நடிகர் டேனியல் பாலாஜி ஓராண்டு நினைவு அஞ்சலி – அவர் நடிக்கும் ‘ ஆர் பி எம் – R P M’ படத்தின் முன்னோட்டம்

*நடிகர் டேனியல் பாலாஜி ஓரா ண்டு நினைவு அஞ்சலி – அவர் நடி க்கும் ‘ ஆர் பி எம் – R P M’ படத் தின் முன்னோட்டம் வெளியீடு*

*ஆர் பி எம் ( RPM ) படத்தின் முன் னோட்டத்தை வெளியிட்டு, டே னியல் பாலாஜிக்கு முதலாம் ஆ ண்டு நினைவஞ்சலி செலுத்தி ய படக்குழு*

*டேனியல் பாலாஜி நடித்த கடை சி படமான ‘ஆர் பி எம் (RPM) ‘ படத் தின் டிரெய்லரை அவரது தாயா ர் வெளியிட்டார்* 

நடிகர் டேனியல் பாலாஜி கதை யின் நாயகனாக முதன்மை யா ன கதாபாத்திரத்தில் நடித்திரு க்கும் ‘ஆர் பி எம் – RPM ‘படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடை பெற்றது. நடிகர் டேனியல் பாலா ஜி மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதால்.. அவருக்கு நினை வஞ்சலி செலுத்தும் வகையில் இப்படத்தின் முன்னோட்ட வெ ளியீட்டு விழா ஒருங்கி ணைக் கப்பட்டிருந்தது. 

இயக்குநர் பிரசாத் பிரபாகர் இ யக்கத்தில் உருவாகி வரும் ‘ஆர் பி எம் ‘ ( R P M) எனும் திரைப்ப டத் தில் நடிகர் டேனியல் பாலாஜி, கோவை சரளா, ஒய் ஜி மகேந்தி ரன், இளவரசு, தேவதர்ஷினி , சு னில் சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயா பிரசாத் உள்ளிட்ட பலர் நடி த்திருக்கிறார்கள். அனியன் சித் திரசாலா ஒளிப்பதிவு செய்திரு க்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெ. செபாஸ்டியன் ரோஸாரி யோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆ ண்டனி மேற்கொள்ள சண்டை காட்சிகளை ஸ்டன்னர் சாம் அ மைத்திருக்கிறார். கிரைம் வித் சஸ்பென்ஸ் திரில்லராக தயா ராகி இருக்கும் இந்த திரைப்ப டத்தை கோல்டன் ரீல் இண்டர் நேஷனல் புரொடக்ஷன் நிறுவ னம் சார்பில் தயாரிப்பாளர் கல் பனா ராகவேந்தர் தயாரித்தி ரு க்கிறார். பிரசாத் பிரபாகர் புரொ டக்ஷன் நிறுவனம் சார்பில் தயா ரிப்பாளர் பிரசாத் பிரபாகர் இ ணை  தயாரிப்பாளராக பொறுப் பேற்றிருக்கிறார். இந்தத் திரை ப்படத்தை உலகம் முழுவதும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷ னல் நிறுவனம் வழங்குகி றது

எதிர்வரும் கோடை விடுமுறை யில் திரையரங்குகளில் வெளி யிட திட்டமிடப்பட்டிருக்கும் இப் படத்தின் முன்னோட்ட வெளியீ ட்டு விழா சென்னையில் நடை பெற்றது. இந்நிகழ்வில் படக்கு ழுவினருடன் டேனியல் பாலாஜி யின் தாயார் திருமதி. ராஜலட் சு மி சிறப்பு விருந்தினராக கலந் து கொண்டார். இவர்களுடன் கி ரியா டெக் நிறுவனர்- தொழி ல திபர் பாஸ்கரன், ‘எம் ஆர் டி மியூ சிக்’ முருகன், ‘சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல்’ சிவா, நடிகர் சாருகேஷ், நடிகர் ஈஸ்வர் கார் த்திக், பாடலாசிரியர் கிரிதர் வெ ங்கட், இயக்குநர் பிரசாத் பிரபா கர், தயாரிப்பாளர் கல்பனா ராக வேந்தர் உள்ளிட்ட பலரும் கலந் து கொண்டனர். 

