாய்ப்புகளைத் தவிர, சிறந்த திட்டங்களுக்கு மைக்ரோசாஃப்ட் Azure சாண்ட்பாக்ஸ்-ஐ அன்பளிப்பாக பயன்படுத்துதல் மற்றும் டாடா டெக்னாலஜிஸ் மற்றும் டாடா மோட்டார்ஸில் உள்ள நிபுணர்களின் வழிகாட்டுதல் ஆகியவை நிஜ உலக பயன்பாட்டை வலியுறுத்தி வழங்கப்படும்.

·         இந்த புதுமைப் போட்டி இந்தியாவில் 3வது மற்றும் 4வது ஆண்டு பொறியியல் மாணவர்களிடமிருந்து உள்ளீடுகளை அழைக்கிறது; பெண் பொறியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குழு உறுப்பினர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கிறது.

புனே, மும்பை, பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, இந்தியா 18 ஜூன் 2024 : உலகளாவிய தயாரிப்பு பொறியியல் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ், மைக்ரோசாப்ட் மற்றும் டாடா மோட்டார்ஸ் உடன் இணைந்து டாடா டெக்னாலஜிஸ் இன்னோவென்ட் ஹேக்கத்தானின் 2வது பதிப்பை அறிமுகப்படுத்துகிறது. இந்த கூட்டு முயற்சியானது இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் மாணவர்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது; உற்பத்தித் துறையில் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளும் அவர்களின் படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்த ஒரு தளத்தை அவர்களுக்கு வழங்குகிறது. இந்த ஆண்டு ஹேக்கத்தான், தயாரிப்பு பொறியியல், உற்பத்தி மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் உள்ளிட்ட தயாரிப்பு மேம்பாட்டு மதிப்புச் சங்கிலி முழுவதும் மதிப்பை வழங்கும் Generative AI- இயக்கப்பட்ட கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துகிறது.

டாடா டெக்னாலஜிஸ், சிறந்த திட்டக்குழு/களை, அளவிடக்கூடிய கண்டுபிடிப்புகளை உருவாக்க தேவையான புதுமை கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தும். டாடா டெக்னாலஜிஸின் பொருள் வல்லுநர்கள் (SMEகள்) சிறப்பாகச் செயல்படும் திட்டக் குழு/களுக்கு அவர்களின் திட்டங்களை மேம்படுத்துவதற்கு வழிகாட்டுவார்கள். மைக்ரோசாப்ட், Azure வளங்கள் அன்பளிப்பாக பயன்படுத்துதல் மற்றும் Azure சமூகத்தின் வழிகாட்டுதல் ஆகியவற்றை சிறந்த குழு/களுக்கு வழங்கும், அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ் நிஜ உலக சவால்களை வரையறுக்கவும், சிறந்த திட்டங்களின் வணிகமயமாக்கலை ஆதரிக்கவும் உதவும். இந்தியா முழுவதும் உள்ள 3வது மற்றும் 4வது ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஹேக்கத்தான் திறக்கப்படுவதோடு உள்ளடக்கிய பங்கேற்பை ஊக்குவிக்கிறது. மேலும் பெண் பொறியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குழு உறுப்பினர்களிடமிருந்து உள்ளீடுகளை அழைக்கிறது. இதன் மூலம் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய பங்கேற்றத்திற்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

திட்டங்களின் மதிப்பீட்டு செயல்முறை மூன்று நிலைகளைக் கொண்டிருக்கும்: ஆரம்ப மதிப்புரைகள், கருத்துக்கான மெய்நிகர் ஆதாரங்களின் (POC) விளக்கக்காட்சிகள், இறுதி செயல் விளக்கங்கள். பன்முகத்தன்மை, புதுமை, சாத்தியம் மற்றும் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் திட்டங்கள் மதிப்பிடப்படும். முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் அணிகள் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் ஊதியத்துடன் கூடிய வேலைபயிற்சி(internship), ஒட்டுமொத்தமாக 4.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பரிசுகள் ஆகிய வாய்ப்புகளைப் பெறும். இன்னோவென்ட் திட்டத்தின் கூடுதல் விவரங்கள் இங்கே https://www.tatatechnologies.com/innovent/ கிடைக்கின்றன மேலும் திட்டத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 31 ஜூலை 2024.

