சேலத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்து: நிவாரணம் அறிவித்தார் முதல்வர்
சேலத்தில் மேட்டூா் அருகே ரயில்வே இருப்புப் பாதையின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்த தில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு நிவாரண உதவி அறிவித்து ள் ளார் முதல்வர் பழனிசாமி.
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், சேலம் மாவட்டம், மேட்டுர் வட்டம், வீரக்கல்புதூர் கிராமம், புதுசாம்பள்ளி பகுதியில், 26.8.2020 அ ன்று ரயில்வே துறைக்குச் சொந்தமான சுற்றுச் சுவரை வலுப்படுத்தும் பணியின் போது, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், சீரமைப்புப் பணியினை மேற்கொண்டிருந்த 13 நபர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்களில் ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி கவிதா சிகிச்சை பலனின்றி உயிரிழ ந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த கவிதாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதா பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவ மனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த கவிதாவின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாயும்; பல த்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும்; லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள் ளேன் என்று தெரிவித்துள்ளார்.