ஆண்டுதோறும் ஜனவரி 15ம் தேதியில் தமிழ் காக்கத் தன்னுயிர் ஈந்த ஈகியர் பெருந்தமிழர் நடராசன்
ஆண்டுதோறும் ஜனவரி 15ம் தேதியில் தமிழ் காக்கத் தன்னுயிர் ஈந்த ஈகியர் பெருந்தமி ழர் நடராசன் அவர்களின் நினைவு நாளும், திருவள்ளுவர் நாளும் தமிழ் நாளாகத் தமிழ ர்க ளால் அனுசரிக்கப்படுகிறது. இன்று வந்த தமிழ்நாளை ஒட்டி நடுகல் தமிழ்ச்சங்கம் எ ன்ற அமைப்பு ‘இனி ஒரு புது விதி’ என்ற பாடலைத் தயாரித்து காணொலியுடன் வெ ளியி ட்டிரு ந்தது. அந்தப் பாடலை இந்தியாவின் பிரபல ஒலிப்பொறியியல் வல்லுநரும், தனது ஸ்லம் டாக் மில்லேனியர் படத்திற்காக ஆஸ்கர் வென்றவருமான ரெசூல் பூக்குட்டி பார்த் து விட்டுப் பாராட்டியிருக்கிறார்.
அதோடு, அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும், ‘உலகெங் கும் பரவி வாழும் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு எனது இனிப்பான தமிழர் திருநாள் மற் றும் பொங்கல் நல்வாழ்த்துகள்! எனத் தமிழில் வாழ்த்து தெரிவித்து, ‘இனி ஒரு புது விதி’ பாடலை தமிழ் மக்களுக்கு அர்ப்ப ணிப்பதாகவும் ட்வீட் செய்து பகிர்ந்திருக்கிறார். தனது கர்ண மோட்சம் – குறும்படத்திற் காக சிறந்த இயக்குநருக்கான தேசிய, மாநில விரு துகள் பெற்றவரும், இயக்குநர் ஷங் கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவ ருமான மு ரளி மனோகர் என்பவர் ‘இனி ஒரு புது விதி’ என்ற அந்த பாடலை எழுதி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.