சில வேற்று மொழி படங்களைப் பார்க்கும் போது, இந்தப் படம் எப்போது தமிழ் ரீமேக்கில்

சில வேற்று மொழி படங்களைப் பார்க்கும் போது, இந்தப் படம் எப்போது தமிழ் ரீமேக்கில்

அந்தாதூன் தமிழ் ரீமேக்: பிரசாந்த்தை இயக்கும் ஜே.ஜே.பிரட்ரிக் – பிரம்மாண்டமாக தயாராகிறது!

சில வேற்று மொழி படங்களைப் பார்க்கும் போது, இந்தப் படம் எப்போது தமிழ் ரீமேக்கில் செய்வார்கள் என்ற ஆர்வம் எழும். ஏனென்றால் அந்தளவுக்கு அந்தப் படத்தின் கதாபாத்தி ரங்களில் தாக்கம் நம்மை பாதித்திருக்கும். அப்படியொரு படம் தான் ‘அந்தாதூன்’. அனை த்து மொழிகளிலும் ஏற்றவாறு கலகலப்புடன் கூடிய த்ரில்லராக அமைத்திருப்பார் இயக் குநர் ஸ்ரீராம் ராகவன். 450 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது மட்டுமன்றி சிற ந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை என தேசிய விருதுக ளையும் வென்றது. இதில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் இதில் நடித்தி ருந்தனர்.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கினை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றினார் தியா கராஜன். ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டு பணி களைத் தொடங்கினார். ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்க வுள் ளார். இதற்காக உடலிழைத்து முழுமையாக மாறியுள்ளார் பிரசாந்த். இந்தப் படத்தை ‘பொ ன்மகள் வந்தாள்’ படத்தின் மூலம் முத்திரை பதித்த ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவு ள்ளார். முன்னதாக இந்தப் படம் மோகன் ராஜா இயக்குவதாக இருந்தது.

இதன் பணிகள் மும்முரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தபு கதாபாத்திரத்துக்கு மிகப்பிரபலமான நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நடிகர் – நடிகை கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைத்தும் ஒப்பந்தமாக முடிவானவுடன் அதிகா ரபூர்வமாக அறிவிக்கவுள்ளார்கள். இந்தப் படம் பெரும் பொருட்செலவில் பிரம்மா ண்ட மாக தயாரிக்கவுள்ளார் தியாகராஜன். டிசம்பர் முதல் வாரத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்காக படப்பிடிப்பு இடங்கள் தேர்வு, நடிகர்கள் – தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒப்பந்தம் என அனைத்து பணிகளையும் மும்முரமாக கவனித்து வருகிறார் ஜே.ஜே.பிரட்ரிக்.

இந்திய அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘அந்தாதூன்’ இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கும் அதே போன்றதொரு வரவேற்பைப் பெற வேண்டும் என்று அனைத்து வழிகளி லும் படக்குழு பணியாற்றி வருகிறது. ரசிகர்களுக்கு காமெடியான ஒரு த்ரில்லர் படம் 2021-ம் ஆண்டு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.