வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க ஏதுவாக, முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை
வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க ஏதுவாக, முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும் – சீமான் வலி யுறுத்தல்
உசிலம்பட்டி பகுதிகளிலிருக்கும் வேளாண் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் நி றை வேற்றப்பட்ட உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டப்பாசனத்திற்கு வைகை அ ணை யிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படவில்லையெனும் செய்தி கவலையைத் தருகிறது.
‘உசிலம்பட்டி 58 கிராமப்பாசனக்கால்வாய்’ எனும் திட்டமானது கடந்த 1996ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள 110 கிராமங்களிலுள்ள ஏறத்தாழ 6,000 ஏக்க ர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் மூல ம் விளைநிலங்களின் பாசன வசதி நிறைவு செய்யப்படுவதோடு மட்டுமின்றி, அப்பகுதி மக்களின் குடிநீர்த்தேவையையும் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
நீண்டகால இழுத்தடிப்புகளுக்குப் பிறகு, கால்வாய் வெட்டப்பட்டு மூன்று முறை தண்ணீர் திறந்துவிடப்பட்டும் கால்வாயிலிருந்து கண்மாய்களுக்குத் தண்ணீர் போய்ச்சேரவி ல் லை. கால்வாய் கரைகள் முறையாகக் கட்டப்படாது பலமில்லாத வகையில் இருந்த தா லேயே வழியிலேயே உடைப்பெடுத்து கண்மாய்களுக்கு உரிய தண்ணீர் சென்று சேரவில்லை.
மீண்டும் சரிபார்த்து கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் உரியப் பருவக்காலத்திற்குத் தண் ணீர் திறந்துவிட வேண்டுமெனும் கோரிக்கையை அரசு புறக்கணித்ததினால், விவசாயி கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.
அணை முழுக்கொள்ளளவை எட்டினால் மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் எனக்கூறி நீர்வ ளத்துறை அதிகாரிகள் கைவிரிப்பதால், உசிலம்பட்டி வேளாண் பெருங்குடி மக்கள் பெ ரும் அல்லலுக்கு ஆட்பட்டு வருகின்றனர். பெருந்தலைவர் காமராசரது ஆட்சிக்காலத்தில் வைகை அணை கட்டப்பட்டப்பிறகு, கடந்த 62 ஆண்டுகளில் 26 முறை மட்டுமே அணை நிரம்பியுள்ளதால், அணை நிரம்பும்போதுதான் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் என க்கூறுவது திட்டமிட்டு வஞ்சிக்கும் கொடுஞ்செயலாகும்.
வைகை அணை தனது முழுக்கொள்ளளவை எட்ட வேண்டுமானால் முல்லைப்பெரி யாற்று அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதைத்தவிர வேறு வழியில்லை.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தினால் மட்டும்தான் வைகை அணைக்குத் தேவையான நீர்த்தேவையை நிறைவுசெய்ய முடியும்.
2012ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தீர்ப்பின் வழிகாட்டுதல்களை அடிப்படை யாகக்கொண்டு, 142 அடியாக நிலைநிறுத்தப்பட்ட முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதே இச்சிக்கலுக்கான நிரந்தரத்தீர்வாக அமையும்.
இது தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்க ளுக்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பாசனத்திற்கும், நீர்த்தேவைக்கும் பயன்ப டக்கூ டியதாக இருக்கும்.
ஆகவே, வைகை அணையின் தண்ணீர்வரத்தை உறுதி செய்யும் வகையில், 152 அடியாக முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி, வைகை அணையின் முழு க் கொள்ளளவு நீர்ப்பிடிப்பை நிறைவு செய்ய வேண்டுமெனவும், உசிலம்பட்டி 58 கிராம கா ல்வாய் திட்டப்பாசனத்திற்கு உரியப் பருவக்காலத்தில் ஆண்டுதோறும் தண்ணீர் திறக்க ஏதுவாக நிரந்தர அரசாணை வெளியிட வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட் சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி