அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ தொடரை பாராட்டிய

அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ தொட ரை பாராட்டிய

அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ தொட ரை பாராட்டிய பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்த புஷ்கர் – காயத்ரி

அமேசான் பிரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தமிழ் வலைதள தொடரான ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ எனும் தொடர் ஆறு மணி நேரத்திற்கும் மேலான எட்டு அத்தியாயங்களை கொண்டது. இதனை கண்டு ரசிக்க தங்களது பொன்னான நேரத்தை செலவிட்டதுடன் இ ந்திய திரை உலகின் முன்னணி பிரபலங்களான எஸ். எஸ். ராஜமௌலி, ஹிருத்திக் ரோ ஷ ன், பிரியங்கா சோப்ரா, தனுஷ், வித்யாபாலன், சமந்தா என பலரும் தொடர் குறித்த விமர்சனங்களையும் வெளியிட்டதற்காக இந்த தொடரை உருவாக்கிய படைப்பாளிகள் புஷ்கர்- காயத்ரி தம்பதியினர் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.

புஷ்கர் மற்றும் காயத்ரியின் இலட்சிய படைப்பாக உருவானது தான் ‘சுழல் -தி வோர்டெ க்ஸ்’ எனும் தொடர். இந்த தொடர் கண்ணைக் கவரும் காட்சிகளுக்காகவும், பரபரப்பான திரைக்கதைக்காகவும், வித்தியாசமான கதைகளத்திற்காகவும் உலகம் முழுவதும் விரும் பப்படுகிறது. இந்த தொடரைப் பற்றி இணையவாசிகள் மட்டுமல்லாமல் முன்னணி பாலி வுட் நட்சத்திரங்களும் ‘சுழல் தி வோர்டெக்ஸ் ‘ அமேசான் பிரைம் வீடியோவில் இடம்பெற் ற கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்று’ என தெரிவித்திருக்கிறார்கள். இந்த பிரபலங்க ளின் பட்டியலில் பிரியங்கா சோப்ரா, ஹிருத்திக் ரோஷன், எஸ். எஸ். ராஜமௌலி, விக்கி கௌஷல் உள்ளிட்ட பலர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இது தொடர்பாக இந்தத் தொடரை உருவாக்கிய படைப்பாளிகளான புஷ்கர்- காயத்ரி பே சுகையில், ‘‘ எங்களது ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடருக்கு இந்திய திரையுல பிரபல ங்களி டமிருந்து கிடைத்த பாராட்டு ஆதரவு, அன்பு ஆகிய அனைத்திற்கும் நாங்கள் நன்றி கூற க டமைப்பட்டு இருக்கிறோம். திரையுலகில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சகந ண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் என பலரும் இந்த தொடரை பார்ப்பதற்கு நேரம் ஒது க்கி ரசிப்பார்கள் என நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்தத் தொடர் எட்டு அத்தியா யங்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலானது.

ஆனால் அனைவரும் இதற்காக தங்கள து நேரத்தை செலவிட்டு பார்த்து ரசித்ததுடன், அ து தொடர்பான நேர்மறையான செய்தி களை சமூக வலை தளத்தில் பதிவிட்டு எங் களை உற்சாகப்படுத்தினர். இது நாங்கள் முற் றிலும் எதிர்பாராத ஒரு விசயம். ஒரு வாரம் கழித் து நடைபெறும் என நினைத்திருந்தோம். ஆனால் இந்த தொடர் வெளியான குறுகிய கா லகட்டத்திற்குள் இந்த வரவேற்பு கிடைக் கு ம் என எதிர்பார்க்கவில்லை. எங்கள் திரை து றையிலிருந்து சக படைப்பாளிகள் மற்றும் நட்சத்திரங்கள் அளித்த வரவேற்பிற்காகவும், ஆதரவிற்காகவும் நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். ” என்றனர். ஜூன் 17ஆம் தேதி முதல் 30க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் அ மேசான் பிரைம் வீடியோவில் ‘சுழல் -தி வோ ர்டெக்ஸ்’ தொடர் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது.