ஆனால் அரசின் நடவடிக்கைகள் அந்த திசை வழியில் இல்லை அதற்கு மாறாக மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல்
மத்திய அரசு பி.எஸ்.என்.எல் பொதுத் துறை நிறுவனத்தை புறக்கணித்து தனியாருக்கு 5 -ஜி அலைகற்றை சேவை யை கொடுக்க தயாராகிறது. பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு மாநில ஊழியர் சங்க தலைவர் எஸ்.செல்லப்பா குற்றச்சாட்டு . இந்திய நாட்டின் பொருளாதார மேம்ப்பாட்டிற்கும் , அரசின் கொள்கை முடிவுகளை அமலாக்கவும், தொலை தொடர்பு துறையில் ஒரு பலமான பொதுத்துறை நிறுவனம் தேவை என்பதை அரசாங்கம் பாராளு மன்றத்திலேயே தெரிவித்துள்ளது .
ஆனால் அரசின் நடவடிக்கைகள் அந்த திசை வழியில் இல்லை அதற்கு மாறாக மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் அதன் 4ஜி சேவைகளை துவக்க விடாமல் பல்வேறு வழிகளில் தடைகளை ஏற்படுத்தி வருகிறது . அரசின் கொள்கை முடிவால் , பி.எஸ். என்.எல் நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 80,000 ஊழியர்களும் அதிகாரிகளும் , விருப்ப ஓய்வு திட்டம் என்ற பெயரில் வீட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டனர். அவர்கள் பார் த்து வந்த பெரும்பாலான பணிகள் எல்லாம் அவுட் சோர்ஸிங் என்ற முறையில் ஒப்பந்தம் விடப்பட்டது . ஒப்பந்த பணி என்ற பெயரிலும், செலவு குறைப்பு என்ற பெயரிலும் தொ லை தொடர்பு சேவைக்கு சம்பந்தமில்லாத பல ஏஜென்ஸிடம் தொலை தொடர்பு பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த புதிய ஒப்பந்த முறை அமலாக்கப்பட்டதால் பி.எஸ்.என்.எல் தொலை தொடர்பு சேவைகள் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. குறிப்பாக , விருப்ப ஓய்வு திட்டத்தில் வெளியேறிய ஊழியர்கள் செய்து வந்த லேண்ட் லைன் மற்றும் ப்ராட் பேண்ட் பராமரிப்பு பணிகளை அவுட்சோர்ஸிங் என்ற முறையில் ஒப்பந்ததாரருக்கு விடப்பட்டது . அது அந்த பணிகளை செய்வதற்கு தேவையான ஒப்பந்த ஊழியர்களை , ஒப்பந்தக்காரர்கள் நியமிக்கவில்லை .
உதாரணமாக விருதுநகர் மாவட்டம் அருப்பு க்கோட்டை விருதுநகர் சாத்தூரை சுற்றி 40 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள 18 தொலைபேசி நிலையங்களில் மொத்தம் 4 ஒப்பந்த தொழிலாளர்கள் மட்டுமே பணி அமர்த்தப்பட்டுள்ளனர் . இன்னும் பல மாவட் டங்களில் நூற்றுக்கணக்காண தொலைபேசி நிலையங்களில் ஒப்பந்த தொழிலா ளர்க ளே இல்லை . அதனை பி. எஸ்.என்.எல் நிர்வாகம் கண்டு கொள்ளவும் இல்லை முறைப்படு த்தவும் இல்லை. அதனால் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் , முறையான பரா மரிப்பு இல்லாததால் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் லேண்ட் லைன் மற்றும் ப்ராட்பேண்ட் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகின்றன .
