Mission chapter one பட விமர்சனம்
லைக்கா வெளியீட்டில், ஏ.எல். விஜய் இயக்கத்தில், சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் மிஷன் சாப்டர் 1
.
மிஷன் சாப்டர் 1 கதை: அருண் விஜய் மகளுக்கு உடம்பில் ஒரு மிகப்பெரிய பாதிப்பு. அதை சரி செய்ய பணம் தேவைப்படும் நிலையில், ஹவாலா மூலம் பணத்தை அடைய நினைக்கிறார் அருண் விஜய். அந்த பணத்தை திருட நடக்கும் முயற்சியில் வெளிநாட்டில் போலீஸாரை அடித்து விடுகிறார் அருண் விஜய். இதன் விளைவாக வெளிநாட்டில் உள்ள சிறைக்கு செல்கிறார்.
அங்கே இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகள், சிறையில் இருக்கும் சில தீவிரவாதிகளை மீட்க முயற்சிக்க, அந்த சிறை முயற்சியை தடுக்க போராடும் எமி ஜாக்சனுக்கு துணையாக நிற்கிறார் அருண் விஜய். கடைசியில் தீவிரவாதிகளின் சதியை முடித்தாரா? தனது மகளை காப்பாற்றினாரா என்பது தான் மீதிக்கதை.
படம் முழுக்க ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லை.சில்வா மாஸ்டரின் சண்டை காட்சிகள் சிறப்பு. அருண் விஜய் யும்- எமி ஜாக்சனும் சண்டைக் காட்சிகளில் சிறப்பாக ஆக்ஷன் காட்டியுள்ளனர். நிமிஷா சஜயன்
ஓரளவுக்கு நடித்திருக்கிறார்.ஆனால் வில்லனுக்கு தான் சரியான அளவுக்கு பொருத்தமாக இல்லை. அதேபோல் கேப்டன் மில்லரில் இருந்த ஜிவி பிரகாஷ் இசை, இப்படத்தில் இல்லை என்பது சற்று வருத்தமான விஷயம் தான். மொத்தத்தில் மிஷன் சாப்டர் ஒன் பாதி வெற்றி.