நடிகர் விவேக் மறைவு ! நடிகர் நாசர் இரங்கல் செய்தி:

நடிகர் விவேக் மறைவு ! நடிகர் நாசர் இரங்கல் செய்தி:

அன்பு நண்பர் , சக ஊழியர் கலைமாமணி பத்மஶ்ரீ விவேக் அவர்களது பிரிவு என்னை அதி ர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைய செய்துள்ளது.. 

1987ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ” மனதில் உறுதி வேண்டும்” திரைப்படம் மூலம் விவேக் அவர்கள் நடிகராக அறிமுகமானார்.

34 வருடங்களாக மக்களின் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகராக தனது நகைச்சுவை மூலம் சமூக சிந்தனைகளையும் பகுத்தறிவு சிந்தனைகளையும் எடுத்துரைத்து வலம் வந்தவர் இன்று காலமானார் என்பது வேதனைக்குறியது.

ஐந்துமுறை தேசிய விருதும் தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை விருது மற்றும் கலை மா மணி சின்ன க்கலைவாணர், ஜனங்களின் கலைஞன், “பத்ம ஶ்ரீ” உட்பட பல பட்டங்கள் பெ ற்ற ஒப்பற்ற கலைஞன் என போற்றப்பட்டவர் விவேக். பார்போ ற்றும் நமது முன்னாள் ஜ னா திபதி அமரர் அப்துல் கலாம் அவர் களுடன் மிக நெருங்கிய தொடர்பும் நட்பும் வைத் திருந்த ஒரே நடிகர் விவேக்.

திரை வட்டாரத்தில் அனைவருடனும் நட்போடு இருந்த அவர் திரை உலகினர் மனதில் மட் டு மல்ல ரசிகர்களின் மனதிலும் எல்லா அர சி யல் மற்றும் சமூகத் தலைவர்களின் இதயத் திலும் இடம் பிடித்து பவனி வந்தவர். ‘ஒரு கோ டி மரம்’ கன்றுகள் நடும் திட்டம் மூலம் சூழ லியல் ஆர்வலராக அறியப்பட் டார்.பலரும் அவ ரை முன்மாதிரியாக நினைத்து அவரை பின்பற்றி நல்ல செயல் செய்துவந்தனர். விவே க் அவர்களி ன் மறைவு நடிகர் சமூகத் துக் கும் திரை உலகிற்கும் ஈடுசெய்ய முடி யா த பேரி ழப்பாகும். அருமை நண்பரை இழந்து விட் டேன்.விவேக் அவர்களின் குடும்ப த்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கி றேன். அவர்களது துக்கதில் பங்கு கொ ள்கி றேன்.

நன்றி!
#நாசர்,
அனைத்து நடிகர்,நடிகைகள் சமூகம் சார்பில்.