இனி என் வாழ்நாளில் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன்: எஸ்.வி.சேகர்

இனி என் வாழ்நாளில் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன்: எஸ். வி.சேகர்

தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் உத்தரவாத மனுத்தாக்கல் செய்துள்ளார்.

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவிப் போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலை வர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க ப்படு ம் என்றும், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளித்து பேசும் போது நடிகர் எஸ்.வி.சேகர் தேசியக் கொடியை  அவமதித்ததாகவும், முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாகவும் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் அளித்த புகாரின் பேரில், சென்னை குற்ற ப்பிரிவு போலீஸார், நடிகர் எஸ்.வி.சேகர் மீது தேசிய கவுரவப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில், வழக்கில் காவல் து றையினர் தன்னைக் கைது  செய்யக் கூடும் எனக் கூறி, எஸ்.வி.சேகர் சென் னை உயர் நீ திமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி .சேகர் வருத்தம் தெ ரிவித்து உத்தரவாத மனுத்தா க்கல் ஒன்றைத் தாக்கல் செய்தார்.அந்த மனு வில், தனது நி லையை விளக்கியுள்ள எஸ்.வி.சேகர் தனது தாய் தந்தையரைவிட தேசியக் கொடியை அதிகம் நேசிப்ப தாகத் தெரிவித்துள்ளார். தேசியக் கொடியை அவம திக்கும் வகையில் பேசியதற்கும், தமிழக முதல்வர் குறித்துப் பேசியதற்கும் வருத்தம் தெரிவிப்பதாகவும், தன் வாழ்நாள் முழுவதும் இனி ஒருபோதும் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என்றும் அந்த உத்தரவாத மனுவில் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவைப் பதிவு செய்த நீதிபதி, எஸ்.வி.சேகரை வரும் செப்டம்பர் 7 ம் தேதி வரை கைது செய்யக் கூடாது என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் திங் கட்கிழ மைக் கு (செப்.7) ஒத்திவைத்தார்.