மேதகு-2 திரைப்பட விமர்சனம்
நடிகர், நடிகைகள்-;
நாசர் , குட்டி மணி , ஈஸ்வர் பாஷா , வினோத் சாகர் , லிஸ்சி ஆன்டனி , சந்திரசேகர் , ராஜா , ரிந்து ரவி ,அரங்கநாதன் , ஆண்டோ சிரியத் , மதுனிகா , விஜய் சவுந்தர் , ஆனந்தன் , இமா னு வேல் , ஆனந்த் சவுந்தராஜன் , சதிஸ் , அஜய் ஆல்வின் , ராஜவேல் பெருமாள் மற்றும் ப லர் .நடிதுள்ளார்கள் .
தொழில்நுட்ப கலைஞர்கள்-;
இயக்கம் – இரா.கோ யோகேந்திரன் தி. கிட்டு , தயாரிப்பு நிறுவனம் – தயாரிப்பு மேதகு தி ரைக்களம் , தயாரிப்பு நிர்வாகிகள் – சி.குமார், தஞ்சை & சுமேசு குமார், டென்மார்க் , த யா ரிப்பு நிர்வாக உதவி – தங்க பிரபாகரன், சதீசு குமார், ஈஸ்வர் பாட்ஷா , கதை – கிட்டு, முத்து , செழியன், திருக்குமரன் , இசை -பிரவீன் குமார் , ஒளிப்பதிவு – வினோத் ராஜேந்திரன் , ப டத்தொகுப்பு – படத்தொகுப்பு ஆதித்யா முத்தமிழ் மாறன் (குவியம் ஸ்டுடியோ) , தயாரி ப்பு – தமிழ் ஈழ திரைக்களம் , கலை இயக்குனர் – இன்ப தினேஷ், சண்டை பயிற்சி ஜாக்கு வார் தங்கம் மற்றும் அவரது மகன் விஜய் ஜாக்குவார் தங்கம் , பாடகர்கள் – சைந்தவி, புது வை சித்தன், ஜெயமூர்த்தி என , விநியோகம் – பிஎஸ் வேல்யூ (ஓ.டி.டி தளம்) , மக்கள் தொட ர்பு – கே.எஸ். கே .செல்வகுமார் , மற்றும் பலர் பண்ணியாடிற்றினார் .
திரை கதை-;
கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உரு வான மேதகு படம் வெளியானது. தற்போது, அதன் இரண்டாம் பாகமாக, மேதகு திரைக்க ளம் சார்பில் தயாரிப்பாளர்களே இல்லாமல் ‘மேதகு-2’ படம் தயாராகியுள்ளது. தஞ்சாவூ ரை சேர்ந்த தஞ்சை குகன் குமார், அயர்லாந்தில் உள்ள கவிஞர் திருக்குமரன் மற்றும் டெ ன் மா ர்க்கை சேர்ந்த சுமேஷ் குமார் ஆகியோர் இதன் தயாரிப்பு நிர்வாகிகளாக செயல் பட்டு இந்த படத்தை தயாரித்துள்ளனர். கதாநாயகனாக தமிழீழ தலைவர் கதாபாத்தி ரத் தில் கௌரிசங்கர் நடித்துள்ளார். கௌரவத் தோற்றத்தில் நாசர் நடித்துள்ளார். இரா.கோ யோகேந்திரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதை மற்றும் வரலாற் று ஆய்வில் மேதகு திரைக்கள குழுவினருடன் சுபன் முன்னின்று உதவி புரிந்துள்ளார்.
இ சையமைப்பாளர் பிரவின் குமார், ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன், படத்தொ குப்பு ஆதித்யா முத்தமிழ் மாறன் (குவியம் ஸ்டுடியோ) கலை இயக்குனர் இன்ப தினேஷ், சண்டை பயிற்சி ஜாக்குவார் தங்கம் மற்றும் அவரது மகன் விஜய் ஜாக்குவார் தங்கம், பா டகர்கள் சைந்தவி, புதுவை சித்தன் ஜெயமூர்த்தி என இந்தப்படத்தின் தொழில்நுட்பகுழு வும் மிகப்பெரிய பங்களிப்பை இந்தப்படத்திற்காக வழங்கியுள்ளனர். வரும் ஆக ஸ்ட்-19 ஆம் தேதி இந்த படம் வெளிநாட்டு திரையரங்குகளில் உலகெங்கிலும் வெளியாக இருக்கி றது. இப்போதே ஐரோப்பா நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா ஆகியவற்றில் முன்பதிவு துவங்கியுள்ளது. யேட்டர்களில் படம் வெளியான சில நாட்களிலேயே தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் (www.tamilsott.com) இந்த படம் வெளியாக இருப்பதால், படத்தை திரையிட முடியாத இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் அரபு நாடுகள் ஆகியவற்றில் உள்ள மக்களும் இந்தப்படத்தை பார்க்க முடியும்.
