Rasavathi Movie Review
மெளனகுரு, மகாமுனி படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பாக வெளியாகியிருக்கும் படம் ரசவாதி
இப்படத்தில் அர்ஜூன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன், ஜி எம் சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், ரிஷிகாந்த், ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சரவணன் இளவரசு. இசையமைத்திருக்கிறார் தமன்.
DNA Mechanic Company சார்பில் சாந்தகுமார் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
கதை
நாயகன் அர்ஜூன் தாஸ், கொடைக்கானலி ஒரு சித்த மருத்துவராக வாழ்ந்து வருகிறார். அங்கிருக்கும் மக்களுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார்.
அதே ஊரில் தனியார் ரெஸ்டாரண்டில் மேனஜர் பணிக்காக வந்து சேர்கிறார் நாயகி தன்யா ரவிச்சந்திரன். இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்கின்றனர். இதனால் இருவருக்கும் காதல் உண்டாகிறது.
இந்த சூழலில், அந்த ஊருக்கு இன்ஸ்பெக்டராக வருகிறார் சுஜித் சங்கர். சிறு வயதில் தனது தாய், தந்தையரின் சண்டையை நேரில் பார்த்து வளர்ந்த சுஜித், சைக்கோ மன நிலையிலேயே வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில், அர்ஜூன் தாஸ் மற்றும் தன்யா இருவரும் காதலிப்பதை தெரிந்து கொண்டு தனக்குள் கோபத்தை வளர்த்துக் கொண்டே அவர்கள் காதலை பிரித்து அர்ஜூன்தாஸை பழிவாங்க நினைக்கிறார் சுஜித்.அர்ஜூன் தாஸுக்கும் சுஜித்திற்கும் இடையே இருக்கும் பகை தான் என்ன.? ஏன் அர்ஜூன்தாஸைபழிவாங்க துடிக்கிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.
அர்ஜூன் தாஸ். இயற்கை நேசிப்பவராக வந்து பல இடங்களில் அவர் பேசும் வசனங்கள் திரையரங்குகளில் கைதட்டல் சத்தத்தை கேட்க முடிகிறது. கண்களாலும், குரலாலும் மிரள வைக்கும் நடிப்பை கோடுத்து அசத்தியிருக்கிறார்.மனதில் நிற்கும்படி சிறப்பாக நடித்திருக்கிறார் தன்யா ரவிச்சந்திரன்.முதல் படத்திலேயே புதுமுகமா என்று கேட்குமளவுக்குமிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்த்தியிருக்கிறார் ரேஷ்மா வெங்கடேஷ். பரதநாட்டியம் நடனத்தில் ஆரம்பித்து, அர்ஜூன் தாஸுடனான காதல், திருமணத்திற்கு பின்னுடனான நடிப்பு என பல கோணங்களில் அசர வைக்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ரேஷ்மா. சினிமாவில் நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார்
வில்லனாக தோன்றி மிரட்டியிருக்கிறார் சுஜித் சங்கர். அவரது பார்வையும் உடல் மொழியும் படம் பார்ப்பவர்களை பயமுறுத்தும் அளவிற்கு கதாபத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார் சுஜித்.
மற்றும் இதில் நடித்த ரிஷிகாந்த், ரம்யா, ஜி எம் சுந்தர் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். சரவணன் இளவரசின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். தமனின் இசை அருமை.
இயக்குனர் சாந்தகுமார் அழகான காதல் கதையில் சின்ன பென்ஸ் வைத்து எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள்.