தேங்கி நிற்கும் கழிவு நீரில் காகித கப்பல் விடும் போராட்டம்
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை கண்டித்து சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு
சாத்தூர், ஆக-08
.விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரங்கசாமி தலைமை யில்,சா த் தூர் நகர காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.நகர காங்கிரஸ் கமி ட்டி தலைவர் அய்யப்பன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ், நகர பொருளாளர் செந்தியப்பன், லட்டு கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சா த்தூ ர் நான்கு வழிச்சாலை படந்தால் சந்திப்பில் கிழக்குப் பக்க உள்ள சர்வீஸ் ரோட்டில் இரு க்கும் மழைநீர் செல்லும் வாறுகாலில் பல ஆண்டுகளாக மண் மேவி அடைப்பு ஏற்பட் டுள் ளது .இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் சர்வீஸ் ரோட்டில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. .இதை சரிசெய்ய கோரி பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும் இதுநாள் வரையும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், தமிழக முதல்வர் சிறப்பான ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள் ளது. எனவே மழை நீர் செல்லும் வாறுகால் உடனடியாக சரிசெய்யவேண்டும் சரி செய்யா த நிலை தொடர் ந்தா ல் மக்கள் நலன் கருதி இந்திய நெடுஞ்சாலை ஆணையத்தை கண் டித்து சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக 17-08- 2021 அன்று சர்வீஸ் ரோட்டில் தேங் கி நிற்கும் கழிவு நீரில் காகித கப்பல் விடும் போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் த லை வர் கார்த்திக், மாவட்டச் செயலாளர் சந்திரன், ஒன்றிய செயலாளர் ரமேஷ், வட்டார துணைத்தலைவர் ஒத்தையால் முத்துவேல், நகர பொதுச்செயலாளர் ரவி, சீனிவாசன் ,சோலையப்பன், வெள்ளைச்சாமி, ஆறுமுகம், காசி, சின்னப்பன், மணிவண்ணன், சங்கர் ,பாண்டியன், ராகுல் இளங்கோவன், அரிகிருஷ்ணன் மூக்கையா, பாரத், டெய்லர் மாரி ய ப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்