தமிழகத்தில் நவம்பர் மாதம் மட்டும் சுமார் 10,000 லேண்ட் லைன்களும் 6,000 பிராட்பே ண்ட் இணைப்புக்களும் சரண்டர் ஆகி உள்ளன. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக டவர் களை பராமரிப்பதற்கு கூட போதிய ஆட்கள் ஒல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனா ல் செல்போன் சேவைகளும் கடுமையான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன . நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 250 மொபைல் சந்தாதாரர்கள் சரண்டர் செய்துள்ளனர் . பல ஆண்டுகளாக பிற நிறுவனங்களிலிருந்து பி.எஸ்.என்.எல் – க்கு மாறி வந்த சூழ்நிலையில் மாற்றம் ஏற்ப ட்டு அக்டோபர் மாதம் மட்டும் தமிழ்நாடு முழுவதும் 50, 000 சந்தாதாரகள் தனியார் நிறு வனங்களுக்கு மாற்றலாகி சென்றுள்ளனர் .
அதே போல வாடிக்கையாளர் சேவை மையங்கள் பலவும் தனியார்களுக்கு கொடுக்க ப்பட்ட காரணத்தால் , பொது மக்களுக்கு சிறந்த சேவைகள் கிடைப்பதில் பலகீனம் ஏற்ப ட்டுள்ளது . பி.எஸ்.என்.எல் சிறந்த சேவையை உறுதிப்படுத்தாத காரணத்தால் தனியாரு க்கு சாதகமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 3000 ஒப்பந்த தொழிலாள ர்களுக்கு சுமார் 18 மாத காலம் சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்தது . செய்த வேலைக் கு சம்பளம் வழங்கிட கேட்டு உயர் நீதி மன்றம் சென்று சாதகமான உத்தரவுகளை ஒப்பந்த தொழிலாளர்கள் பெற்றனர் .
ஏற்கனவே ஒப்பந்த தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கி வந்த நிர்வாகம் நீதி மன் ற தீர்ப்பு வந்தவுடன் ஆட்குறைப்பை தீவிரப்படுத்தியது சம்பளமே இல்லாமல் 18 மாத காலமாக வேலை செய்த ஒப்பந்த தொழிலாளர்களை அனைத்து சட்ட விதிகளையும் மீறி மனசாட்சியோ மனித பண்புகளோ இல்லாமல் நடந்து கொள்கின்றது . ஒப்பந்த தொழிலா ளர்கள் வாங்கும் அற்ப சம்பளத்தை குறைத்தால் பி.எஸ்.என்.எல் நிதியை வளப்படுத்த முடியும் என்று தவறான கணக்கீடு செய்கின்றது. சேவை செய்வதற்கு தேவையான ஊழிய ர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் செலவுக் குறைப்பு என்பதையே செயல்படுத் துகின்றது .
முதலிலேயே சரி பாதி ஊழியர்கள் விருப்ப ஓய்வு என்ற பெயரில் சென்ற பின்னர் , ஒப்பந் த ஊழியர்களையும் பணி நீக்கம் செய்கின்ற காரணத்தால் சேவை கடுமையாக பாதிக்கி றது . இன்று வரை நிர்வாகம் தொழிற்சங்கங்களை அழைத்து பேசவில்லை . எனவே 09.12.2020 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் , ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்று உள்ளன. அடுத்த கட்டமாக 11.12.2020 அன்று அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் , மாலை நேர தர்ணா போராட்டமும் , பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைப்பெற்ற து.17.12. 2020 அன்று அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் , ஒரு அமைதியான உண்ணா விரத போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.
இவற்றையெல்லாம் தாண்டி , 21.12.2020 முதல் காலவரையற்ற உண்ணா விரதம் மேற்கொ ள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. தீர்வு காண வேண் டிய தமிழ் மாநில நிர்வாகம் சேவைகள் தொடர்பான பணிகளை விரைவு படுத்த வேண் டும் , இல்லையெனில் தமிழக பி.எஸ்.என்.எல் தொடர்ந்து போராட்டங்கள் தவிர்க்க இயலா தது ஆகிவிடும் என்று எஸ். செல்லப்பா தெரிவித்தார்.