டாடா டெக்னாலஜிஸ் இன்னோவென்ட்டின் (InnoVent) 2வது பதிப்பைப் பற்றிப் பிரதிபலிக்கும் வகையில், டாடா டெக்னாலஜிஸின் எம்.டி மற்றும் சி.இ.ஓ., திரு. வாரன் ஹாரிஸ்(Warren Harris) கூறியது, “டாடா டெக்னாலஜிஸ் இன்னோவென்ட், எங்கள் இளைஞர்களுக்கு சிறந்த பொறியியல் உலகத்தை உருவாக்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை உள்ளடக்கியது. மைக்ரோசாப்ட் மற்றும் டாடா மோட்டார்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவதின் மூலம், இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு, Generative AIஐ மேம்படுத்தும் புதிய தீர்வுகளை உருவாக்குவதற்கான மற்றும் அவர்கள் தங்கள் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.  இன்னோவென்ட்டின் 1வது பதிப்பு வெற்றியடைந்ததுடன், நாங்கள் ஏற்கனவே எங்கள் வாடிக்கையாளர்களுடன் சில கண்டுபிடிப்புகளை முன்னெடுத்தும் வருகிறோம். இந்த ஆண்டு ஹேக்கத்தானில் வரவிருக்கும் புதுமையான திட்டங்களை பார்க்க நான் ஆவலாக உள்ளேன். ”

திருமதி. ஹிமானி அகர்வால்(Himani Agrawal), – அஸூர், மைக்ரோசாப்ட் இந்தியா மற்றும் தெற்காசியா தலைவர்,  இந்த கூட்டுமுயற்சி குறித்து கருத்து தெரிவித்தாவது, ”மைக்ரோசாப்ட், அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், இன்னோவென்ட் ஹேக்கத்தானுக்காக டாடா டெக்னாலஜிஸுடன் இணைந்து செயல்படுவதை எதிர்நோக்கியுள்ளது. அளவிடக்கூடிய Gen AI Azure சூழலை வழங்குவதன் மூலமும், பரந்த Azure சமூகத்திற்கான அணுகலை வழங்குவதன் மூலமும், மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியை விரைவுபடுத்த உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த கூட்டுமுயற்சியின் தாக்கத்தை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.”

டாடா மோட்டார்ஸ் பேஸ்சேன்ஜர் வெஹிகிள்ஸ் லிமிடெட் மற்றும் டாடா பேஸ்சேன்ஜர் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் ஆகியவற்றின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி திரு. ஸ்வென் பட்ஸ்ச்க்க (Sven Patuschka), ஹேக்கத்தான் அறிமுகம் குறித்து கூறியதாவது, “Generative AI ஆனது மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவங்களுக்காக தயாரிப்பு வடிவமைப்பில் புரட்சியை ஏற்படுத்துகிறது. நிஜ-உலக சவால்களை எதிர்கொள்ளும் புதுமைகளை வளர்ப்பதற்காக இன்னோவென்ட் ஹேக்கத்தானுக்காக டாடா டெக்னாலஜிஸ் உடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நம்பிக்கைக்குரிய திட்டங்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆதரித்தல் மூலம், வாகனவியல் கண்டுபிடிப்புகளை இயக்க எதிர்கால பொறியாளர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். டெமோ-டே  தினத்தில் முன்னோடி தீர்வுகளைப் பார்ப்பதற்கும், இறுதிப் போட்டியாளர்களைச் சந்திப்பதற்கும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். ”

திரு. சந்தோஷ் சிங்(Santosh Singh), நிர்வாக துணைத் தலைவர் மற்றும் டாடா டெக்னாலஜிஸின் மார்க்கெட்டிங் மற்றும் பிசினஸ் எக்ஸலன்ஸ் ஆகியவற்றின் உலகளாவிய தலைவர் மேலும் கூறியதாவது, “இன்னோவென்ட், இளம் பொறியியல் மாணவர்களுக்கு, உற்பத்தித் துறையில் உள்ள மிக முக்கியமான சில சவால்களை நிவர்த்தி செய்யும் தொழில்நுட்பம், திறன் மற்றும் புதுமையான தீர்வுகளை மேம்படுத்துவதற்கான தளத்தை வழங்குகிறது. இந்த ஆண்டு Generative AIஇல் கவனம் செலுத்துவது, உற்பத்திதொழிலின் எதிர்காலத்திற்கான அதன் மாற்றும் திறனையும், இளம் மனதில் இருந்து புதிய யோசனைகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி கண்டுபிடிப்பாளர்களின் பங்களிப்பைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், ஏனெனில் இது உள்ளடக்கிய பங்கேற்றத்திற்கான எங்கள் ஆழ்ந்த அர்ப்பணிப்பு மற்றும் அனைவருக்கும் சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கான எங்கள் முயற்சிகளை பிரதிபலிக்கிறது.”