அடுத்த உண்மை சம்பவத்தைக் கையிலெடுக்கும் விருமாண்டி: நாயகனாக சசிகுமார் ஒப்பந்தம்

அடுத்த உண்மை சம்பவத்தைக் கையிலெடுக்கும் விருமாண்டி: நாயகனாக சசிகுமார் ஒப்பந்தம்

உண்மைச் சம்பவங்களைப் படமாக்குவது எப்போதுமே அவ்வளவு எளிதான விஷயமல்ல. அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பார்க்கும் போது, அவர்களது நினைவுகள் மீண் டும் உயிர்ப்பிக்க வேண்டும். அப்படியொரு உண்மைச் சம்பவத்தை ‘க/பெ ரணசிங்கம்’ எ ன்ற பெயரில் இயக்கி அதில் மாபெரும் வெற்றி பெற்றவர் விருமாண்டி. அந்தப் படத் தை ப் பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் விருமாண்டியை வெகுவாகப் பாரா ட் டினா ர்கள்.

அதற்குப் பிறகுத் தனது அடுத்த படத்துக்கான கதையை முடிவு செய்து, திரைக்கதை எழு தி வந்தார் விருமாண்டி. இதுவும் ஒரு உண்மைச் சம்பவம் தான். தற்போது பல்வேறு முன் னணி நா யகர்கள் படங்களின் வசூலைக் கொண்டாடி வருகிறோம். அத ற்கு எல்லாம் முன்னோட்டமாக 1975-ம் ஆண்டு ஒரு சம்பவம் ந டை பெற்றுள்ளது. அந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொ ண்டு இந்தப் படத்தை உருவாக்குகிறார் விருமாண்டி.

இந்தக் கதையைக் கேட்டவுடனே, நடிப்பதற்குச் சம்மதம் தெ ரிவி த்துவிட்டார் சசிகுமார். ஏப்ரலிலிருந்து படப்பிடிப்பு தொ டங்க வுள்ளது. பரதன் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆர்.வி ஸ்வ நாதன் பெ ரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயா ரிக்கிறார். இத ற் கான அலு வலக பூஜை இன்று நடைபெற்றது.இந்தப் படத்துக்குப் பாடலாசிரியராக வைர முத்து, ஒளிப்பதிவாளராக என்.கே.ஏ காம் பரம், எடிட்டராக டி.சிவாநாதீஸ்வரன், இசைய மை ப்பாளராக ஜிப்ரான் ஆகியோர் பணி புரிகிறார்கள். 

உண்மைச் சம்பவங்கள் என்றால் தத்ரூபமாகப் படமாக்க வேண்டும். அதற் குத் திறமை யான தொழில்நுட்பக் கலைஞர்கள் இருந்தால் சாத்தியப்படுத்தி விடலாம். இந்தப் படத் தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியலைப் பார்த்தாலே, இதன் நம்ப கத் தன்மை எப் படி இருக்கும் என்பது தெளிவாகிறது. ஏப்ரலில் படப்பிடிப்பைத் தொடங்கி, இந்த ஆண்டு முடிவுக்குள் படத்தை வெளிக்கொண்டு வர முடிவு செய்துள்ளனர். தற்போது சசிகு மாருட ன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முர மா க நடைபெற்று வருகிறது.