வ.கௌதமன் இயக்கி நடிக்கும் “மாவீரா” படத் தலைப்பு “மாவீரா படையாண்டவன்” என பெயர் மாறுகிறது.
வி.கே. புரடக்க்ஷன்ஸ் தயாரிக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்க ப்ப டும் ஒரு மாவீரனின் வீர வரலாற்றை வ.கௌதமன் எழுதி இயக்குவதோடு அவரே கதை நாயகனாகவும் நடிக்கிறார். அவரோடு சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பா குபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சர ண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்க கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகம் ஆகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்க “கவிப்பேரரசு” வைரமுத்து பாடல்கள் எழுத எஸ். கோபிநாத் கேமராவை கையாள “ஸ்டண்ட்” சில்வா சண்டை காட்சியமைக்க தினேஷ் நட னம் அமைக்க பாலமுரளி வர்மன் வசனம் எழுத ராஜா முகமது படத்தொகுப்பு செய்ய நிகி ல் முருகன் மக்கள் தொடர்பை கவனிக்கிறார்.
விருத்தாச்சலம், நெய்வேலி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் முதல் கட்ட படபிடிப்பு நடத்தி ய நிலையில் விரைவில் “மாவீரா படையாண்டவன்” இரண்டாம் கட்ட படபிடிப்பினை தொ டங்கவிருக்கிறது. ஸ்டண்ட் சில்வா அவர்கள் படத்தில் வரும் உக்கிரமான மாஃபியா கேங் கு களோடு கௌதமன் மோதவிருக்கும் மிக முக்கிய சண்டைக் காட்சிக்காக மாஸ்டரின் உத வியாளர் சிவாவை வைத்து தினமும் அதிகாலை மூன்று மணி நேரம் மார்ஷியல் ஆர் ட்ஸ் உள்ளிட்ட மிக கடுமையான பயிற்சியினை அளித்துக் கொண்டிருக்கிறார். அனைத்து வித வயதினரும் கொண்டாடும்படி ஒரு அதிரடியான ஆக்க்ஷன் திரைப்படமாக வெளிவந் து தமிழ் திரையுலகில் “மாவீரா படையாண்டவன்” ஒரு மாபெரும் பேரதிர்வை ஏற்படுத்து ம் என உறுதிபட சொல்கிறார் இயக்குனர் வ.கௌதமன்.