தயாரிப்பாளர் கல்பனா ராகவே ந்தர் பேசுகையில், ” இந்த நாளி ல் எங்களுடைய ஆர் பி எம் படத் தின் முன்னோட்டத்தை வெளி யிடுவதற்கு சிறந்த நாளாக கரு துகிறோம். நடிகர் டேனியல் பா லாஜி மறைந்து இன்றுடன் ஓரா ண்டு நிறைவடைகிறது. அவரு டைய தாயார் ராஜலட்சுமி அம் மா அவர்கள் இங்கு சிறப்பு விரு ந்தினராக வருகை தந்திருக்கி றார். இவரை விட வேறு யாரை யும் சிறப்பு விருந்தினராக அ ழைக்க தோன்றவில்லை. அவர் இங்கு வருகை தந்து சிறப்பித்த தற்கு நன்றி தெரிவித்துக் கொ ள்கிறேன். 

படத்தின் இயக்குநர் பிரசாத் பிர பாகர் நடிகர் டேனியல் பாலாஜி யை சந்தித்து பேச்சு வார்த்தை ந டத்தி, படத்தின் பணிகள் தொ டங்கிய நிலையில்.. எங்களு டைய தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததற் காக நன்றி தெரிவிப்பதற்காக டேனியல் பாலாஜியை கா ணொளி மூலம் சந்தித்தேன். அ ந்த சந்திப்பில் உங்களை நான் இதற்கு முன் மேடையில் பாடகி யாக சந்தித்திருக்கிறேன் என் றார். அந்த சந்திப்பின்போது, ‘நான் விரும்பும் பாடலை பாடு வீர்களா?’ என கேட்டார். அந்தப் பாடலைக் கேளுங்கள். தெரிந் தால் கண்டிப்பாக உடனடியாக பாடுகிறேன் என்று சொன்னே ன். ‘தண்ணீர் தண்ணீர் ‘ எனும் திரைப்படத்தில் எம். எஸ். விஸ் வநாதன் இசையில் பி. சுசிலா அம்மா பாடிய ‘கண்ணான பூ மக னே கண்ணுறங்கு சூரியனே..’ என்ற பாடலை பாடுமாறு கேட்டு க் கொண்டார். அந்தப் பாடலை கேட்டிருக்கிறேன். ஆனால் போ திய பயிற்சி இல்லாததால் அந்த த் தருணத்தில் பாட இயலாததற் கு மன்னிக்கவும் எனக் கேட்டுக் கொண்டேன். அதன் பிறகு பயி ற்சி பெற்று அந்த பாடலை நேரி ல் வந்து பாடுகிறேன் என்றும் சொன்னேன். 

‘சிங்கார வேலனே’ என்ற பாட லை பாட இயலுமா! என கேட்டா ர். அந்தப் பாடலை உடனடியாக அந்த காணொளி மூலமாக பாடி காண்பித்தேன்.  

அவர் மிகுந்த திறமைசாலி. இதி ல் எந்த மாற்றுக் கருத்தும் கிடை யாது. சினிமா நுணுக்கங்களை பற்றியும்… நடிப்பு திறன்களை ப ற்றியும் .. திரை தோன்றலை எப் படி சக நடிகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது கு றித்தும், திரை தோற்றத்தின் போது ரசிகர்களை நடிப்பால் ஆ க்கிரமிப்பது எப்படி? என்ற நுட்ப த்தையும் அறிந்தவர். 

அவர் பெரும்பாலும் நெகடிவ்  கேரக்டரில் தான் நடித்திருக்கி றார். அதற்கு அவருடைய கண் கள் பிளஸ்ஸாக இருக்கும். 

மிகப்பெரிய நடிகராக இருந்தா லும் நிஜ வாழ்க்கையில் எளி மையாக இருந்தார். இது எனக் கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்தது. 

