இலங்கையில் நிலைமை தொடர்ந்து முன்னேற்றமடைந்து வருவதால், மாஸ்டர்கார்டு‘

இலங்கையில் நிலைமை தொடர்ந்து முன்னேற்றமடைந்து வருவதால், மாஸ்டர்கார்டு‘

மாஸ்டர்கார்டின்‘அன்புடன்இலங்கை  விளம்பர முன்னெடுப்பானதுபல்வேறு வெகுமதி கள் மற்றும் அனுபவங்களை வழங்கி இந்திய சுற்றுலாப் பயணிகளை அந்நாட்டிற்கு சுற் றுலாசெல்ல ஊக்குவிக்கிறது

  மாஸ்டர்கார்டு வைத்திருப்பவர்கள் ஒப்பற்ற சலுகைகள், தள்ளுபடிகள், மற்றும் அனுபவ ங்களை தங்களதுஇலங்கை பயணங்களின் போது பெற்று மகிழலாம்

19 அக்டோபர் 2022, புதுடெல்லி:இலங்கையில் நிலைமை தொடர்ந்து முன்னேற்றமடைந்து வருவதால், மாஸ்டர்கார்டு‘அன்புடன்இலங்கை என்கிறவிளம்பர முன்னெடுப்பை இன்று துவங்கியுள்ளது.இதன்மூலம், இந்த அழகிய தீவு தேசம் வழங்கும் பரந்த அளவிலான மற க்க முடியாத அனுபவங்களைப் பெற இந்திய சுற்றுலாப் பயணிகளைஅங்கு சுற்றுலா செ ல்ல ஊக்குவிக்கிறது. இந்த விளம்பரப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இந்திய சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாக இலங்கையை உருவாக்குவதற்காக ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்கள் போன்ற 50-க்கும் மேற் பட்ட வணிகப் கூட்டாளர்களுடன்மாஸ்டர்கார்டு இணைந்துள்ளது. மாஸ்டர்கார்டின் சி றப்பு வலைதளமான ப்ரைஸ்லெஸ் ஸ்பெஷல்ஸில், இலங்கைசுற்றுலா செல்லத் திட்டமி ட்டுள்ள மாஸ்டர் கார்டு வைத்திருப்போர் பல்வேறு ஆதாயங்களை வழங்கும் தொகுப்பு சலுகைகளைப் பெறலாம்.

பல நாடுகள் சுற்றுலா பயணிகளுக்கான தங்கள் பயண விதிமுறைகளைத் தளர்த்தியு ள் ளதால், சுற்றுலா செல்ல உகந்த இடமாகஇலங்கையைக் கருதும் நம்பிக்கை சுற்றுலா ப ய ணிகளின் மத்தியில் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பண்டிகைக் காலத்தின் தொடக்கம், மேம்பட்ட சமூகப் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் சாதகமான நாணய பரிமாற்று விகிதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்த்தால் – இலங்கையின் அமை தியான நிலப்பரப்புகள், சூரிய ஒளியில் நனையும் கடற்கரைகள், வனவிலங்குகள், சாகச விளையாட்டுகள், தனித்துவமான உணவுகள் மற்றும் உலகின் தொன்மையான நகரங்க ள் சிலவற்றிற்கு ஆன்மீக யாத்திரை செல்லுதல் என பல காரணங்களுக்காகஇந்தியப் பய ணிகளுக்கு இந்நாடு சரியான விடுமுறை சுற்றுலாத் தலமாகமாறியுள்ளது.

இலங்கையின் மாண்புமிகு. சுற்றுலாத்துறை அமைச்சர், திரு.ஹரின் பெர்னாண்டோ,  அ வர்கள் கூறுகையில்,“தனித்துவமான அனுபவங்கள், கலாச்சார ஒற்றுமை, அருகாமை ம ற்றும் ஏற்புடைய விலைவாசி ஆகியவற்றின் சரியானகலவையாக இருப்பதால், இந்தியப் பயணிகளுக்கு மிகவும் விருப்பமான சர்வதேச சுற்றுலாத் தலமாக இலங்கை உள்ளது. இத ற்கு மேல், மாஸ்டர்கார்டின் ‘ஸ்ரீ லங்கா வித் லவ்’ விளம்பர முன்னெடுப்பானது, இந்திய சுற் றுலாப் பயணிகள் அவர்களது பயணத்தின் போது மேற்கொள்ளும் செலவுகளுக்கு ஈடாக மேலும் அதிக மதிப்புள்ள ஆதாயங்களை வழங்கவுள்ளது. பாதுகாப்பானம ற்றும்கட்டுப் படியாகக் கூடியசுற்றுலாத்தலமாக இலங்கையின் மீதுள்ளநம்பகத்தன்மையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு இந்த கூட்டணிபெரிதளவில் நீண்ட காலத்திற்குஉதவுமென நாங்க ள் நம்புகிறோம்,” என்று தெரிவித்தார்.

