நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான “தசரா” திரைப்படம் 2023 மார்ச் 30

நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான “தசரா” திரைப்படம் 2023 மார்ச் 30

நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான “தசரா” திரைப்படம் 2023 மார்ச் 30 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது !!!

தொடர் வெற்றிப்படங்களை தந்து வரும், நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், முதல் பான் இ ந்திய திரைப்படமாக உருவாகிறது ‘தசரா’ திரைப்படம். ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சி னிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி இப்படத்தை தயாரிக்கி றார் கள். அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்குகிறார்.

நேச்சுரல் ஸ்டார் நானி, தனது வழக்கமான பாணியிலிருந்து நவ நாகரீக தோற்றத்திலி ருந்தும் முற்றிலுமாக மாறி முதல் முறையாக முழுக்க முழுக்க மாறி, ஒரு கிராமிய கேர க்டரில் கரடுமுரடான தோற்றத்தில் நடிக்கிறார். இந்த கேரக்டரில் நடிப்பதற்காக அவர் நிறைய பயிற்சி எடுத்து தன்னை முழுமையாக கிராமத்து மனிதனாக மாற்றிக்கொ ண் டுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோவில் அவரது தெலுங்கானா பேச்சுவழக் குமொ ழி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. படம் முழுக்க அவர் மாஸ் டயலாக்குகளைப் பேசுவதைப் பார்ப்பதே ஒரு விருந்தாக இருக்கும். ஸ்பார்க் ஆஃப் தசரா க்ளிம்ப்ஸுக்கும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடதக்கது.

தயாரிப்பாளர்கள், ரசிகர்களின் ஆர்வத்தை கூட்டும் வித மாக தற்போது ஒரு பெரிய அறி விப்பை தந்துள்ளனர். ஸ்ரீ ராம நவமி கொண்டாட்ட வெளியீடாக, 4 நாட்கள் நீண்ட வா ர வி டுமுறையை ஒட்டி “தசரா” திரைப்படம் 30 மார்ச் 2023 அ ன்று உலகம் முழுவதும் திரை யரங் குகளில் வெளியா கி றது. எல்லா மொழிகளிலும் படம் வெளியாவதற்கு இது ச ரியான தே தியாக இருக்கும்.

பட வெளியீடு குறித்த அறிவிப்பு போஸ்டரில் நாயகன் தூசி படிந்த கைலி சட்டையுடன் நா னி அதிரடியான கிராமத்து லுக்கில் அசத்தலாக இருக்கிறார். அவரது ஹேர் ஸ்டைலும், கையில் இருக்கும் மதுபான பாட்டில்களும் அவரது முரட்டு த்தனத்தைக் கூட்டி அவரது க தாப்பாத்திரத்தை வெளி ப்ப டுத்துவதாக அமைந்துள்ளது. பின்னணியில், நகங்களைக் கடிக்கும் சில்க் ஸ்மிதாவின் உருவப்படத்தையும் நாம் போஸ்டரில் காணலாம்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. படத்தின் முன்னணி நடிகர்கள் அனைவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள். இப்பட த் தில் நானிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

படத்தின் கதை பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரிகானியில் (தெலுங்கானா) சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடப்பதாக அமைக்க ப்பட்டுள்ளது. முதல் முறையாக இப்படத்தில் இதுவரையிலும் பார்த்திராத புதுமையான பார்த்திரத்தில் நானி நடிக்கிறார்.

சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்பட த்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத் திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தில் நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல் லா தயாரிப்பு வடிவமைப் பா ளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.“தசரா” திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற் றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

நடிகர்கள் :

நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சாய் குமார், ஜரீனா வஹாப் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:

இயக்கம் – ஸ்ரீகாந்த் ஒதெலா , தயாரிப்பு – சுதாகர் செருக்குரி  , தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீ ல க்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் , ஒளிப்பதிவு – சத்யன் சூரியன் ISC , இசை – சந்தோஷ் நாராயணன் , எடிட்டர் – நவின் நூலி , தயா ரிப்பு வடிவமைப்பாளர் – அவினாஷ் கொல்லா
நிர்வாகத் தயாரிப்பாளர் – விஜய் சாகந்தி  சண்டைப்பயிற்சி – அன்பறிவு  மக்கள் தொடர்பு – வம்சி-சேகர், சதீஷ்குமார் (AIM).