அதன் பிறகு அவர் கேட்ட விருப் பமான பாடலை பயிற்சி பெற்று பாடி, அதனை வாய்ஸ் மெசேஜா க அனுப்பினேன்.‌ அந்தப் பாட லை இங்கு நான் பாட விரும்பு கி றேன். இந்த பாடலுக்கான வரிக ள் நம்மிடமிருந்து மறைந்த அந் த ஆத்மாவிற்கு பொருத்தமாக இருக்கும்.

மக்களுடைய மனதில் இடம் பிடி த்த டேனியல் பாலாஜி போன்ற கலைஞர்களின் மறைவு என்ப து பேரிழப்பாகும். அவர் எந்த க தாபாத்திரத்தில் நடித்தாலும் அ தில் தன்னுடைய சிறந்த நடிப் பினை வெளிப்படுத்தி இருப்பா ர்.

இந்த படத்தில் நடிக்கும் போது அவருடன் நடித்த சக நடிகர்க ளா ன ஈஸ்வர் கார்த்திக், சாருகேஷ், பாபு , முத்து ஆகியோருடன் நி றைய நேரம் பேசி இருக்கிறார். அவர்களிடத்தில் இதுதான் என் னுடைய கடைசி படமாக இருக் கும். இதன் பிறகு நான் ஆன்மீக த்தில் முழுமையாக ஈடுபட போ கிறேன் என்று சொல்லி இருக் கிறார். 

அவரைப் பற்றி குறிப்பிடு வதற் கு இரண்டு விசயங்கள் உண்டு. நான் சின்ன வயதில் ஓரிரு தி ரை ப்படங்களில் நடித்திருக்கி றேன். பாட்டின் மீதிருந்த காதல் காரணமாக பாடகியாகி, பாட்டு பாடுவதில் தான் கவனம் செலு த்தினேன். இந்தப் படத்தில் நா ன் நடிக்கும் போது எனக்கு நம்பி க்கையில்லை. முதல் நாள் படப் பிடிப்பு தளத்திற்கு வருகை தந்த உடன் டேனியல் பாலாஜியை சந் தித்து உங்களிடம் ஒரு கோரிக் கை. நீங்கள் நடிப்பதை பார்ப்ப த ற்கு அனுமதி தர வேண்டும் என கேட்டேன். சரி என்று ஒப்புக் கொ ண்டார். இயக்குநர் ‘ஆக்சன்’ எ ன்று சொன்னவுடன், அவர் கேர க்டராக மாறி பெர்ஃபார்மன்ஸ் செய்வதை பார்க்கும்போது விய ந்து போனேன். 

இந்த திரைப்படத்தில் நடிக்கும் ந டிகர் ஈஸ்வர் கார்த்திக் – நடி கை தயா பிரசாத் பிரபாகர் ஆகி ய இருவருக்கும் இதுதான் முத ல் படம். இருவரும் முதல் நாள் ப டப்பிடிப்பில் கலந்து கொண்ட போ து டேனியல் பாலாஜியை பார்த்தவுடன் பதட்டமடை ந்தார் கள். அப்போது அவர்களிடம் நடி க்கும் போது பயப்படக்கூடாது. இ ங்கு நடிக்கும் போது நான் டேனி யல் பாலாஜி கிடையாது. அந்த கதாபாத்திரம் மட்டும்தான் என் று சொல்லி நம்பிக்கை ஊட்டி நடிக்க வைத்தார். புதுமுக கலை ஞர்களுக்கு அவர் கொடுத்த உ ற்சாகம் எனக்கும் நம்பிக்கை அ ளிப்பதாகவே இருந்தது. 

ஆர் பி எம் ஒரு சஸ்பென்ஸ் திரி ல்லர் திரைப்படம். இயக்குநர் பி ரசாத் பிரபாகர் மற்றும் ஒட்டு மொத்த பட குழுவினரும் பரிபூ ரணமாக உழைத்து உருவாக் கி யிருக்கிறோம். இந்தத் திரைப்ப டத்திற்கு அனைவருடைய ஆதர வும் வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் ” என்றார்.