மாஸ்டர்கார்டு நிறுவனத்தின், தெற்கு ஆசிய, தலைமை ஆப்பரேட்டிங் அலுவலர், திரு. வி காஸ் வர்மா அவர்கள் கூறியதாவது, “இலங்கை வழங்கும் அசல் மற்றும் பன்முகத்தன் மை கொண்ட  அனுபவங்கள் இத்தீவு நாட்டை மிகவும் விரும்பத்தக்க விடுமுறை சுற்றுலா தல ங்களுள் ஒன்றாக உருவாக்கியுள்ளன. 2022, ஜனவரி முதல் செப்டம்பர் வரை, இலங்கைக்கு சுற்றுலாவந்த  அனைத்து சர்வதேச பயணிகளில் 16 சதவீதத்திற்கும் அதிகமானோர் இ ந் தி யப் பயணிகளாகஉள்ளனர். மேலும், இலங்கையில் சமூகப் பொருளாதார நிலைமை க ள் மேம்பட்டுவருவதால், மாஸ்டர்கார்டு நிறுவனம்இந்தியாவில் உள்ள மாஸ்டர்கார்டு வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு அர்த்தமுள்ள வெகுமதிகள் மற்றும் அனுபவங்களை வழங்கும் சலுகைகளை அளித்து, அவர்கள் மீண்டும் இலங்கைக்கு பயணிக்க, அல்லது முதல் தடவை சுற்றுலா செல்லவும் ஊக்குவிக்கிறது.”

2018-ஆம் ஆண்டு முதல், மாஸ்டர்கார்டு நிறுவனம் இலங்கையின் சுற்றுலா ஊக்குவிப்பு அமைப்பானSLTPB-யுடன்இணைந்துசெயல்பட்டு வருகிறது;இலங்கையின்முக்கிய வரு வாய் ஆதாரசந்தைகளில் அந்நாட்டை ஒரு விருப்பமான சுற்றுலா தலமாகமேம்படுத்த கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ‘ப்ரைஸ்லெஸ் சிட்டிஸ்’ என்பதுமா ஸ்ட ர்கார்டு அட்டைதாரர்களுக்கு பிரத்தியேக அனுபவங்களை வழங்கும் சுற்றுலாதல ங்க ளின் கவனமாகத் தொகுக்கப்பட்ட பட்டியலாகும். மரியாதைக்குரியதாக கருதப்படும் இந்தவிலைமதிப்பில்லா நகரங்களுக்கான பட்டியலில், ஜனவரி 2020-இல் தெற்காசி யா விலேயே முதல் இடமாக இலங்கை சேர்ந்தது.கோவிட்-19-க்குப் பிந்தைய இலங்கையின் சுற்றுலாத் துறையின் மறுமலர்ச்சியை ஆதரிப்பதற்காக மாஸ்டர்கார்டின் சுற்றுலா நு ண்ணறிவு தளம் மற்றும் ஆலோசனைச் சேவைகளை எவ்வித கட்டணமும் இன்றி அந் நாட்டு அரசாங்கத்திற்கு வழங்க 2020 டிசம்பரில், மாஸ்டர்கார்டு, SLTPB அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டதும்குறிப்பிடத்தக்கது.

(முற்றும்)

About Mastercard (NYSE: MA), www.mastercard.com

Mastercard is a global technology company in the payments industry. Its mission is to connect and power an incl usive, digital economy that benefits everyone, everywhere by making transactions safe, simple, smart, and acc essible. Using secure data and networks, partnerships and passion, its innovations and solutions help individuals, financial institutions, governments, and businesses realize their greatest potential. Its decency quotient, or DQ, drives its culture and everything it does inside and outside of the company. With connections across more than 210 countries and territories, it is building a sustainable world that unlocks priceless possibilities for all.