Trailer of * Vadham * released .

Trailer of * Vadham * released .

வெங்கடேஷ் பாபு இயக்கத்தில் “வதம்” ட்ரெய்லரை வெளியிட்டது MX Player !

ஷ்ருதி ஹரிஹரன் நடிப்பில், பெண் காவல் அதிகாரியை மையமாக கொண்ட முதல் ஆக்சன், டிரமா தொடராக உருவாகியுள்ள “வதம்” இணையதொடர் 12 பிப்ரவரி முதல் MX Player தளத்தில் இலவசமாக வெளியாகிறது.

சென்னை 9 பிப்ரவரி 2021 : சக்தி பாண்டியன் தெளிவும், துணிவும் கொண்ட நேர்மையான IPS அதிகாரி. என்னவாயினும் உரிய நீதி வழங்கப்படவேண்டுமென்பதில் பெரும் நம்பிக் கை கொண்டிருப்பவர். ஒரு பெண் காவல் அதிகாரியை மையமாக கொண்ட முதல் ஆக் சன், டிரமாவாக ஷ்ருதி ஹரிஹரன் நடிப்பில் உருவாகியுள்ள “வதம்” MX Original Series இண யதொடரை MX Player தனது வாடிக்கையாளர்களுக்காக இவ்வாரம் வழங்குகிறது.

ஷ்ருதி ஹரிஹரன் முன்னணி கதாப்பாத்திரத்தில், சக்தி பாண்டியன் எனும் காவல் அதி காரியாக நடிக்கும் இத்தொடரில், பெண் காவல்துறை குழுவுடன் இணைந்து, பிரபல தொ ழிலதிபர் ஒருவரின் கொலையை விசாரிக்கின்றார். கொலை வழக்கில் வெளியாகும் உண் மைகள் அவர் நினைத்தே பார்த்திராத பெரும் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கின்றது. ஒரு பெண்ணாக அவரது துறையிலிருந்தும், அரசியல்வாதிகளிடமிருந்தும் பெரும் அச்சு றுத்தல்களை அவர் சந்திக்கின்றார். ஆனால் அவரது துணிவும், நேர்மையும் நீதிக்கான போரட்டமும் இணைந்து உண்மையை வெளிக்கொண்டுவருகிறது. 10 பகுதிகள் கொண்ட இந்த தொடரினை Applause Entertainment உடன் இணைந்து Tasa Media நிறுவனத்தினர் தயா ரித்துள்ளனர். இத்தொடரினை வெங்கடேஷ் பாபு இயக்கியுள்ளார். இத்தொடர் 12 பிப்ரவரி முதல் MX Player தளத்தில் இலவசமாக வெளியாகிறது.

இயக்குநர் வெங்கடேஷ் பாபு இத்தொடர் குறித்து கூறியதாவது…

மிக அழுத்தமான கதைக்களம் கொண்ட இத்தொடர், துணிவும் நேர்மையும் கொண்ட ஒரு பெண் காவல் அதிகாரியின் கதையை, ஒரே கட்டமாக பார்க்கும் ஆவலை, பரபரப்பை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்தும். கொலை குற்ற வழக்கை, விசாரிக்கும் கதை களை, ரசிக்கும் ரசிகர்களுக்கு இத்தொடர் பெருவிருந்தாக அமையும். இத்தொடரின் கதை இள மையான, பயமற்ற, துணிவு மிகுந்த சக்தி பாண்டியன் எனும் காவல் அதிகாரி, நீதிக்காக சட்டத்தையும் வளைக்கும் கதையினை கூறுவதாகும். ஷ்ருதி ஹரிஹரன் மிகுந்த அர்ப்பணிப்புடன் சக்தி பாண்டியன் பாத்திரத்திற்கு உயிர் தந்துள்ளார். மேலும் இத்தொடரில் பங்கு கொண்ட அனைவரும் பரப்பரப்பான தொடராக, இத்தொடர் உருவாக பாடுபட்டுள்ளனர்.

ஷ்ருதி ஹரிஹரன் தனது கதாபாத்திரம் பற்றி கூறியதாவது…..