டேனியல் பாலாஜியின் தாயார் ராஜலட்சுமி பேசுகையில், ” டே னியல் பாலாஜி சின்ன குழந் தையாக இருக்கும்போதே ரொ ம்ப பக்தி. மூன்று வயதில் இருந் தே அவனுக்கு பக்தி அதிகம். ஸ் கூலில் இருந்து வீட்டுக்கு திரும் பி வரும்போது தேங்காய் பழம் பூ என இந்த பொருளை வாங் கி ட்டு நடந்து வருவான். பஸ்ஸி ல் வரமாட்டான்.

காலேஜ் சென்ற பிறகும் அவனு க்கு இந்தப் பழக்கம் இருந்தது. அவன் சம்பாதித்த பணத்தைக் கூட கோயிலுக்காகச் செலவு செய்தான். 

அவன் நடிச்ச படம். இதனை எல் லாரும் பார்த்து அவனை ஆசீர்வ திக்க வேண்டும்.  

கௌதம் மேனன், பாலாஜி இவ ர்களெல்லாம் ஒன்றாக படித்த வ ர்கள். ஆரம்பத்தில் அவனுக்கு ந டிப்பதில் விருப்பமில்லை. பிற குதான் வந்தது. முதலில் அவர்க ள் அப்பா வேண்டாம் என்று தா ன் சொன்னார். பிறகு ‘வேட்டை யாடு விளையாடு ‘ படத்தை பார் த்துவிட்டு அவர் சந்தோஷம் அ டை ந்தார். எப்போதும் அவன் …அ வன் இஷ்டப்படி தான் இருப்பான். 

கடைசி அஞ்சு நாளைக்கு முன் னாடி அவனுடைய பிராப்பர்ட்டி எல்லாம் தம்பிக்கு தான் என்று சொல்லிவிட்டார். கடைசி கட்டத் தில் அவன் பேசிய பேச்சுகளை கவனித்தேன். அவரிடம் பேச்சு கொடுத்த போது, ‘நான் இருக்க மாட்டேனே!!’ என்று சொன்னா ன். நான் இன்னும் இருக்கும் போது… அவன் இல்லையே!! எ ன்ற குறை இப்போது என் மன தில் இருக்கிறது ” என்றார்.

கல்வியாளர் – ஆராய்ச்சியாளர் – தொழிலதிபர் பாஸ்கரன் பேசு கையில், ” கல்லூரியில் படிக்கு ம் போது வாரம் இரண்டு திரைப் படங்களை பார்ப்பேன். அதன் பி றகு வேலை நிமித்தம் வெளிநா டுகளுக்கு பயணிக்கும் போது கிடைத்த ஓய்வு நேரத்தில் திரை ப்படங்களை பார்ப்பேன். தொழி ல் தொடங்கிய பிறகு சினிமா பார்ப்பது என்பது அரிதாகிவிட் டது. ஆனால் வெளிநாடுக ளுக் கு சென்று அங்குள்ள தமிழர்க ளிடம் பேசும் போது தான் சினி மாவின் வீரியம் எனக்கு புரிந்த து. 

மலேசியா, சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளில் தமிழ் மொழி பேசுகிறார்கள் என்றால் அதற்கு முழு முதல் காரணம் சினிமா தா ன். ஏனென்றால் அங்கு பள்ளி ப டிப்பில் தமிழ் கிடையாது. 

அமெரிக்காவில் கூட கடந்த 20 ஆண்டுகளாக தான் நம்மவர்க ள் தமிழில் படிக்கிறார்கள். தமிழ் நாட்டிற்கு வெளியே இருக்கும் த மிழர்கள் இன்று தமிழ் பேசுகி றார்கள் என்றால் அது திரைப்ப டங்களை பார்த்து தான். புத்தகத் தை வாசித்து தமிழ் தெரிந்து கொள்வதில்லை. ஆப்பிரிக்கா வின் என்னுடைய நண்பர்களை சந்திக்கும் போது அவர்கள் தமி ழ் பேசுவார்கள். 

நான் இது இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால்.. தமிழ் தி ரைப்படத்தில் ஒரு பக்கம் கான்ட் ரவர்ஸியல் பேசினாலும்.. மற் றொரு பக்கம் சமூகத்திற்கு என் ன செய்து கொண்டிருக்கிறது என்றால் தமிழை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிற து. 

