எம்.ஜி.ஆர் ரசிகன்” பட பூஜை விழா.

எம்.ஜி.ஆர் ரசிகன்” பட பூஜை விழா.

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் 107வது பிறந்த நாளில் சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமுக சேவை மைய நிறுவனர், தலைவர் கோபி காந்தி ஐந்தாவதாக நடிக்கும் திரைப்படம் “எம்.ஜி.ஆர் ரசிகன்” பட பூஜை விழா.

சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமுக சேவை மைய நிறுவனர், தலைவர் கோபி காந்தி ஆர்.எஸ்.ஜி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்து நடிக்கும் ஐந்தாவது படம் “எம்.ஜி.ஆர் ரசிகன்”. முதல் முறையாக இப்படத்தை கோபி காந்தி இயக்கவுள்ளார். படத்தின் பூஜை விழா தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் 107வது பிறந்த நாளில் சிறப்பாக நடைப்பெற்றது. படம் குறித்து கோபி காந்தி கூறியதாவது. படம் முழுவதும் எம் ஜி.ஆரின் தீவிர ரசிகராக நடிக்க உள்ளேன். அதற்காக

ஐந்தாயிரம் எம்.ஜி.ஆர் ரசிகர்களை சந்தித்து அவர்களிடம் உள்ள குணநலன்களை கேட்டறிந்து கதை எழுதி, திரைக்கதை அமைத்துள்ளேன். இன்றைய காலத்தில் எம்.ஜி.ஆர் ரசிகராக இருக்கும் ஒரு இளைஞன் எப்படி இருப்பான் என்பதை பொழுதுபோக்காகவும், சமூக சிந்தனையுடனும் சொல்ல உள்ளேன். அனைவருக்கும் பிடிக்கும் விதமாக படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளேன். கதாபத்திரத்திற்கு ஏற்ற நடிகர்களை தேர்வு செய்து வருகிறேன், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களையும் பணியாற்ற முயற்சி செய்கிறேன். ஒளிப்பதிவாளராக குமரன் ஜீ, எடிட்டராக கோகுல் கிருஷ்ணாா ஆகியோர் பணிபுரிகின்றனர்.

இவ்வாறு திரைப்பட பூஜை விழாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், இயக்குனர், கதாசிரியர், நடிகர் கோபி காந்தி கூறினார். விழாவில் படத்தில் பணியாற்ற உள்ள நடிகர், நடிகையர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் டிசைனர் வெங்கட், மக்கள் தொடர்பாளர் அஸ்வத் சரவணன், தயாரிப்பு மேலாளர் சக்தி சரவணன், திரைப்பட பைனான்சியர்கள் புதுச்சேரி வடிவேல், கேரளா குமார் மற்றும் சென்னை, வட ஆற்காடு, தென் ஆற்காடு, மதுரை, சேலம், திருச்சி, கோவை, நெல்லை திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் கோபி காந்தி மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.