உலகின் ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் குவிமையமாக உருவெடுக்கும் இந்தியா

உலகின் ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் குவிமையமாக உருவெடுக்கும் இந்தியா

உலகின் ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் குவிமையமாக உருவெடுக்கும் இந்தியா மாதி ரி ஒழு ங் குவிதிகள் அமலாக்கத்தில் முன்னணியில் தெலங்கானா: FIFS செயல்திட்டம் 2021

சென்னை, ஆகஸ்ட் 28, 2021: “ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் துறைக்கான இந்தியாவின் முதல் ம ற்றும் ஒரே சுய – ஒழுங்குமுறைப்படுத்தும் தொழில்துறை அமைப்பான இந்திய ஃபேண் டஸி ஸ்போர்ட்ஸ் கூட்டமைப்பு (FIFS), அதன் பிரபல நிகழ்வான கேம்பிளான் (GamePlan) என் பதன் நான்காவது பதிப்பை இன்று வெற்றிகரமாக நிறைவு செய்தது.  இந்நிக ழ்வின் போ து “ஆன்லைன் ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ்: விளையாட்டு முன்னேற்றத்திற்கான ஒரு நல் லொழுக்க செயல்முறை சுழற்சியை உருவாக்கல்(‘Online Fantasy Sports: Creating a Virtuous Cycle of Sports Development’) என்ற பெயரில் டிலாய்ட் மற்றும் FIFS ஆகியவை ஒருங்கிணைந்து உருவாக்கிய இத்தொழில்துறை மீதான அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தியாவில் ஆன் லைன் ஃபேண்டஸி விளையாட்டுகளின் (OFS) பொருளாதார தாக்கம் மற்றும் இவ்விளை யாட்டு ரசிகர்களின் ஈடுபாட்டு செயல் நடவடிக்கையின் வழியாக இந்த விளையாட் டுக ளின் வளர்ச்சியை இது எப்படி தூண்டி வளர்க்கிறது என்பது குறித்து சிறப்பான கலந் து ரையாடல்களும் இந்நிகழ்வில் இடம்பெற்றன.  இந்திய OFS தொழில்துறையில் இதுவ ரை செய்யப்பட்டிருக்கின்ற மிகச்சிறப்பான செயற்பணிகளை அங்கீகரித்துப் பேசிய தெல ங்கானா மாநில அரசின் தொழில்துறை, வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை யின் முதன்மைச் செயலர் திரு. ஜெயேஷ் ரஞ்சன், அவரது சிறப்புரையில் பாராட்டினார். உத்திரப்பிரதேச மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் நீதியரசர் AN. மிட்டல், இன்வெஸ்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. தீபக் பாக்லா மற்றும் நீதியரசர் (ஓய்வு) அர்ஜுன் சிக்ரி ஆகியோரும் இந்நிகழ்வில் பங் கே ற்று, இந்திய பொருளாதாரம் மீது OFS –ன் தாக்கம் குறித்து எடுத்துரைத்தனர். ஸ்போர்ட்ஸ் முன்னேற்றத்தின் மீது அதன் பங்கு மற்றும் தற்போது நிலவுகின்ற சட்ட சூழலமைவு ஆகி ய அம்சங்கள் பற்றியும் மதிப்புமிக்க கருத்துக்களை அவர்கள் பகிர்ந்துகொண்டனர். 

