மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை அழிக்கும் திட்டங்களுக்கு அனுமதி வழங்கி வரு கிறது.
ஹைட்ரோகார்பன் திட்டம், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரளா விற்கு அனுமதிகளை எதிர்த்து தமிழகம் வரும் மத்திய அமைச்சர்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவோம் பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை ..
மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை அழிக்கும் திட்டங்களுக்கு அனுமதி வழங்கி வரு கிறது. ஒருபக்கம் பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர்கள் தமிழக சட்டமன்றத் தேர்த லில் வாக்கா ளர்களின் ஆதரவை தேட முயற்சித்து வரும் நிலையில்,மத்திய அரசு தமிழக விவசாயிகளை யும் பொது மக்களையும் அழிக்கும் நோக்கோடு பேரழிவு திட்டங்களுக்கு தொடர்ந்து அனுமதி வழங்கி வருவதுது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசாங்கம் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவி க்கப்பட்டு செயல்முறைக்கு வந்துள்ளன. இந் நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மு ன்னதாக நிலப்பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்ப ட்டுள் ளதாக ஒரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்னதாக காவிரி டெல்டா மாவட்டங்களை ஒட்டியிருக்கிற வங்கக்கடல் ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு அனுமதி வழங்குவோம் என்று அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது இது உள்நோக்கம் கொண்டது குறிப்பாக நிலப்ப குதிகளில் பாதுகாக்கப்பட்ட மண்டலம் அறிவித்துள்ள நிலையில் ஆழ்கடல் அனுமதி என் கிற பெயரில் பூமிக்கு கீழாக குழாய்களைச் செலுத்தி நிலப்பகுதிகளிலும் முதற் கட்டமாக ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுப்பதற்கான சதி செயலில் மத்திய அரசு ஈடுபடுவது வெ ளிப்பட்டுள்ளதை அனுமதிக்க மாட்டோம்.
அதே போல தமிழ்நாட்டில் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு ஆய்விற்கா ன அனுமதியை ஏற்கனவே மத்திய அரசாங்கம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக தமிழ க விவசாயிகளுக்கு எதிராக வழங்கி உள்ளது. இந்த நிலையில் வரும் 2021 சட்டமன்ற தேர்த லை கருத்தில் கொண்டு கேரள அரசாங்கம் புதிய அணை கட்டுவதற்கு விரைவான நடவடி க்கைகளை துவங்கி உள்ளதாகவும் அதற்கான அனுமதி கோரப்பட்டு உள்ளதாகவும் அறி வி ப்புகளை வெளியிட்டு வருவது மதுரை மண்டலத்தை சார்ந்திருக்கிற விவசாயிகள் மத் தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
எனவே மத்திய அரசாங்கம் புதிய அணை கட்டுவதற்கு ஆய்விற்கான அனுமதியை உட னடியாக திரும்பப் பெற வேண்டும். கேரள அரசு புதிய அணை கட்டுமான பணியை தடு த்து நிறுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளுக்கு மத்திய அரசாங்கம் நவம்பர் இறுதிக் குள் தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.இல்லையேல் ஜனவரி 2021முதல் தமிழ கத்திற்கு வருகை தரும் மத்திய அமைச்சர்களுக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பா ட்டத் தில் ஈடுபட்டு போராட்டங்களை தீவிரப்படுத்துவோம் என எச்சரிக்கிறேன்.
இப்போராட்டத்தில் விவசாயிகள், மீனவர்களையும் முழுமையாக பங்கேற்க செய்வோம். அரசியல் கட்சிகளின் ஆதரவை பெறுவோம்.அதற்கான வகையில் விரைவில் பேச்சுவா ர்த்தைகளை துவங்க உள்ளோம். மத்திய அரசு தமிழக விவசாயிகளை சட்டமன்றத் தேர் தல் நேரத்தில் போராட்டக் களத்திற்கு தள்ளுவது வேதனையளிக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக் கிற து. எனவே பிரதமர் உடனடியாக தலையிட்டு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி யையும், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு கேரளாவிற்கு கொடுக் கப் பட்ட அனுமதியையும் உடனடியாக ரத்து செய்ய முன்வர வேண்டும் என்று வலியு றுத் துகிறேன்.
வரும் டிசம்பர் 1 முதல் தமிழகம் முழுமையிலும் விவசாயிகள் பிரச்சார பயணம் கோட்டை நோக்கி அறிவித்திருந்தோம். கொரோனா ஊரடங்கு தொடர்வதால் பிப்ரவரி மாதத்தில் பயணத்தை துவக்குவது என முடிவு எடுத்திருக்கிறோம் என்றார்.மேற்கண்டவாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார் சென்னை மண்டல தலைவர் வி கே துரை சாமி மாவட்ட செயலாளர் சைதை சிவா உடனிருந்தனர்.