நம்பிக்கைக்குரிய மற்றும் பாராட்டுக்குரிய படங்களை தயாரித்து பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது

‘பிக் பாஸ்’ புகழ் பூர்ணிமா ரவி நடிப்பில், எம்.எஸ். ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘செ வப்பி- ஆஹா ஒரிஜினல்’ ஜனவரி 12, 2024 அன்று ப்ரீமியர் ஆகிறது!

நம்பிக்கைக்குரிய மற்றும் பாராட்டுக்குரிய படங்களை தயாரித்து பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது ஆஹா தமிழ். அந்த வரிசையில், இப்போது அவர்கள் ‘செவப்பி’ என் ற படத்துடன் பார்வையாளர்களை மீண்டும் கவர தயாராக உள்ளனர்.

ராஜேஷ்வர் காளி சாமி மற்றும் பிரசன்னா பாலச்சந்திரன் ஆகியோர் தயாரித்திருக்க, எ ம். எஸ். ராஜா இந்த ஃபீல் குட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.

குமரன் என்ற 5 வயது சி றுவனுடைய கதா பாத்திரமும், அவனது அம்மாவாக நடித்திருக்கு ம் ‘பிக் பாஸ்’ புகழ் பூர் ணி மா ரவியின் கதா பாத்திரமும் முதன்மையானது. பிரபல தமிழ் கலைஞரான ரிஷி கா ந்த் சிறுவனின் தாய் மாமாவாக நடித்துள்ளார்.

1990 களில் தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் ஒரு ஐந்து வயது சிறுவனை சு ற்றி நடக்கும் நிகழ்வுகள் தான் இந்த செவப்பி யின் கதை. அச்சிறுவன் ஒரு கோழியை நே சத்தோடு வளர்க்கிறான். ஒரு தந்தை தன் குழந்தைகள் மீது காட்டும் அதீத அன்பை போல அந்தக் கோழியை பாதுகாப்போடும் நேசத்தோடும் அச்சிறுவன் வளர்க்கிறான். பாசப்பி ணைப்பு ஒரு கட்டத்தில் பிரிய நேரிடுகிறது இதனால் இரு தரப்பினர்கள் ஒன்றாக ஒற்று மையாக சேர்ந்து வாழும் அந்த கிராமம் இரண்டாகப் பிரிந்து மோதிக்கொள்கிறது. இறுதி யில் அந்தச் சிறுவனும் கோழியும் ஒன்று சேர்ந்தார்களா? கிராம மக்கள் ஒன்று சேர்ந் தார் களா? என்பதுதான் “செவப்பி”யின் கதை.

கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள மத்திபாளையம் என்ற கிராமத்தில் மு ழு கதையும் வெறும் 27 நாட்களில் படமாக்கப்பட்டது. ப்ரீ புரொடக்‌ஷன் கட்டத்தில், பல கி ராமவாசிகள் நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருப்பதை இயக்குநர் ராஜாவும் அவரது கு ழுவினரும் கண்டுபிடித்தனர். கிராமவாசிகள் ஆசையை நிறைவேற்றவும் கதையின் உ ண்மைத் தன்மைக்காகவும் அவர்களுக்கும் நடிக்க வாய்ப்பளித்துள்ளது ‘செவப்பி’.

‘செவப்பி’ ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஜனவரி 12, 2024 அன்று பொங்கல் பண்டிகைக்கு ப்ரீமியர் ஆகிறது.

நடிகர்கள்

பூர்ணிமா ரவி, ரிஷிகாந்த், ராஜாமணி பாட்டி, ஷ்ரவன் அத்வேதன், டில்லி, செபாஸ்டியன் ஆண்டனி .

தொழில்நுட்ப குழு

ஒளிப்பதிவு – மனோகரன் எம், எடிட்டிங் & விஎஃப்எக்ஸ் – வச்சு லட்சுமி, இசை – ஏ.பிரவீன் குமார், ஒலி வடிவமைப்பு – ஷெஃபின் மாயன், கலை – ஆசை தம்பி,, ஆக்‌ஷன் , கோரியோ கிராஃபி – அபிஷேக் ஸ்ரீனிவாஸ், விளம்பர வடிவமைப்பு – ராகவன், நிர்வாகத் தயாரிப்பா ளர் – எஸ்.வினோத்குமார்.