100 நாட்கள் ஆட்சியை நிறைவு செஞ்சிருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவனத்திற்கு:
அரசியலையும் மக்கள் பணியையும் தொழிலாகக் கருதுபவனல்ல நான். அதை வாழ்க் கையாக, மூச்சாகக் கருதுபவன். 23 வயதில் இந்திய நாட்டின் ஜனநாயகம் காக்கப்பட நெருக்கடி நிலையை எதிர்த்ததால் சிறை வைக்கப்பட்டவன் நான். ‘ஸ்டாலின் அரசி ய லுக்கு அழைத்து வரப்படவில்லை, இழுத்து வரப்பட்டவன்’ என்று ஒரு வரியில் எனது அர சியல் வாழ்க்கையை கருணாநிதி சொன்னார்.
இன்று அதை நினைத்துப் பார்க்கிறேன். நாளைய தினம், பழம்பெருமை வாய்ந்த சென் னைக் கோட்டை கொத்தளத்தில் இந்தியத் திருநாட்டின் எழுச்சிமிகு சின்னமான தேசியக் கொடியை ஏற்றி வைக்க இருக்கிறேன். அதுவும் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைக் கொ ண்டாடும் வரலாற்றுச் சிறப்புமிகு தருணத்தில் ஏற்றப்படும் புகழ்க் கொடி அது.
மக்களுக்காக உண்மையாக உழைத்த உங்களில் ஒருவனான எனக்குக் கிடைக்கும் தனி ப்ப ட்ட மரியாதை அல்ல இது. கழகத்தின் லட்சோப லட்சம் உடன்பிறப்புகளின் எண்ண மும், கழகத்துக்காக வாக்களித்த கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பும் இணை ந்து என்னை இயக்கிக்கொண்டு இருக்கிறது. அதுதான் என்னைச் செயல்பட வைக்கிறது. அதுதான் என்னை உழைக்க வைக்க வைக்கிறது. – என்றெல்லாம் இன்று அறிக்கை விட்ட நீங்கள் ஒரு முன்னாள் முதல்வர் மகன் என்பதை விட ஒரு பத்திரிகையாளர் மகன் என்றே கண்டு பூரித்தோம்
ஆனால் நாளை ஸ்டாலின் கொடி ஏற்றும் நிகழ்வுக்கு பிரஸ் பாஸ் வைத்திருக்கும் பத்தி ரிகையாளர்களுக்கே அனுமதியில்லை என்ற புது விதிமுறைக்கு வித்திட்டது ஏன் சார்?
பத்திரிகையோ ஊடகமோ சோஷியல் மீடியாக்கள் மூலம் முதலில் செய்தியை பகிரும் ஜர்னலிஸ்டு களி டையே பாகுபாடு காட்ட வேண்டாம் என்ற கோரிக் கை யைப் புறக்க ணி ப்பது ஏன் சார்?
அண்மையில் உங்கள் கொளத்தூர் தொகுதியில் சில நிகழ்ச்சிகளுக்கு வரப் போவதாக சேதிக் கிடைத்து குவிந்த அரசு அங்கீகார ரிப்போர்ட்டர்களை பாடாய் படுத்தியது ஏன் சார்?
மேலும் கலைவாணர் அரங்கில் அசெம்பளி நடக்கும் போது அந்த ஏரியாவாசி சாலையில் நடமாடக் கூட அனுமதி மறுப்பது ஏன் சார்?
அதெல்லாம் போகட்டும்.. நீங்கள் அன்றாடம் கோட்டையில் இருந்து வீட்டுக்கு மதியம் உ ணவுக்கு வீட்டுக்கு கிளம்பும் சாலை மட்டுமில்லாமல் அதன் குறுக்குச் சாலை அனைத் தையும் பிளாக் செய்வது ஏன் சார்? நீங்கள் உணவருந்த போவது போல் எவருமே உணவு க்காக – ஏன் பசியுடன் இருக்கும் தன் பச்சைக் குழந்தைக்கு தாய்ப் பால் கொடுக்கக் கூட நீங்கள் பயணிக்கும் சாலையில் போகக் கூடாது என்று உத்தரவிடுவது ஜெயா ஆட்சியில் மறைந்து போனது தெரியுமா ஸ்டாலின் சார்?
இதை எல்லாம் விடுங்க.. கலைஞர் இருக்கும் வரை அறிவாலயத்தில் வேர்கடலை விற்று ஆறு பேர் கொண்ட குடும்பத்தைக் காப்பாற்றிய வியாபாரி தொடங்கி கிழிந்த ஜட்டிக்கு மேல் சபாரி கோட், பேண்ட் போட்டு வந்த ஜர்னலிஸ்ட் வரை பலரின் வாழ்க்கைக்கு சன் மானம் கிடைக்க வழிக் காட்டிய கலைஞரின் பாணியை மறந்தது ஏன் சார்?
தப்பா நெனச்சிக்கதீங்க.. நீங்க(ளும்) தமிழக நிரந்தர முதல்வர்-ன்னு நெனக்க ஆரம்பிச் சிட்டீங்களா? நோ ஸ்டாலின் சார்.. அது ரொம்ப தப்பு