இந்த திரைப்படம் தமிழ் இனத்தை அடக்குவதற்காக தமிழீழத்தில் நடந்த உண்மையான நிகழ்வுகளைக் காட்டுகிறது, மேலும் இது இந்தியப் பெருங்கடல் தீவு நாடான (இலங்கை யில்) சிறீலங்காவில் தமிழ் விடுதலைப் போராட்டத்தில் எப்படி, ஏன் தோன்றியது என்பது பற்றி பேசுகிறது. புகழ்பெற்ற தமிழர் தலைவர் பிரபாகரனின் எழுச்சி பற்றியும் இந்த பட ம் பேசுகிறது. மேதகு (Methagu) என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலு ப்பி ள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 2021ஆம் ஆண்டு வெளி யான இந்திய தமிழ் மொழி அரசியல் பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இப்படத்தை கிட்டு இயக்கியுள்ளார். இப்படத்தை மேதகு திரைக்களம் உலக தமிழர்கள் பேராதரவோடு த யா ரித்துள்ளது. இப்படத்திற்கான இசை பிரவீன் என்பவரால் அமைக்கபட்டுள்ளது. ஆரம்பத் தில், இந்த திரைப்படம் நவம்பர் 26, 2020 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கொரோனா பெருந்தொற்றின் காரணமாகவும், சில சிக்கல்களின் காரணமாக வும் அது ஒத்திவைக்கப்பட்டு 2021 இல் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இறு தியாக 25 சூன் 2021 அன்று மேலதிக ஊடக சேவை இயங்குதளமான ‘BS Value’ மூலம் நேரடி யாக வெளியிடப்பட்டு நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றது. இத் திரைப்படமானது தமிழீழத்தில் உண்மையாக நடந்த சம்பவங்களை அடிப்படையாகவும் அங்கு தமிழினத் தி ற்கு நடந்த துரோகங்கள் ஒடுக்குமுறைகளை கண்டு எப்படி, ஏன் தமிழீழ விடுதலைப் புலி களின் தலைவர் பிரபாகரன் அங்கு விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராட தொடங் கி னா ர் என்பதனைப் பற்றி உள்ளது. இந்த திரைப்படம் விடுதலை புலிகள் தலைவர் மேத கு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை வரலாற்றை கூறுகிறது.
இத்திரைப்படம் அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் படத்தின் கதையும் பெரும் பா லும் அ வரைச் சுற்றி வருகிறது. இலங்கையில் நடந்த அரசியல் சூழ்நிலை, சிங்கள பௌ த்த பேரி னவாதத்தின் கொடுமைகளும், யாழ்ப்பாணத்தில் நடந்த உலகதமிழாராய்ச்சி மாநாட்டி ல் நடந்த சிங்கள தாக்குதலில் 9 தமிழர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து அதற்கு உடந் தை யாக இருந்த மேயர் அல்பிரட் துரையப்பாவை தமிழ் புதிய புலிகள் என்ற அமைப்பின் பெயரில் தலைவர் பிரபாகரனும் அவர் தோழர்களும் கொலைசெய்ததை கடைசி காட்சி யாக வைத்து இப்படம் முடிக்கப்பட்டுள்ளது. ஈழ தமிழர் வாழ்க்கையில் நடக்கும் போரா ட்டங்களும் வாழ்க்கைக் கதையும் நிகழ்வுகளும் படத்தில் காட்டப்பட்டுள்ளது.
படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;
திரைப்பட விமர்சனம்-;
மேதகு திரைக்களம் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘மேத கு 2’. பட மாளிகைகளில் வெளியாகாமல் நேரடியாக தமிழ் ஓடிடி என்னும் டிஜிட்டல் த ளத் தில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களை கவருமா..? இல்லையா..? என்ப தை காண்போம். 2021ல் வெளியான ‘மேதகு’ முதல் பாகம் உலகத்தமிழர்களின் பரவலான கவனத்தைப் பெற்றதன் தொடர்ச்சியாக கிரவுட் ஃபண்டிங் மூலமாக தயாராகியிருக்கும் படம் ‘மேதகு2’. மேதகு முதல்பாகத்தில் 1950-களில் இருந்து எப்படி எல்லாம் தமிழர்கள் பிர ச்னை களை சந்தித்தார்கள், அவற்றை எப்படி துணிச்சலாக எதிர் கொண்டார்கள் என்பது பற்றி சொல்லப்பட்டி ருந்தது. இதில் தமிழீழ தலைவர் பிரபாகரனின் 21 வயது வரை யிலா ன வாழ்வியல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது.
