முடிவுக்கு வந்த கிளைமேக்ஸ்…சந்தோஷத்தில் ஏழுமலையானை தரிசிக்கும் ஓ. பன்னீர் செல்வம்!! சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று இரவு (வெள்ளிக் கிழமை) திருப்பதி சென்றார். அங்கு அலமேலு மங்காபுரம் சென்று சுவாமி தரிசனம் செய்த அவர் இன்று காலை மூன்று அமைச்சர்களுடன் இணைந்து திருப்பதி வெங்கடாசலபதியை சுவாமி தரிசனம் செய்கிறார். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று மாலை, சென்னையில் இருந்து திருப்பதிக்கு சென்றார். திருப்பதியில் இருந்து, அலமேலு மங்காபுரம் சென்ற அவர், அங்கு சாமி தரிசனம் செய்தார். திருமலையில் உள்ள விடுதியில் நேற்றிரவு தங்கினார். இன்று காலை (சனிக்கிழமை) தமிழகத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்களுடன் இணைந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஏழுமலையானை தரிசிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று பன்னீர் செல்வம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். இதன் மூலம் அந்தக் கட்சியில் நீண்ட நாட்கள் நிலவி வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. முதல்வர் வேட்பாளர் பன்னீர் செல்வமா, எடப்பாடி பழனிச்சாமியா என்ற நேரடி போட்டி உருவாகி இருந்த நிலையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. மேலும், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் ஆறு பேரும், பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் ஐந்து பேரும் இடம் பெற்று உள்ளனர். இந்தக் குழுவுக்கு பன்னீர் செல்வம் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் குழுவின் செயல்பாடுகள் என்னவென்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் பன்னீர் செல்வம் திருப்பதி சென்றுள்ளார்.

முடிவுக்கு வந்த கிளைமேக்ஸ்…சந்தோஷத்தில் ஏழுமலையானை தரிசிக்கும் ஓ. பன்னீர் செல்வம்!!

சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று இரவு (வெள்ளிக் கிழமை) திருப்பதி சென்றார். அங்கு அலமேலு மங்காபுரம் சென்று சுவாமி தரிசனம் செய்த அவர் இன்று காலை மூன்று அமைச்சர்களுடன் இணைந்து திருப்பதி வெங்கடாசலபதியை சுவாமி தரிசனம் செய்கிறார்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று மாலை, சென்னையில் இருந்து திருப்பதிக்கு சென்றார். திருப்பதியில் இருந்து, அலமேலு மங்காபுரம் சென்ற அவர், அங்கு சாமி தரிசனம் செய்தார். திருமலையில் உள்ள விடுதியி ல் நேற்றிரவு தங்கினார். இன்று காலை (சனிக்கிழமை) தமிழகத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்களுடன் இணைந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஏழுமலையானை தரிசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுகவி ன் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று பன்னீர் செல்வம் கடந்த இரண்டு நா ட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். இதன் மூலம் அந்தக் கட்சியில் நீண்ட நாட்கள் நிலவி வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

முதல்வர் வேட்பாளர் பன்னீர் செல்வமா, எடப்பாடி பழனிச்சாமியா என்ற நேரடி போட்டி உருவாகி இருந்த நிலையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. மேலும், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் ஆறு பேரும், பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் ஐந்து பேரும் இடம் பெற்று உள்ளனர். இந்தக் குழுவுக்கு பன்னீர் செல்வம் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் குழுவின் செயல்பாடுகள் என்னவென்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் பன்னீர் செல்வம் திருப்பதி சென்றுள்ளார்.