விருதுநகர் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மற்றும் இன்னர்வீல் கிளப் ஆப் இராஜபாளையம்

விருதுநகர் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மற்றும் இன்னர்வீல் கிளப் ஆப் இராஜபா ளையம்

தேசிய கண்தான இரு வார விழா…..

விருதுநகர் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மற்றும் இன்னர்வீல் கிளப் ஆப் இராஜபா ளையம் சஞ்சீவி ஹில்ஸ் ஆகியன இணைந்து தேசிய கண்தான இரு வார விழா இரா ஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நி லையத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.கருணாகர பிரபு தலைமை வகித் தார். இன்னர்வீல் கிளப் பொருளாளர் .சித்ரா சுப்பிரமணியன், இன்னர்வீல் கிளப் மாவட்ட சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் உஷாராணி பொன்னுசாமி மற்றும் ராஜீ பாலசு ப்ரம ணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. ..வட்டார அரசு கண் மருத்துவ உதவியாளர் அப்துல்காதர் அனைவரையும் வரவேற்றார்….

சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்ப சங்க திட்ட மேலாளர் டாக்டர் பொன்னுசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

அவர் பேசும்போது
கண்தானம் செய்வது எப்படி? அதை பதிவு செய்வது பற்றியும் ஒருவர் கண்தானம் செய் வதால் தற்போது நான்கு நபர்களுக்கு கருவிழி மாறறு அறுவை சிகிச்சை மூலம் பார்வை கிடைக்கும். இருக்கும் போது இரத்ததானம் , இறந்தபின் கண்தானம் மற்றும் உடல்தானம் செய்ய பொதுமக்கள் அனைவரும் முன் வரவேண்டும்…என அவர் கூறினார்…. இந் நிகழ் ச்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள், மற்றும் ஏராளமான பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்… இன்று 180 பேர் வரை கண் தானம் செய்வதாக பதிவு செய்துகொண்டனர்…. கல்லமநா ய க்கன்பட்டி  அரசு மருத்துவமனை கண் மருத்துவ உதவியாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.