பிரபலமான சர்வதேச தலைவர்களை பற்றிய சுயசரிதையை திரைப்படமாக உருவாக்கு ம் போது அவர்களைப் பற்றிய தகவல்கள் செயல்பாடுகள் நடவடிக்கைகள் போன்றவை செய்திகளாக அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் வெளியாகி இருக்கும். இப்படத்தில், இலங் கையில் சிங்கள அரசால் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, தமிழர்கள் படுகொ லைக்குள்ளாக்கப்பட்டபோது தமிழ் மக்களின் உரிமையை மீட்கவும், தமிர்களையும் தமிழ் பெண்களை காக்கவும் , தனி தமிழீழம் அமைக்கப்பதற்காகவும் பிரபாகரன் தமிழீழ விடு தலை புலிகள் என்ற இயக்கத்தை தொடங்கி அதில் தமிழ் இளைஞர்களை போராளிகளாக இணைத்து போர் பயிற்சி அளித்து சிங்கள அரசுக்கு எதிராக போராடியது. அதற்காக எல் டி டி ஈ இயக்கம் உருவானது எப்படி. அதன் நோக்கம் என்னவாக இருந்தது.
அதற்கு தமிழக மக்களும், சில தலைவர்களும் எப்படி ஆதரவு தெரிவித்தார்கள் போன்ற வரலாற்று சம்பவங்களை மேதகு 2 விளக்குகிறது.வேறு சிலர் அந்த தலைவரை பற்றி ஆ ய்வு செய்தும், அவருடைய கொள்கைகள், ஆளுமை திறன் குறித்து பல்வேறு கோணங்க ளில் நூல்களையும் எழுதி இருப்பார்கள். பிரபாகரன் வேடத்தில் கவுரி சங்கர் நடித்துள்ளா ர். ஏற்கக்கூடிய மிக நெருக்கமான தோற்றம். அமைதியான அதேசமயம் அழுத்தமான நடி ப்பால் மிளிர்கிறார்..புலிகளின் தியாக, வீர வரலாற்றை விவரிப்பவராக கௌரவத் தோற் றத்தில் நாசர் நடித்துள்ளார். தமிழர்களுக்கு துரோகம் இழைத்த ஒருவரை களை எடுப்ப தாகவும் அவர்களை சிங்கள அரசு தேட ஆரம்பிக்க, அவர்கள் காட்டுக்குள் தலைமறைவு ஆவதாகவும் முதல் பாகம் முடிவடைந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் அடுத்த 12 வருடகா லகட்டத்தில் என்ன நடந்தது என்பது காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
இதனை பலர் வாசித்திருக்க கூடும். இதன் காரணமாக குறிப்பிட்ட தலைவரை பற்றிய வா ழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கும் போது, திரைக்கதையில் அடுத்து என்ன? என்பதை விட, சம்பவத்தின் சுவாரசியமான பின்னணி, அதனை சாத்தியப்படுத்திய உத் தி… போன்றவற்றை விரிவாக இடம்பெற வேண்டும் என பார்வையாளர்கள் எதிர்பார்ப்பா ர்கள். போராட்ட உணர்வு கொண்ட இளைஞர்களை ஒன்று சேர்த்து தமது உரிமையை மீட் டெடுப்பதற்காக புதிய இயக்கத்தை உருவாக்குவதையும் அதற்காக அவர்கள் எதிர் கொ ள்ளும் சோதனைகள், அவர்களுக்கு ஏற்படும் உணர்வு மிக்க சம்பவங்கள், அதனால் ஏற்ப டும் இழப்புகள், தியாகங்கள், இயக்கம் உருவானது எப்படி, அதற்கு இந்தியாவில் இருந்து மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் தமிழகத்தில் இவர்களுக்கு பயிற்சி பெற எப்படி உதவியாக இருந்தார்கள் என்பதெல்லாம் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெறுகிறது.
