வேதா திரைப்பட விமர்சனம்
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் வேதா பேர்வா ( சார் வாரி ) என்னும் தலித் சமூகத்தை சேர்ந்த பெண் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது, அவளுக்கு குத்துச்சண்டை கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் ஆசை வருகிறது… இதற்கிடையில், இந்திய ராணுவத்தின் கூர்க்கா ரேஜ்மென்டில் ஒரு அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருக்கும் அபிமன்யு( ஜான் ஆபிரகாம்) தீவிரவாதிகளை பிடிக்கும் விஷயத்தில் மேலதிகாரிகளின் கட்டளையை மீறி அவர்களை கொன்று விடுகிறான்… இதன் காரணமாக அவன் ராணுவத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுகிறான். அவனுடைய மனைவியான (தமன்னா ஆரம்பத்திலேயே தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்து விடுகிறார். அவனுக்கு யாரும் இல்லாத சூழலில், அவனுடைய மாமா வசிக்கும் கிராமத்திற்கு வருகிறான். அவர் அவனுக்கு அவ் ஊரில் உள்ள கல்லூரியில் பாக்ஸிங் கோச் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி, அவனை அவ்வூரில் தங்க வைக்கிறார்...
வேதா பாக்ஸிங் கற்றுக் கொள்வதற்கு தடைக்கல்லாகஇருக்கிறான் அக்கிராமத்தில் வசிக்கும் பல கிராமங்களுக்கு ஊர் தலைவராக தலைவராக இருக்கும் ஜிஜேந்திரா பிரதாப் சிங்கின் தம்பி. அவனுடைய தடையையும் மீறி வேதாவிற்கு பாக்ஸிங் கற்றுக் கொடுக்கிறான் அபிமன்யு( ஜான் ஆபிரகாம் ). இதன் விளைவாக ஜிஜேந்திர பிரதாப் சிங்கிற்கும்- அபிமன்யு கும் பகை உருவாக்க தொடங்குகிறது. இந்நிலையில் வேதாவின் அண்ணன் உயர் ஜாதி சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலிக்கிறான்… இவ்விஷயம் ஜிஜேந்திர பிரதாப் சிங்கிற்கு தெரிய, அவன் வேதாவின் அண்ணனையும், அவனுடைய காதலியையும் திருமணம் நடத்தி அவர்களை கொன்று விடுகிறான். அதுமட்டுமில்லாமல் வேதா,வேதாவின் அக்காவையும் கொன்று விடும்படி கூறி விடுகிறான். வேதாவின் அக்காவையும் கொன்று விடுகிறான். இதிலிருந்து வேதா தப்பித்தாளா…? அபிமன்யு அவளைக் காப்பாற்றினானா….? என்பதே மீதி கதை.
முதலில் வட இந்தியாவில் உள்ள சாதிக் கொடுமைகளை பற்றி ஒரு படம் எடுத்ததற்கு இப்படக் குழுவை நாம் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்…
இரண்டாவது, இப்படத்தில் ஜான் ஆபிரகாம் கதாநாயகனாக நடித்திருந்தாலும், கதாநாயகியின் பெயரான வேதாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து, வேதாவை தலைப்பாக வைத்து எடுத்ததற்கு கண்டிப்பாக நாம் ஜான் ஆபிரகாமை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்… அதுவும் தலித் சமூகத்தை சேர்ந்த பெண்ணுடைய பெயரை தலைப்பாக வைத்ததற்கு.
நடிப்பை பொறுத்தவரை ஜான் ஆபிரகாம், சார்வாரி, அபிஷேக் மூன்று பேருடைய நடிப்பு சிறப்பு. உண்மையிலேயே சண்டைக் காட்சியில் ஜான் ஆபிரகாம் அதிகம் உழைத்திருக்கிறார். அவருக்கு ஏற்ற கதாபாத்திரம்.
அதுபோலவே கேமரா, கலை, டி ஐ, சண்டை காட்சிகள் அனைத்தும் சிறப்பு.
தமன்னா பெயர் அளவிற்கு மட்டுமே பயன்பட்டு இருக்கிறார். ஜான் ஆபிரகாமை Awards படத்தை முடித்து இருக்கலாம். அப்படி செய்தால் அது வழக்கம் போல ஒரு ஹீரோயிசம் உள்ள ஒரு படமாக அமைந்திருக்கும். அப்படி செய்யாமல் நீதிமன்றம் வரை சென்று இருப்பது சிறப்பு…
MOVIE RATING: 4/5.
MOVIE REVIEW BY B4U MEDIA TEAM.