Bukkathurai village in Madurantakam- NGO Narayan Seva Sansthan distributed free ration kits to 105 needy families

Bukkathurai village in Madurantakam- NGO Narayan Seva Sansthan distributed free ration kits to 105 needy families

மதுரந்தகத்தில் 105 குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன!

  • மதுரந்தகத்தில் 105 குடும்பங்களுக்கு, உதய்பூரைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் நாராயண் சேவா சன்ஸ்தான் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கியிருக்கிறது!

சென்னை, செங்கல்பட்டு, மதுராந்தகம், ஜூன் 30, 2021: உதய்பூரைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான நாராயண் சேவா சன்ஸ்தான் [NSS – Narayan Seva Sansthan], செங்கல் பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மதுரந்தகத்தில் உள்ள புகத்துரை கிராமத்தைச் சேர்ந்த 105 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை விநி யோ கித்து இருக்கிறது. வறுமையால் வாடும்  இந்த 105 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன் தொ குப்புகள் ஒவ்வொன்றிலும் 25 கிலோ அரிசி, 2 கிலோ துவரம் பருப்பு, 2 லிட்டர் சமை யல் எண்ணெய், 2 கிலோ சர்க்கரை, 1 கிலோ உப்பு, 500 கிராம் சிவப்பு மிளகாய், 200 கிராம் மஞ்சள், 200 கிராம் மல்லி அகிய அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் உள்ளன.

கோவிட் -19 தொற்றின் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலப்பணிகளிலும், பிரச்சாரங்களிலும் நாராயண் சேவா சன்ஸ்தான் [என்எஸ்எஸ்] தீ விரமாக ஈடுப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதிலும் இலவச கொரோனா மருந்து தொ குப்பு, இலவச உணவு மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் உள்ளிட்டவற்றை விநி யோ கித்து வருவதோடு, பல்வேறு நலப்பணிகளிலும் ஈடுப்பட்டு வருகிறது. இதன் தொ டர் ச்சியாக, 2837 என்எஸ்எஸ் கொரோனா மருந்து தொகுப்புகள், ஏழை மக்கள் 2178 95  பே ருக்கு பசியாற்ற உணவு விநியோகம் மற்றும் ரேஷன் பொருட்கள் அடங்கிய 30205 தொ குப்புகளை வறுமையால் வாடும், கொரோனாவில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இல்லாமல் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் நாராயண் சேவா சன்ஸ் தான் [என்எஸ்எஸ்] வழங்கியிருக்கிறது.

நாராயண் சேவா சமஸ்தானின் தலைவர் திரு. பிரசாந்த் அக ர்வால் [Prashant Agarwal, Presi dent, Narayan Seva Sansthan] கூறுகை யில், “தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில், நாங்கள் இல வச உணவு, என்எஸ்எஸ் கொரோனா மருந்து கருவி மற்றும் இல வச செயற்கை கால்களை ஏழைகளுக்கும், மாற்றுத் திற னா ளிகளுக்கும் தொடர்ந்து விநியோகித்து வருகிறோம். இந் த நேர்மறையான சிந்தனையுடன், ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாக நாங்கள் கடி னமான சூழ்நிலைகளில் உதவி தேவைப்படுபவர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறோம். இந் தியாவையும் இந்தியர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் தொடர்ந்து மு யற்சித்து வருகிறோம், குறிப்பாக மா ற் றுத்திறனாளிகளுக்கு உதவுவதில் நாங்கள் அதிக அக்க றையுடன் செயல்படுகிறோம்.  மாற்றுத்திறனாளிக்களுக்கென ஒரு ப்ரத்யேகமான, கட்ட ணமில்லா சேவையை சேவையை மேற்கொண்டிருக்கிறோம். இதன் மூலம் அவர்க ளுக்கு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் மருந்து சீட்டின் அடிப்படையில் கோ வி ட்-19 இலவச கொரோனா மருத்துவ தொகுப்புகளை விநியோகித்து வருகிறோம். மாற் று த் தி றனாளிகளால் வெளியே செல்ல முடியாத தால் மருந்துகளை அவர்களது வீட்டிற்கே செ ன்று பாதுகாப்பான முறையில் வழங்குகிறோம். அதேநேரம் ஏற்கனவே பரிந்துரை க்க ப்பட்ட மருந்துகளின் தொகுப்பையும் எங்களது குழு தேவைப்படுபவர்களுக்கு விநியோ கித்து வருகிறது’’ என்றார்.

நாராயண் சேவா சன்ஸ்தான் [என்எஸ்எஸ்] வெளியிட்டு இருக்கும் புதிய அறிவிப்பில், இ ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உ த்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் கோவிட் அலைக்கு எதிராகப் போராடும் ஏழைக ளுக் கு ரேஷன் தொகுப்புகளை விநியோகிக்கும் என தெரிவித்து இருக்கிறது. இந்த கோவிட் -19 நிவாரண முகாம்களில், ‘மாஸ்க் அவசியம்’ என்னும் பிரச்சாரத்தின் கீழ், சமூக இடை வெ ளி மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டு மெ ன்று மக்களிடையே விழிப்புணர்வு உருவாக்கப்பட்டு வருகிறது..

‘’நாம் எதிர்நோக்கியிருக்கும் மூன்றாவது அலை மிகவும் ஆபத்தானது என்று எதிர்பார்க் கப்படுகிறது. எனவே விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு நாம் இப்பொழுதே தயாராவதன் மூலமும், முகக்கவசங்கள் மற்றும் கிருமி சுத்திகரிப்பு பொருட்களை வழங்குவதன் மூலமு ம் சவால்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராகி வருகிறோம்’’ என்று திரு. பிரசாந்த் அகர் வால் கூறினார்.