லொயோலா இன்ஞிசினியரிங் கல்லூரி மாணவர்களின், மணவர்களை ஊக்கப்படுத்தும் #கொலசாமி – பாடல்.
“கொலசாமி” என்ற பாடல், விவசாயிகளின் அன்றாட வாழ்க்கை முறையை மையப்படு த் தி உருவாக்கப்பட்டுள்ளது.
விவசாயத்தை மட்டுமே நம்பி அதையேக் கச்சையாகக் கட்டிக்கொண்டு பல எதிர்பார்ப் புகளோடு, சிறு சிறு கனவுகளை மனக்கண்கொண்டு வாழும் விவசாயிகளுக்கு, திடீர் தீடீரென உருவாகும் பருவநிலை மாற்றத்தாலும் இயற்கையின் சீற்றத்தாலும் சொல் லி மாளா கஷ்டத்தையும் நஷ்டத்தையும் ஒவ்வொரு வருடமும் அனுபவிக்கிறார்கள். இப்படி ப்பட்ட தொடர் நிகழ்வை நம் கண்முன்னே படம்பிடித்துக் காட்டுகிறது இப்பாடல்.
தன் வாழ்க்கையின் உச்சநிலை துயரத்தை தனக்குள் ளே சொல்லிக்கொண்டு, தனக்கு சோறுபோடும் வி ளைநிலத்தை தான் பெற்றெடுத்தப் பிள்ளை யா கவேப் பேணிக்காக் கிறார் விவசாயி.
விவசாயிகளின் உண்மையானத் துயரத்தை உள் வா ங் கியவர்களாய், வருடம் முழுவதும் வெட்டவெளி வெ யில் காட்டில் வெந்து தணியும் விவசாயிகளை மதிப்போம். விவாசிகளி ன் விவசாய தொழிலுக்கு முன்னுரிமை வழங்கி விவசாயத்தைக் காப்போம் என்ற உள் ளார்ந்த வேண்டுகோளை உரத்தக் குரலில் ஒலிக்கிறது இந்த “கொலசாமி” பாடல். லொ யோலா இன்ஞிசினியரிங் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய இந்த கொலசாமி பாடல் மாணவர்களை ஊக்கப்படுத்தும் பாடலாக அமையும்.
இதற்கு பாடல் எழுதி இயக்கிய மாணவர் எஸ்.அருள்துரை.,இசை:எம்.சுமன் மரிய அந் தோணி.பாடகர்:யாழினி.எடிட்டிங்:B.சரவணன்,கிரியட்டிவ் சப்போர்ட்: நதியா மீடியா சப்போர்ட்:மூவி பாண்ட் டிஜிட்டல்,Pro: ஜான்சன் ,தயாரிப்பு:காஸ்மோஸ் மீடியா பு ரொடக்ஷன்ஸ் .
இந்த பாடலை பிரபல சினிமா இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் நாளை 20.8.2021 வெள்ளிக்கிழமை மாலை 5மணிக்கு அவரது டிவிடரில் வெளியிடுகிறார்.
Song Lyrics
ஏஞ்சாமி கொலசாமி கொல்லப்புறம் நிக்குதைய்யா
வீட்டுக்கே வந்தாலும் வயலோடு வாழுமைய்யா
காடு கரையெல்லாம் கண்ணாகக் காக்குதைய்யா
ஊனாக உயிராக ஊரிலே உறையுதைய்யா
களத்து மேட்டுலயும் நெல்லுவயக் காட்டுலயும்
குடிலக் கட்டிக்கிட்டோம் குடும்பமா கூடிக்கிட்டோம்
கோழிக் குஞ்சோடும் ஆடுஎரும மாட்டோடும்
காத்தோடும் கருப்போடும் பாம்போடும் வாழ்ந்துவாரோம்
தொப்புள் கொடியாக வெவசாயம் செய்துவாரோம்
கையக் காலப்புடுச்சுவிட்டு வயக்காட்ட உழுதுவிட்டு
நாத்துவிட்டு நட்டுப்புட்டு நடுராத்திரி தூங்கிப்புட்டு
கருசமண்ணா காடுபூராம் கருகருன்னு வயக்காடு
காலையிலே நடையக்கட்டி களையெடுக்கப் போறோமுங்க
கோரப்புல்லு கொக்கரிக்க களக்கொல்லி மருந்தடிக்க
வெட்டவெளிக் காட்டுல வேகாத வெயிலுல
வாயக்கட்டி வயித்தக்கட்டி நெலத்தோரம் வரப்பக்கட்டி
வயத்தண்ணி பாயுதுங்க நாள்கணக்கா ஆகுதுங்க
வாய்க்காத் தண்ணி வத்தி போச்சியோ- ஏன்
வாயித் தண்ணி வத்தி போச்சியோ
வாய்க்காத் தண்ணி வத்தி போச்சியோ- ஏந்
தொண்டத்தண்ணி வத்தி போச்சியோ
கருகருன்னு மிளகாச்செடி தகதகன்னு மொட்டோட
கணக்கெல்லாம் கச்சிதமா கனவெல்லாம் மாளிகையா
நெலத்தோடு எம்வாசம் மனசெல்லாம் தாய்ப்பாசம்
ஏஞ்சாமி கொலசாமி கோயிலுக்கு போவான்னு
ஏவீட்டு பெருஞ்சாமி வளத்திருக்கு தலமுடி
காப்பித்தண்ணி குடிக்கையிலே கருமேகம் கூடிருச்சே
காடெல்லாம் வெள்ளமாயி கனவெல்லாம் கலஞ்சுருச்சே
பூவெல்லாம் மெதக்குதய்யா மிளகாச்செடி நீந்துதய்யா
கஞ்சிக்கும் கதியுயில்லா கடனாகி நின்னய்யா
பூவெல்லாம் மெதக்குதய்யா மிளகாச்செடி நீந்துதய்யா
கஞ்சிக்கும் கதியில்லாம கடனாகி நிக்குதய்யா
சகதியோட சகதியா சந்ததியே நிக்குதய்யா -இந்த
சகதியோட சகதியா ஏஜ் சந்ததியே
நிக்குதய்யா