*தனியார் மென்பொருள் நிறுவனம் சார்பாக பெண்களுக்கு ரூ 32 லட்சம் மதிப்புள்ள தையல் இயந்திரம் வழங்கப்பட்டது*
தனியார் மென்பொருள் நிறுவனமான “டெமினோஸ்”
சிஎஸ்ஆர் முயற்சியின் கீழ் சென்னை வியாசர்பாடி அருகே அமைந்துள்ள இந்த அதி நவீன தையல் பிரிவில் வணிக ரீதியான உற்பத்திக்காக வடிவமைக்கப்பட்ட 16 மேம்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
ஆதரவற்ற பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சென்னையில் புதிய தையல் பிரிவை டொமினோஸ் அமைத்துள்ளது.
இந்த முயற்சி பெண்களுக்கு மதிப்புமிக்க திறன்களை வழங்கி நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் மொத்த செலவு ₹32 லட்சம் ஆகும்.
பயிற்சி முடித்தவுடன் பயனாளிகள் சந்தைக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்யும்.
பயனுள்ள கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டை எளிதாக்கும் வகையில், டெமினோஸ் சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளரை நியமித்துள்ளது.
அவர் ஆரம்பகட்ட 16 ஆதரவற்ற பெண்களுக்கு விரிவான பயிற்சி அளிப்பார்.
இப்பெண்கள் எதிர்கொள்ளும் நிதிச் சவால்களை உணர்ந்து, டெமினோஸ் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்குகிறது.
இது அவர்களின் பயணச் செலவுகளை ஈடுகட்டவும், பயிற்சி காலம் முழுவதும் கூடுதல் ஊக்கத்தை அளிக்கவும் உதவும்.
புதிதாக நிறுவப்பட்ட இந்த பிரிவு பாதுகாப்பான மற்றும் சாதகமான கற்றல் சூழலுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
இது மேம்பட்ட பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் மற்றும் நிலையான வருகையை உறுதி செய்து முன்னேற்றத்தைக் கண்காணிக்க பயோமெட்ரிக் வருகைப் பதிவு அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த தையல் பயிற்சி பிரிவின் தொடக்க விழாவில் பேசிய டெமெனோஸின் பிராந்தியத் தலைவர் கணேசன் ஸ்ரீராமன்,
சமூகத்தில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.
மேலும் பயனாளிகளுக்கு வணிக வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதற்கான எதிர்காலத் திட்டங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
சென்னை மாநகராட்சியின் மஞ்சப்பை முயற்சிக்கு மஞ்சள் பைகள் தைப்பது போன்ற சிறிய அளவிலான ஆர்டர்களை இந்த திறமையான பெண்களுக்கு வழங்குவதற்கான வழிகளை நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்.
இது அவர்கள் புதிதாகப் பெற்ற திறன்களைப் பயன்படுத்தவும் நிலையான வருமானத்தை உருவாக்கவும் உதவும் என்று கூறினார்.