வருங்காலத்தில் ஆன்மீகம் நிலைத்தால் மட்டுமே அரசியல் நன்றாக இருக்கும்
வருங்காலத்தில் ஆன்மீகம் நிலைத்தால் மட்டுமே அரசியல் நன்றாக இருக்கும் – ஸ்ரீ ஆத்ம சித்தர் லக்ஷ்மி அம்மா
பல மணி நேரம் தொடர்ந்து பனி பீடத்தில் அமர்ந்து தவத்தை மேற்கொண்ட ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மாவிடம் உரையாடிய போது:-
பனி பீடத்தை பற்றி?
இந்த பனி பீடத்தில் நான் உட்கார்ந்து இருந்தேன் என்று சொல்வதை விட என் பூத உடல் மூலம் இறைவன் அமர்ந்திருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் சிவன் சிவனே என்று இருந்து அமைதி காக்கின்றான் என்றால், ஒருவர் 10 நிமிடம் தொடங்கி 20, 30 ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தியான நிலைக்கு சென்றால் அவனது வாக்கு பலிதமாகும்.
தியானம் 12 மணி நேரத்தைக் கடக்கும் பொழுது தவ நிலையை மேற்கொள்ள செய்யும். அப்படி தவ நிலையை மேற்கொள்ளும்போது பஞ்சபூதங்களும் உங்களுக்கு கட்டுப்படும். ஆரம்பத்தில் இந்த பனி பீடத்தில் சிறிது நேரம் கூட உட்கார முடியாது. மூலாதாரத்தில் அக்னி உருவாகும், பின்பு காற்றடிக்கும் அதை மீறி உறுதியுடன் உட்காரும்போது தான் பஞ்சபூதங்கள் நமது கட்டுக்குள் வரும்.
இமயமலையில் நான் இப்படிதான் தான் இருந்தேன். ஆனால், இங்கு பனி பீடத்தை உரு வாக்கியதற்கான காரணம், என்னால் மட்டுமல்ல நீங்கள் எல்லோருமே இந்த பீடத்தில் அமர்ந்து தியானம் செய்ய முடியும் என்பதை கூறத்தான். ஆனால், இங்கு உள்ளவர்களால் இப்ப இடத்தில் அமர முடியாது. ஏனென்றால், அவர்களுக்கு அன்பு இல்லை, பணம் இல் லை, சொந்த பந்தத்திற்குள் யார் நன்றாக இருக்கிறார்கள் என்கிற எண்ணம். ஆனால், இவ ர்களுக்கு மேல் ஒரு உலகம் இருக்கிறது, வாழ் க்கை இருக்கிறது. மேலும், ஒரு மனி தனின் உடலைக் கிழித்து உயிரை பிரித்து எடுத்தப் பிறகு ஒரு வருட காலத்திற்கு நரக வேதனை அனுப விக்க வேண்டிவரும். அப்படி அனுபவிக்கும்போது அவனுக்கு துணை யாக வருவது இறைவனும் பஞ்சபூத சக்திகளும் தான். அதை இப்போதே சேர்த்து வை த்துவிட வேண்டும். நாம் இருக்கும்போது சேர்த்து வைக்கு ம் சொத்துக்களும் சொந்த ங்களும் நம்முடன் வரப்போவதில்லை. நாம் அணிந்திருக்கும் ஆபரணங்களை உற வினர்கள் எடுத்துக் கொள் வார்கள். அப்போது நாம் ஆன்மாவாக இருந்து அதைக் கண்டு துடிப்போம். அப்போது நம் பயணத்திற்கு யார் துணை வருவார்கள்?
உதாரணத்திற்கு ஒரு பேருந்தில் பயணம் செய்கிறோம். அங்கு பலருடன் பயணிப்போம். அதுபோல் தான் நாம் மரணித்தப் பிறகு பலரும் நம்முடன் வருவார்கள். ஆனால், ஒருவரு க்கொருவர் எந்த உதவியும் செய்துக் கொள்ள இயலாது. அந்த ஆன்மாக்களுக்கு நடுவே நாம் அனாதையாகி நிற்போம். இன்று யாருமில்லை என்று வருத்தப்படுகிறோமே? அன் றைக்கு வருத்தப்பட்டால் யார் வருவார்கள்? அதற்காக தான் தவ சக்தியை மேற்கொள்ள வேண்டும். இந்த பூத உடலை விட்டு ஆன்மா பிரிந்த பிறகு ஒரு பயணம் உண்டு. அந்த பய ணத்தில் நாம் செல்வதற்கு இப்பொழுதே நல்வழியில் செய்ய வேண்டும். தீய வழியில் செய்யக் கூடாது.
