சென்னை போர் நினைவிடம் 1971 போர் வெற்றியின் பொன்விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு டிசம்பர் 16 முதல் 19 வரை பொதுமக்களுக்கு திறக்கப்படுகிறது
சென்னை காமராஜர் சாலையில் உள்ள ‘வெற்றிப் போர் நினைவிடம் ‘ 1971ஆம் ஆண்டு இந்தியப் போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், டிசம்பர் 16ஆம் தேதி காலை 10 மணி முதல் டிசம்பர் 19ஆம் தேதி மாலை 5 மணி வரை, பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்படும். விருப்பமுள்ளோர் போர் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தலாம்.
1971 இந்திய-பாகிஸ்தான் போரில் சுமார் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்து வங்காளதேசத்தின் விடுதலைக்கு காரணமான, இந்தியப் படைகளின் வெற்றியின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16 ஆம் தேதி ‘விஜய் திவஸ்’ கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியின் பொன்விழாவைக் குறிக்கும், வரும் 16 டிசம்பர் 2021 அன்று அவ்விழா ‘ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்’ என நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய ராணுவத்தின் தக்ஷின் பாரத் பகுதி தலைமையகம் டிசம்பர் 16, 2021 அன்று ‘போர் நினைவிடத்தில்’ அஞ்சலி செலுத்தும் விழாவை நடத்தவுள்ளது.