ஏர் இந்தியா இந்திய கிளாசிக்கல் மற்றும் நாட்டுப்புற நடன வடிவ கலைகளைக் கொண்டாடும் வகையில் விமான பயண பாதுகாப்பு குறித்த புதிய இன்ஃப்லைட் பாதுகாப்பு வீடியோவை அறிமுகப்படுத்துகிறது!

ஏர் இந்தியா இந்திய கிளாசிக்கல் மற்றும் நாட்டுப்புற நடன வடிவ கலைகளைக் கொண்டாடும் வகையில் விமான பயண பாதுகாப்பு குறித்த புதிய இன்ஃப்லைட் பாதுகாப்பு வீடியோவை அறிமுகப்படுத்துகிறது!

* தமிழ் நாட்டின் செறிவுமிக்க பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த விமான பயணத்தின் போது விமானத்தில் பார்க்கும் வகையிலான பயண பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு காணொலி அமைந்திருக்கிறது.

இந்தியாவின் உலகளாவிய விமான சேவையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான ஏர் இந்தியா, விமானப் பயணத்தின் போது பயணிகளுக்குக் காட்டப்படும் பாதுகாப்பான பயணம் குறித்த புதிய விழிப்புணர்வு காணொலியை ’சேஃப்டி முத்ராஸ்’ [‘Safety Mudras’] என்ற பெயரில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் துடிப்புமிக்க கலாச்சாரத்தின் செழுமையான மரபுகளுடன், பாதுகாப்பு வழிமுறைகளையும் அழகுற கலந்து இந்த புதிய விமானப் பயண பாதுகாப்பு வீடியோவான வெளியிடப்படுள்ளது. இந்த வீடியோவில் பிரதானமாக பரதநாட்டியம் இடம்பெற்றுள்ளது, மேலும், திராவிடக் கோயில்களின் கட்டிடக்கலை அற்புதங்களுக்கு, மனம் மயக்கும் நடனத்தை அழகியலுடன் கலந்து தமிழ்நாடு மாநிலத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டிய சாஸ்திரத்தில் வேரூன்றியிருக்கும் நடனக்கலையான பரதநாட்டியம், சீட்பெல்ட் மற்றும் கேபின் பேக்கேஜ் வழிமுறைகளை அழகியலுடன் தெரிவிப்பதற்கான ஒரு ஊடகமாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது இது தமிழ்நாட்டின் பழங்கால கலைத்திறனுக்கு கெளரவமளிக்கும் வகையிலான ஒரு முயற்சியாகும். இந்த கலைநயமிக்க நடனத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில், நடனத்துறையின் முன்னணி நட்சத்திரங்களான மெக் கான் வேர்ல்ட் க்ரூப்பின் ப்ரசூன் ஜோஷி [Prasoon Joshi, McCann Worldgroup] மற்றும் ஷங்கர் மகாதேவன், பரத்பாலா ஆகியோரின் திறமைகளை ஒருங்கிணைத்திருப்பதன் மூஅம் இந்தியாவின் உள்ளூர் நடனக்கலைஞர்கள் வித்யா அரசு, ருதுஜா மார்னே, மாளவிலி, வர்ஷினி கோபிநாத், சுகன்யா எஸ், மைத்ரேயி முகுந்தன், நிவேதா, அபிநயா, காவியா, கலைச்செல்வி, ஸ்ரீலேகா ஆகியோர் தங்கள் திறமையை மிக அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த காணொலி விமானப் பயணம் குறித்த பாதுகாப்பு வழிக்காட்டுதல்களுடன், இந்தியா முழுவதிலும் இருந்து பிரபலமாக இருக்கும் பிஹு, கதக், கதகளி, மோகினியாட்டம், ஒடிசி, கூமர் மற்றும் கித்தா [Bihu, Kathak, Kathakali, Mohiniyattam, Odissi, Ghoomar, Giddha] என ஏழு நடன வடிவங்களையும் ஒருங்கிணைக்கிறது – இவற்றில் ஒவ்வொரு பிரத்யேக நடன வடிவமும் ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பு வழிக்காட்டுதலை வெளிப்படுத்துகிறது. மேலும் இவை முக்கிய தகவல்களை பயணிகள் ரசித்து பார்க்கும் வகையில் கலாச்சார ரீதியாகவும் வழங்குகின்றன.

ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி & நிர்வாக இயக்குநர், திரு. காம்ப்பெல் வில்சன் [Campbell Wilson, CEO & MD, Air India] கூறுகையில், “இந்தியாவின் தனித்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் நிறுவனமாகவும், இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தின் நீண்டகால புரவலராகவும் திகழும் ஏர் இந்தியா நிறுவனம், மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிக்காட்டுதல்களை வழங்கும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கலைப் படைப்பை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது. உலகெங்கிலும் உள்ள பயணிகளுக்கு இந்தியாவின் வளமான கலாச்சார பன்முகத்தன்மையை எடுத்துரைக்கும் வகையில் இது அமைந்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.. எங்களது விருந்தினர்களுக்கு விமானப் பயணத்தின் போது இந்த இன்ஃப்ளைட் பாதுகாப்பு வீடியோ ஆழமிக்க கருத்துகளையும், முக்கிய தகவல்களையும் பகிர்ந்து கொள்வதாக இருக்கும். மேலும் விருந்தினர்கள் விமானத்தில் இறங்கும் தருணத்திலிருந்து இந்தியாவிற்குள் அடியெடுத்து வைப்பதிலிருந்து அன்புடன் வரவேற்போம்’’ என்றார்.

கிராமி விருது பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான ஷங்கர் மகாதேவன் இசையமைத்துள்ள இந்த வீடியோ, இந்தியாவின் தனித்துவத்தை படம்பிடிக்கும் வகையில் மனதை மயக்கும் இடங்களில், ஆறு மாதங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. இந்த காணொலி பாதுகாப்பு வழிக்காட்டுதல்களையும், நம்முடைய கலாச்சாரத்தையும் மிகச்சரியான விகித்தத்தில் இணைத்து எடுக்கப்பட்டுள்ளது.

அதிநவீன இன் – ஃப்ளைட் பொழுதுபோக்கு அம்சங்களை கண்டுகளிப்பதற்கான திரைகளைக் கொண்டிருக்கும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஏர் இந்தியாவின் A350 விமானத்தில், இந்த விமானப் பயண பாதுகாப்பு குறித்த வீடியோவை முதலில் கண்டுகளிக்க முடியும், ஏர் இந்தியாவின் விமான சேவையில் இடம்பெற்றிருக்கும் இதர விமானங்களில் இது வரும் நாட்களில் இடம்பெறும்.

ஏர் இந்தியாவின் புதிய விமானப் பயண பாதுகாப்பு வழிக்காட்டுதல் வீடியோவை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்: https://bit.ly/AirIndiaSafetyVideo

“விமானப் பயணிகளை ஆர்வத்துடன் பார்க்க வைப்பதை தக்க வைக்க வேண்டுமென்ற சவாலுடன், இந்திய கலாச்சாரத்தை உள்ளடக்கியதாகவும், ஏர் இந்தியா பிராண்டை உலகளவில் உயர்த்தும் ஒரு கருத்தையும் உருவாக்குவதற்கான நோக்கத்துடன் பணிபுரிந்தோம். இதன் அடிப்படையில் நாங்கள் அத்தியாவசியமான தகவல்களையும், கலைகளின் உத்வேகத்தையும் இணைத்து உருவாக்க அதிக முயற்சி செய்தோம். இந்திய பாரம்பரிய நடன வடிவங்கள், ஒரு தனித்துவமான பரிமாணத்தைக் கொண்டுள்ளன – அது ‘கதைசொல்லல்’. இந்த அம்சம்தான் என்னை விமானப் பயணத்திற்கான பாதுகாப்பு வழிமுறைகளை வழங்குவதற்கு இந்த இந்திய நடன வடிவங்களைப் பயன்படுத்துவதற்கான யோசனையை என்னைச் சிந்திக்க வைத்தது.;’’; என்கிறார்

மேலும் அவர் கூறுகையில், ‘’இந்த யோசனை அற்புதமான ஏர் இந்தியா குழுவின் எண்ணத்துடன் இசைந்துப் போனது என்னுடைய அதிர்ஷ்டம். மேலும், இந்த எண்ணத்தை உண்மையில் சாத்தியமாக்கியவர் எனது நீண்டகால நண்பரும் புத்திசாலித்தனமான யோசிப்பவருமான பரத்பாலா. ஏர் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவது மெக்கானுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்.’’ என்றார்.

சங்கர் மகாதேவன், புகழ்பெற்ற இந்திய இசையமைப்பாளர் மற்றும் பாடகர் [Shankar Mahadevan, celebrated Indian music composer and singer]:

“ஏர் இந்தியாவுக்கான விமான பயணப் பாதுகாப்பு வழிக்காட்டுதல் வீடியோவுக்கான இசையை உருவாக்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏர் இந்தியாவின் புதிய அத்தியாயத்துடன், அவர்களின் பாதுகாப்பு வழிக்காட்டுதல் வீடியோவும்