 தெலங்கானா மாநிலத்தில் OFS – ன் எதிர்காலம் குறித்து தெலங்கானா மாநில அரசின் தொழில்துறை, வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செய லர் திரு. ஜெயேஷ் ரஞ்சன் கூறியதாவது: “ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் உலகில் தற்போது இருக்கின்ற ஒழுங்குமுறைப்படுத்தல் பிரச்சனைகள் என்னவென்று நாங்கள் அறி ந்தி ருக்கிறோம்.  நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் மாறுபட்ட ஆணைகள் இருப்பதையும் நான் அறி வேன்.  இந்த நேரத்தில் இச்செயல்தளச் சூழல் சிக்கலானதாகவும், சற்றே குழப் பமா னதா கவும் தெளிவின்றி இருப்பதை நான் அறிவேன். இந்த விளையாட்டுகளின் சில வடி வங் கள், குறிப்பாக திறன் விளையாட்டுகள், ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் குறித்து, சற்றே பின்ன டைவு இருந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.  இத்தகைய விளையாட்டுகள் ஊக்கு விக்கப்பட வேண்டும்.  ஏற்கனவே இருந்து வருகின்ற ஒழுங்குமுறை / கட்டுப் பாடுக ளுக்கு ப் பதிலாக, ஒரு மிக எளிய மற்றும் தொழில்துறைக்கு தோழமையான ஒழுங்குமுறை விதி யை அறிமுகம் செய்யும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். FIFS –ன் பிரதி நி திகள் உட்பட, இச்செயல்தளத்தில் தொடர்புடைய அனைவருடனும் இதுகுறித்து நான் கல ந்தாலோசனை செய்திருக்கிறேன்.”

இதைத்தொடர்ந்து அவர் பேசியபோது, “சுய ஒழுங் குமுறை கட்டுப்பாடின்றி இத்து றை யி ன் வளர்ச்சி யை யும் ஊக்குவிக்கின்ற ஒழுங்குமுறை விதியை நா ம் விரைவில் காண விரு க்கிறோம் என்று என் னால் உறுதியளிக்க முடியும்.  தெலங்கானா மாநில த்திலி ருந்து இது குறித்து என்ன வரவிருக்கிறது என்பதற்கு நாம் சற்று பொறுமையோடு இருப்பது அவ சியம்.  நாம் அறிமுகம் செய்யவிருக்கும் இந்த ஒழுங்குமுறை விதி, பிற மாநிலங்களும் பி ன் பற்றுவதற்குரிய ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகி றே ன்,” என்று கூறினார்.

FIFS செய்தித் தொடர்பாளர் திரு. அம்ரித் மாத்தூர் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளில் ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் துறை மிக வலுவாக வளர்ச்சியடைந்திருக்கிறது.  இந்த வளர்ச் சியானது, நமது தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நல்ல பங்களிப்பு வழங்கும் அளவி ற் கு அதிகமாக இருந்திருக்கிறது.  கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, கபடி போன்ற நிஜ – உலக விளையாட்டுகளில் இதன் ரசிகர்களையும், ஆர்வலர்களையும் OFS சிறப்பாக ஈடுபடுமாறு செய்கிறது.  விரைவில் நிகழவிருக்கின்ற, அதிகாரப்பூர்வமாக ஒப் புதல் அளிக்கப்பட்ட ஒரு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கின்ற இரு அணி களை யும் சேர்ந்த நிஜ – உலக விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய அவர்களது மெய்நிகர் (வெர்ச் சுவல்) அணிகளை உருவாக்குவதற்கான ஒரு செயல்தளத்தை வழங்குவதன் மூலம் இதை அது ஏதுவாக்குகிறது.  ஆன்லைன் கேமிங் என்பதிலிருந்து, ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸை வே று படுத்தி தனித்துவமானதாக காட்டுகின்ற முக்கிய அம்சமாக இது இருக்கிறது.” அவர் மே லும் பேசுகையில், “அனைத்து மாநில அரசுகளுடனும் தொடர்ச்சியான மற்றும் ஆக்க ப் பூர்வ கலந்துரையாடல்களுடன் கூடிய செயல்பாட்டு அமைப்பை உருவாக்க நாங்கள் வி ரு ம்புகிறோம். இது, தொடர்ந்து நடைபெறும் ஒரு உயிரோட்டமான செயல்பாடாகும்.  இ தை செயல்படுத்துவதற்கு மாநில அரசுகளிடமிருந்து மிகப்பெரிய அளவிலான ஆத ரவை நா ங்கள் பெற்று வருகிறோம்,” என்று குறிப்பிட்டார்.