அதிலும் ஈழ விடுதலைக்காக தன்னெழுச்சியாக நடைபெற்ற மக்கள் புரட்சியை த லை மை ஏற்று வழி நடத்திய மேதகு பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாக உருவாக்கும் போது கூடுதல் கவனத்துடன் உருவாக்க வேண்டும். உருவாக்கி யிரு க்க வேண்டும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும் படி மத்திய அமைச்சர் ஒருவர் பிரபாகரனை மிரட்டும் காட்சியும் அந்த மிரட்டலுக்கு பணி யா மல் பிரபாகரன் வீட்டுச் சிறையில் அடைக்கப்படும் காட்சியும் துணிச்சலாகப் படமா க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அன்றைய தமிழக முதல்வர் எம் ஜி ஆர் எல் டி டி ஈ அமைப்பை அழைத்து பேசி அவர்களுக்கு பண உதவி அளிக்கும் காட்சியும் , எம்ஜி யாருக்கு எதிராக கருணாநிதி காய் நகர்த்த பிரபாகரன் என்ன காரணத்தால் கருணாநி தியை சந்திக்கத் தவிர்த்தார் என்பதையும் புட்டுப்புட்டு வைத்துள்ளார்கள்.
ஆனால் ‘மேதகு 2’ படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினர், நூறு சதவீத நாடக தன் மையுடனும், ஏற்றம் பெற்றிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியை முழுமையாக பயன் படு த்திக் கொள்ளாமலும், திறமையான கலைஞர்களை இந்த படைப்பில் பங்குப்பற்ற செய் யாமலும், தங்களுக்கு கிடைத்த குறைந்தபட்ச நிதி ஆதாரம், படைப்பு சுதந்திரம், கலைஞர் கள், தொழில்நுட்ப வசதி ஆகியவற்றை வைத்துக் கொண்டு ‘மேதகு 2’ படைப்பை உருவா க்கி இருக்கிறார்கள். இதனால் இந்த திரைப்படம் எம்மாதிரியான விளைவை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலையிலிருந்து, ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால் சரிதான் என்ற எண் ணத்தில் ‘மேதகு 2’ படைப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.
1981-ஆம் ஆண்டு தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என்கிற நோக்க த்தோ டு யாழ் நூலகத்தை தீக்கிரையாக்கிய துயரமான சம்பவம், 1983- ஆம் ஆண்டு காலகட்டத் தில் இலங்கை முழுவதும் நாடளாவிய பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான இன வன்மு றை நடை பெற்ற கருப்பு ஜூலை கலவரத்தையும், அதனால் ஒன்றரை லட்சம் மக்கள் உல கெங்கும் அகதிகளாக புலம் பெயர்ந்த துயர நிகழ்வையும் இதில் பதிவு செய்துள்ளனர். மேதகு படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் வீரியம் குறைவாகவே இருக்கி ற து. இருப்பினும் உரிமை மறுக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் வலியை பதிவு செய்திருப்பதா ல் இந்த படைப்பை வரவேற்கலாம். மேதகு முதல்பாகத்துக்கே தணிக்கை சான்று கிடைக் காததால் மேதகு 2 படத்துக்கும் தணிக்கை கிடைக்கப் போவதில்லை என்று பட தரப்பு கூ றுகிறது.
ஆனாலும் இப்படம் அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக இப் ப டத்தை வெளியிடுவதற்காகவே தமிழ்ஸ் ஓடிடி (tamils OTT) என்கிற புதிய ஓடிடி தளத் தை யும் இக்குழு தொடங்கி யுள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இப்படம் வெளியாவ தற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருப்பதால் எம்மு டைய மக்கள் காண்பதற்கு ஒரு வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இருப்பினும் ‘மேதகு’ என்ற பெயரை உச்சரித்தால், கரவொலி எழுப்பும் தமிழின உணர்வு ததும்பும் ஆதரவாளர்க ளு க்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு வரப் பிரசாதம். மேதகு 2 படப்பிடிப்புக்கும் முறையான அ னுமதி கிடைக்காத நிலையில் கொரில்லா பாணியில் இதன் படப்பிடிப்பை நடத்தியதாக இயக்குனர் இரா.கோ யோகேந்திரன் தெரிவித்தார்.வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி இந்த படம் வெளிநாட்டு திரையரங்குகளில் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது.
இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரையரங்குக் சென்றுற் திரை ப்பட த்தை பார்க்கவும்.
எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு – 4.5 / 5