விமர்சனங்கள்_படங்களுக்கு_மட்டும்_இருக்கட்டும்..!

விமர்சனங்கள்_படங்களுக்கு_மட்டும்_இருக்கட்டும்..!

 விமர்சனங்கள்_படங்களுக்கு_மட்டும்_இருக்கட்டும்..!

ஒருவரின் மணவாழ்க்கை முறிவு என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல,அதை பொது வெ ளியில் விமர்சிக்க வேண்டிய தேவையும் இல்லை.நேற்று வரை தலையில் தூக்கி வைத்து விட்டு கொண்டாடிய ஒரு கலைஞரை,ஒரே நாளில் மட்டமான வார்த்தைகளால் தூற்றுவது அறியாமையின் வெளிப்பாடு இன்றி வேறில்லை.

திருமண வாழ்க்கை வெற்றி என்பது எல்லோருக்கும் அமையாது.அதுவரை சாதனையாள னாக போற்றப்பட்ட எத்தனையோ பேர் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கைத்துணை சரி யாக அமையாத ஒரே காரணத்துக்காக தங்களுடைய பிடித்த துறைகளில் இருந்து விலகி யே சென்று இருக்கிறார்கள்.

இரு மனங்கள் இணைந்த திருமண வாழ்க்கை தோல்வி எனும் போது ஒருவரை மட்டுமே தூற்றுவது தவறு.அது அவரின் புகழ் வெளிச்சத்தை குறைக்க பொறாமையால் கூட இரு க்கலாம். யார் கண்டது..?இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் பரஸ்பரம் பிரிந்து இருக் கிறார்கள்.அது அவர்கள் விருப்பம்.

தனுஷ் என்ற கலைஞனை சாதாரணமாக,ஒரு நடிகர் என்ற வட்டத்தில் அடைத்து விட முடி யாது.தமிழ்நாட்டின் எங்கோ ஒரு சிற்றூரில் பிறந்து,உலக சினிமா கலைஞர்களின் கன வான ஹாலிவுட் திரைத்துறை வரை தடம்பதித்து சாதித்துள்ளார்.அது அவரின் விடா முய ற்சிக்கு கிடைத்த வெகுமதி அது.

ஒன்றை பெற்றால்,மற்றொன்றை இழக்க வேண்டும் என்ற விதி எல்லோருக்கும் பொதுவா னதே…!திருமணமான புதிதில் மணமக்களை வாழ்த்தி மனம் குளிர செய்துவிட்டு, அதுவே மணமுறிவு என்றால் சேற்றை இரைப்பது சரியல்ல..’கூத்தாடிகள் தானே..’தானே என்ற வா ர்த்தைக்கு பின்னால் எத்தனை பேருடைய வாழ்வாதாரம் சுழல்கிறது என்று தெரிந்தால் நாம் இதை பிரையோகிக்க மாட்டோம். நாம் நினைப்பதை போல,

கலைத்துறை அவ்வளவு சுலபமல்ல..பணம்,புகழை தந்துவிட்டு காலத்தை பறித்து கொ ள்ளு ம்,குடும்பத்தை விலக்கி வைக்கும்,உறவுகளுடான நெருக்கத்தை சுருக்கி விடும்.அது கமலோ, தனுஷோ எல்லோருக்கும் பொதுவானதுதான். ஒருவருடைய பிரச்சினையை நம் மால் தீர்த்து வைக்க முடியாவிட்டாலும்,அவர்களுடைய முடிவை நாம் முழு மனதுடன் ஏற் றுக்கொள்ளதான் வேண்டும்.மாறாக ஒருவரின் பொதுவாழ்க்கையை நக்கலுக்கும், நை யாண்டிக்கும் இரையாக்கி அதில் கிடைக்கிற மகிழ்ச்சிக்காக நம்மை நாமே தாழ்த்தி வி டக்கூடாது…!