சிவஞானம் பிலிம் புரொடக்சன் சார்பில் சிவஞான ஹரி—-
சிவஞானம் பிலிம் புரொடக்சன் சார்பில் சிவஞான ஹரி—- மற்றும் எம்.பி.அழகன் இருவ ரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
சரவணனாக கதாநாயகன் விஜீத் அறிமுகமாகிறார் இதில் இவருக்கு நான்கு ஜோடிகள் . டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், கேரளா ஆகிய நான்கு மாநிலங்களை சேர்ந்த மாடல் அழகிகளான ஹமைரா பரத்வாஜ், நதியா . நேசி, ஸ்டெபி ஆகிய நால்வர் தான் அவர்கள்.
மேலும் இதில் முத்துக்காளை, கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரநாத், விஜய்கணேஷ், ப யில் வான் ரங்கநாதன், வைகாசி ரவி, சுப்புராஜ், பிகில் வேணி, பேபி அக்சயா, கேசவன், ஜோதிராஜ் ஆகியோருடன் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவஞான ஹரி, மற்றும் சுரு ட்டு சுடலையாக இயக்குநர் சிவராகுல் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
பவர் சிவா, அட்சயா ஆனந்த் நடன பயிற்சியையும், ராம்நாத் படத்தொகுப்பையும், தஷி
– வசந்த் இசையையும், லாவண்யா, சீனிவாசன், பாடல்களையும், , விஜய் ஜாக்குவார் சண் டை பயிற்சியையும், பகவதி பாலா ஒளிப்பதிவையும் கவனித்துள்ளனர்.
” சில்லாட்ட” படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகும்
சி வராகுல் படத்தை பற்றி கூறியதாவது ” சில்லாட்ட” என்ற வழக்குச் சொல் தென்தமிழக த் தில் புழக்கத்தில் உள்ளதாகும். சில்லாட்ட என்பது பனைமரத்தை சார்ந்தது . பனைமர த்தில் உள்ள ஓலைகளையும் மட்டைகளையும் தாங்கி நிற்கும் வலைதான் ,சில்லாட்ட. அ ந்த காலத்தில் தண்ணீர் பதனீர் போன்ற திரவ பொருள்களை சல்லடை செய்வதற்கு இந்த
சில்லாட்டயையே பயன் படுத்தினார்கள். காலபோக்கில் சில்லாட்டயையே மக்கள் மற ந்து புதுவிதமான செற்கை சில்லாட்டைகளை உருவாக்கி விட்டார்கள்.
அப்படிப்பட்ட புனிதமான பனைதொழிலை அழித்து சுருட்டு சுடலை செங்கல் சூலையை
எழுப்பி தான் செய்யும் சமூகத்திற்கு விரோதமான தொழிலுக்கு பயன்படுத்துகிறார். இத னால் பனை தொழிலை செய்துவரும் சரவணன் மற்றும் பனை தொழிலையே நம்பியிரு க்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. தனது தொழிலுக்கு சரவ ண ன் மிக ப்பெரிய இடைஞ்சலாக இருப்பது சுருட்டு சுடலைக்கு தெரிய வருகிறது . இதனால் சரவண னை போட்டுத்தள்ள சுருட்டு சுடலை களத்தில் குதிக்கிறான். அதேநேரத்தில் தன து பனை தொழிலை மீட்பதற்கு சரவணன் களத்தில் குதிக்கிறான். இறுதியில் வெற் றிபெ ற்றது யா ர் என்பதை கிராமிய சூழலில் மண்வாசனை மாறாமல் படமாக்கி இருக்கிறே ன்”. என்று கூ றினார். தென்தமிழகத்தில் வளர்ந்துள்ள “சில்லாட்ட” விரைவில் திரைக்கு வர உ ள்ளது.