நீங்கள் நல்வழியில் நடக்க நினைத்து தீபம் ஏற்றி வைப்பீர்கள், தொடர்ந்து மூன்று நாட் கள் ஏற்றி வைப்பீர்கள். ஆனால், நான்காவது நாள் தீய சக்தியானது உங்களை தூங்க வை த்து விடும். நமது உடலில் இருக்கும் தீய சக்தி விரட்ட தொடர்ந்து தீபம் ஏற்றி அதை அடக்கி நாம் எழவேண்டும். சாதாரண தீபம் ஏற்றுவதற்கு இத்தனைப் பிரச்சினைகள் வரும்போது தவசக்தி மேற்கொள்ள எத்தனை பிரச்சினைகள் வரும்? என்பதை சிந்தித்துக் கொள்ளு ங்கள். அப்படி இந்த சக்தியை போராடி பெற்றால் அனைத்திலும் வெற்றி பெறலாம்.
நீங்கள் தவம் இருப்பதற்கான காரணம்?
ஒரு விபத்தில் பேருந்தில் இருக்கும் நால்வரைத் தவிர மற்றவர்களுக்கு அடிபட்டு விட்டது என்றால், அந்த நால்வரும் தப்பித்து கொள்வதாக நினைத்து ஓடிப்போவதா? அப்படி அல் ல; அவர்களை காப்பாற்றுவது தான் அவர்கள் செய்ய வேண்டிய செயல். அது போல்தான் நானும் மக்களை துன்பங்களில் இருந்து காப்பாற்ற இந்த பனி பீடத்தில் அமர்ந்தேன்.
பனி பீடத்தின் தொடர்ந்து எத்தனை மணி நேரம் அமர முடியும்?
இந்த பனி பீடத்தில் 2 மணி நேரம் முதல் 9 நாட்கள் வரை அமர்ந்து இருக்க முடியும். நாம் என்ன கோரிக்கை வைக்கிறோம் என்பதைப் பொறுத்து கால அளவு வேறுபடும். மேலும், மரணம் என்பது எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் நிகழும். ஆனால், அது இயற் கையானதாக தான் இருக்க வேண்டும். தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் மட்டும் வரவே கூடாது. ஒருவர் நம்மை உதாசீனப்படுத்துகிறார்கள்; வாழ்வில் நமக்கு தோல்வி வந்து விட்டது என்றெல்லாம் நாம் உயிரை மாய்த்துக்கொள்ள நினைக்கக் கூடாது. மாறாக வேறு பாதை நமக்கு காட்டியதற்காக அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
ஒரு குழந்தை பிறந்தவுடன் தானாக சென்று தாய்பால் குடிக்க முடியாது. தாய்தான் கொடு ப்பாள். சில தாய் குழந்தை பிறந்ததும் மரணித்து விடுவார். சில தாய் குப்பைத் தொட்டி யில் வீசி விடுவாள். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கும் இறைவன் ஏதோ ஒரு ரூபத்தில் உ ணவளிப்பான். அப்படித்தான் நாமும் நம் உள்ளுணர்வுகள், ஆசைகள், ஏக்கங்கள், ஆசை கள் இப்படி எதைப்பற்றியும் கவலைப்படாமல் நாம் துன்புறும் வேளையில் நம்மை முழுவ தும் இறைவனிடம் அர்ப்பணித்து விட்டு கண்மூடி சிவனே என்று அமர்ந்திருந்தால் பஞ்சபூ த சக்திகளும் நமக்கு கட்டுப்படும்.
பனி பீடம் போல் வேறு எந்தெந்த முறைகளில் தவமிருந்து உள்ளீர்கள்?
பனி பீடம் போல், புழுவிற்கு நடுவில் இருந்திருக்கிறேன்; பாம்புகளுக்கு நடுவில் தவ மிருந் திருக்கிறேன்; மண்ணிற்குள் இருந்திருக்கிறேன். பதஞ்சலி முனிவரை பாருங்கள்! அவர் உடலுக்குள் என்னென்ன சென்றிருக்கிறது என்று! பாம்பு, புழுக்கள், ஒரு மரத்தின் வேர் என அனைத்தும் சென்றிருக்கிறது. இவர் கண் திறந் து பார்த்து ஒரு வார்த்தை கூறினால் அனைத்தும் பஸ்பமாகிவிடும். அவரின் சக்தி எல்லா ம் வீணாகிவிட்டது. அவர் காலத்தில் பத்திரிக்கை, மீடியா என எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தால் அவருடைய தவ சக்தி பல கோடி மக்களுக்கு சென்று சேர்ந்திருக்கும். இப் போது அவர் தூம்மி விட்டு போன அளவு மட்டுமே நாங்கள் எடுத்து பயன்படுத்துகிறோம்.
சிவ களம், சக்தி களம் இரண்டும் வேலை செய்தால் தான் ஆறாவது அறிவு வேலை செ ய்யும். அப்போதுதான் தெய்வீக ஆற்றல் வெளிப்படும். நீங்கள் எதையும் வெல்லலாம்.
நான் இறக்க போகிறேன் என்றால் மக்களுக்கு நன்மை செய்யும் வகையில் என்ன விட்டு செல்வேன் என்பது மிகவும் முக்கியம். மேலும், நான் மீண்டும் பிறந்து வரும்போது நான் விட்டுச் சென்றதே தேடி எடுத்து பயன்படுத்திக் கொள்ள உதவும்.