ஒரு நடி கராக, எப்பொழுதும் எனக்கு சவாலான கதாபாத்திரங்களையே தேர்வு செய்வே ன். தனிபட்ட முறையில் எனக்கு சக்தி பாண்டியன் கதாபாத்திரம் மிகவும் நெருக்கமானது. பயமில்லாமல் சரியானவைக்காக போராடும் கதாபாத்திரம் மற்றும் ஒரு தொழில திப ரின் கொலையை தீர்க்கவேண்டும் என்ற தீர்மானத்துடன் இருக்கும் கதாபாத்திரம். நடிக் கும் போது, இந்த கதாபாத்திரம் தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளையும் உள்ளடக்கி இருந் தது. படபிடிப்பில் மிகவும் உற்சாகமாகவும், அதே நேரத்தில் மிகவும் கடினமாகவும் இருந் தது. இயக்குனர் வெங்கடேஷ் பாபு அளித்த ஆதரவு, இந்த கதாபாத்திரத்தை திறம்பட செய் ய உதவியாக இருந்தது. எங்களுடைய கடின உழைப்பிலும், அர்பணிப்பிலும் உரு வாகியுள்ள “வதம்” தொடர் பார்வையாளர்களுக்கு சிலிர்ப்பையும், மிகுந்த மகிழ்ச் சியை யும் தரும் என நம்புகிறேன்.

மேலும் இத்தொடரில் அஷ்வதி வாரியர், செம்மலூர் அன்னம், ப்ரீத்திஷா ப்ரேம்குமரன் , விவேக் ராஜகோபால் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்தொடரின் 10 பகுதிகளும் முழுக்கவே இலவசாமாக 12 பிப்ரவரி முதல் MX Player தளத்தில் ப்ரத்யேகமாக ஒளிப்பரப்பாகிறது.

ட் ரெய்லரை இங்கு காணலாம்:

Download the App Now

Web: https://www.mxplayer.in/

MX Player குறித்து

MX Player  ஒரு பொழுதுபோக்கு இணைய ஆப் ஆகும். ஒவ்வொரு மாதமும்  200 மில்லியன் சந்தாதார்கள் பயன்படுத்தும் இந்த ஆப் அனைத்து விதமான இணைய பொழுதுபோக்கு அம்சங்களையும் வழங்குகிறது. வீடியோ ப்ளேபேக், வீடியோ ஸ்ட்ரீமிங், மியூசிக், கேமிங் என அனைத்தும் இதில் உள்ளது. பார்வையாளர்களின் மனவோட்டத்திற்கேற்ற அனைத்து பொழுதுபோக்கையும் ஓரிடத்தில் வழங்குகிறது. தற்போது விளம்பரங்களின் உதவியுடன் இயங்கும் இந்த ஆப் பத்து மொழிகளில் 2 00 000 மணி நேரம் ஓடும்  ப்ரீமியம் கதைகளை தன் னகத்தே கொண்டிருக்கிறது. விமர்சகர்கள் பாராட்டும் MX ஒரிஜினல்ஸ்,  எக்ஸ் க்ளூ சிவ் கதைகள், திரைப்படங்கள், இணைய தொடர்கள் தொலைக்காட்சி தொடர்கள், செ ய்திகள் மற்றும் ஆடியோ மியூசிக் ஆகியவை இதில் அடங்கும். இந்த ஆப்  Android, iOS, Web, Amazon Fire TV Stick, Android TV மற்றும் OnePlus TV உட்பட பல இடங்களில் கிடைக்கிறது.

இந்த ஆப்பில் கேமிங் வசதியை பிப்ரவரி 2020 ல் அறிமுகப்படுத்த தற்போது MX Player ல் கேம் விளையாடும் சந்தாதாரர்களின்  எண்ணிக்கை 25 மில்லியன் அளவில் உயர்ந் திரு க்கிறது. மற்ற சந்தாதாரர்களுடன் இணைந்து போட்டியில் கலந்து கொள்ளும் வகை யிலான hyper casual மொபைல் கேம் தற்போது Android மற்றும் iOS ஆப்களில் கிடைக்கிறது.

டைம்ஸ் இண்டர்நெட் Times Internet தளத்தில் இருந்து ( இந்தியாவின் மிகப்பெரும் பொழு துபோக்கு மீடியா நிறுவனமான டைம்ஸ் ஆப் இந்தியா  Times of India உடைய டிஜிட்டல் துறை ) உருவான MX Player ஆப் உலகளவில் 12 நாடுகளில் UAE, US, Canada, UK, Australia, New Zealand,  Bangladesh, Nepal, Afghanistan, Srilanka, Maldives, மற்றும் Bhutan நாடுகளில் பரவி வெற் றிக ரமாக இயங்கிவருகிறது. MX தனது வாணிபத்தில் அடுத்ததாக குறுகிய கால  வீடியோ க்களை ஒளிபரப்பும் MX TakaTak ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. குறு வீடியோவை தாங்க ளாகவே உருவாக்கி கொள்ளும் வசதி கொண்ட   இந்த ஆப் 15Mn+ இணைய பயன்பாட் டாளர்களுடன் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் MX ShareKaro ஆப் ஃபைல்களை மின்னல் வேகத்தில் பரிமாறிக்கொள்ளும் வசதியை வழங்கி வருகிறது.