இந்தோனேசியாவில் ஒரு ஆல யத்தில் ஒரு சின்ன பெண் முரு கனின் பாடலை அற்புதமாக பா டினார். அந்தப் பெண் அந்த நாட் டை சேர்ந்த ஐந்தாம் தலைமு றை பெண். அந்தப் பெண்ணி ற் கு தமிழ் தெரியவில்லை. ஆனா ல் தமிழில் அற்புதமாக பாடுகி றார். அந்தப் பாட்டின் பொருள் தெரியவில்லை. ஆனால் தலை முறை தலைமுறையாக அந்தப் பாடலை அவருக்கு சொல்லி கொடுத்திருக்கிறார்கள். 

மொழி மீது ஆர்வம் ஏற்பட வே ண்டும் என்பதற்காகவே சினி மாவை பார்க்க வேண்டும். புத்த கத்தை வாசிக்குமாறு கேட்டால் மறுத்து விடுவார்கள்.

அதில் தருணத்தில் சினிமாக் காரர்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன் வைக்கி றேன். உங்களுடைய படத்தின் வன்முறையை சற்று குறைத் துக் கொள்ளுங்கள்.

தமிழர்கள் உலகம் முழுவதும் 70, 80 நாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டில் தயாரா கும் திரைப்படங்களை பார்த்து தான் மொழியை பேசுகிறா ர்க ள். 

இந்தப் படம் வெற்றி பெற வாழ் த்துகிறேன். அனைவரது ஆசீர் வாதமும், ஆதரவும் இந்தத் தி ரைப்படத்திற்கு வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் ” என்றா ர்.

இயக்குநர் பிரசாத் பிரபாகர் பே சுகையில், ‘‘ அமரன் போன்ற வெற்றி படத்தை வெளியிட்ட சோ னி பிக்சர்ஸ் இன்டர்நே ஷ னல் நிறுவனம் இந்த ஆர் பி எம் படத்தை பான் இந்திய திரைப்ப டமாக வெளியிடுகிறார்கள். இ தற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  

டேனியல் பாலாஜி நடித்த திரை ப்படம் வெளியாகி ஒன்றரை ஆ ண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவரை இந்தப் படத்தில் மிகவும் ஷட்டிலாக நடிக்க வைத்திருக் கிறேன். 

அவருக்குள் ஒரு டைரக்டர் இரு க்கிறார். அவருக்குள் ஒரு ரைட் டர் இருக்கிறார். அவருக்குள் ஒ ரு புரொடக்ஷன் கண்ட்ரோலர் இ ருக்கிறார். அவருக்குள் ஒரு சினிமாவுக்கான எல்லாம் இருக் கிறது. அவரை ஏமாற்றவே முடி யாது. ஒவ்வொரு காட்சியில் நடி க்கும் போதும் அந்த காட்சிக்கா ன முழு பின்னணியையும் கேட் டு தெரிந்து கொள்வார். குறிப்பி ட்ட காட்சியில் நடிக்கும் போது நான் என்ன மனநிலையில் இரு க்க வேண்டும் என்பதனை கேட் டு தெரிந்து கொள்வார். அப்போ துதான் அந்த கதாபாத்திரத்தின் உணர்வை உள்வாங்கி நடிப்பத ற்கு உதவியாக இருக்கும் என் பார். அவருடன் பணியாற்றிய ஒ வ்வொரு நிமிடங்களும் மறக்க முடியாதவை. 

சில பேருடைய அன் பிரசன்ஸ் ( Unpresense) தான் நமக்கு பிரசன் ஸ் ஆக இருக்கும். அவர் இல்லா மல் இருக்கும்போது தான் அவ ரை பற்றி நிறைய பேசுவோம். அந்த மாதிரி ஒரு மனிதர்தான் டேனியல் பாலாஜி. 

அவர் நடித்த இந்தப் படம் நன்றா க வந்திருக்கிறது. அவருடைய ஆசி இந்த படத்திற்கு இருக்கும். ரசிகர்களும் இந்த படத்தை ஆத ரிக்க வேண்டும் என கேட்டு க்கொள்கிறேன் ” என்றார்.