மேலும், இந்த தவ நிலையில் மொத்தம் 10 சக்கரம் இருக்கிறது. இதில் 5 சக்கரம் வரையில் நான் வந்துவிட்டேன். மீதமிருப்பதை முடித்துவிட்டால் நடக்கப்போவதை துல்லியமாக என்னால் கூற இயலும். அதே சமயம் எனது பேச்சும் குறைந்து போகும். ஏனென்றால், ஒவ்வொரு வார்த்தைக்கும் சக்தி இருக்கும். அந்த வார்த்தைகளால் மக்களுக்கு துன்பம் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக நான் எனது பேச்சை குறைத்துக் கொள்வேன்.
இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் பற்றி?
வருங்காலத்தில் ஆன்மீகம் நிலைத்தால் மட்டுமே அரசியல் நன்றாக இருக்கும். விக்ர மா தித்தன் காலத்திலேயே 200 வருடங்களுக்கு மேல் யாரும் வாழ்ந்ததில்லை. இப்போது இரு க்கும் அரசியல்வாதிகள் மட்டும் எத்தனை ஆண்டுகள் வாழப் போகிறார்கள்? இருக்கும் வரை மக்களுக்கு நல்லது செய்து விட்டு செல்லுங்கள் என்றுதான் நான் கூறுவேன். அரசி யல் தலைவர்கள் தியானம் மேற்கொண்டால் அவர்களைச் சுற்றி நேர்மறை ஆற்றல் உரு வாகும். அவர்களாக நினைத்தால் கூட யாருக்கும் தீங்கிழைக்க முடியாது.
தங்களால் பக்தர்களுக்கு நேர்ந்த அற்புதங்கள்?
ஒருமுறை ஒரு பெண் என்னிடம் அழுதாள். என் அப்பா இறந்து, அவர் காரியம் முடிவத ற்கு ள் என் அம்மாவையும் அழைத்துச் செல்ல அப்பா வந்துவிட்டார் என்றாள். நான் இங்கிரு ந்தே வெளிநாட்டிலிருக்கும் அவள் அம்மாவை கட்டுப் போட்டு காப்பாற்றினேன். இன் னொ ரு முறை மலேசியா கோலாலம்பூரில் இறந்த ஆன்மா ஒன்று அவர் அஸ்தியைக் கரை த்த இடத்திலேயே அவர் பேரனுடைய அஸ்தியையும் கரைக்க சொல்லி என்னிடம் வேண்டியது. நானும் அவர் குடும்பத்தாருக்கு தகவல் கூறினேன். அதன்படி அவர்களும் செய்தார்கள்.இதுபோல் பல நிகழ்வுகள் நடந்துள்ளது. மேலும், சில ஆன்மாக்கள் வெளியே சொல்லக்கூடாது என்று என்னிடம் கோரிக்கை வைக்கும். நானும் கூறாமல் இருப்பேன். சில நேரங்களில் எனது உயிரையும் பணயம் வைத்து செய்ய வேண்டிய நிலை வரும்.
பக்தர்களுக்கு சொல்ல நினைப்பது?
ஒரு நாளைக்கு குறைந்தது 20 நிமிடமாவது தியானம் செய்யுங்கள். உங்கள் துன்பங்களை நீங்களே அறிந்து தீர்த்துக் கொள்ளுங்கள். என் பூத உடலை கொண்டு நான் நீண்ட நாட்கள் வாழ முடியாது. மேலும், நான் மீண்டும் பிறவி எடுத்து வரும்போது நல்ல வழியில் செல்ல சிலராவது நல்லவர்களாக இருக்கவேண்டும் அல்லவா?! ஆகையால் அனைவரும் தியாம் செய்யுங்கள்.
தற்போது செய்து கொண்டிருக்கும் செயல்கள் பற்றி?
ஒவ்வொரு வீட்டிலும் இறந்தவர்கள் கட்டாயம் இருப்பார்கள். அவர்களுடைய ஆன்மாக்கள் பற்றிக் கூறி வருகிறேன். அந்த ஆன்மாக்கள் அவர்களை பழிவாங்க வருகிறதா? நன்மை செய்ய வருகிறதா? அல்லது தெய்வமாகி விட்டதா? என்பது பற்றி என்னிடம் கேட்பவ ர்களுக்கு நான் கூறி வருகிறேன்.இது தவிர ஒரு ட்ரஸ்ட் தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு தேவையானதை செய்யவிருக்கிறோம்.
கொரோனா பற்றி?
கொரோனா என்பது ஒரு தொற்றுநோய். அதை அனைவருக்கும் பரவவிட்டு கொண் டிருக் கிறோம். கொரோனோ எல்லாரையும் தொட்டுவிட்டு தான் செல்லும். என்னையும் விட்டு வைக்காது. அதற்கு மூச்சுப் பயிற்சி தியானம் போன்றவைகளை செய்து நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இனிமேல் கொரோனா பயம் தேவையில்லை.