ராயன் தமிழ் திரைப்பட விமர்சனம்

ராயன் தமிழ் திரைப்பட விமர்சனம்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உருவாகி இருக்கும் தனுஷ், அவ்வப்போது திரைத்படத் துறையில் டைரக்ஷன் செய்வதையும் தன் இலக்காக வைத்திருக்கிறார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரே இயக்கி, நாயகனாகவும் நடித்திருக்கும் திரைப்படம் ராயன். இது நடிகர் தனுஷ் க்கு ஐம்பதாவது திரைப்படம்ஆகும். இதை சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது.

கதை

சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த தனுஷ் தன் தம்பிகள் சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் தங்கை துஷாரா விஜயனுடன் சென்னைக்கு பிழைப்பு தேடி வருகிறார். வந்த இடத்தில் அவர்களுக்கு செல்வராகவன் அடைக்கலம் தர, அவரின் உதவியுடன் இந்த நால்வரும் வளர்கின்றனர். தந்தை இல்லாத குறையைத் தீர்ப்பது போல் தனது தம்பிகளையும்,தங்கையையும் கண்ணும் கருத்துமாக,

எந்த- வம்பு தும்புக்கும் போகாமல் குடும்பத்தை அமைதியாக நடத்திக் கொண்டிருக்கிறார் தனுஷ் . இது ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க, அந்த ஏரியாவில் மிகப் பெரிய தாதாக்களாக இருக்கும் பருத்திவீரன் சரவணன் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகிய இருவர் கிடையே பகை நிலவுகிறது. இவர்களை தீர்த்து கட்ட பிரகாஷ்ராஜ் தலைமையிலான போலீஸ் ஒரு பக்கம் திட்டம் தீட்டி கொண்டிருக்கிறது…

இன்னொரு பக்கம் தனுஷின் முதல் தம்பி சந்திப் கிஷன் வேலை வெட்டிக்கு செல்லாமல், அவ்வப்போது ரவுடித்தனம் செய்து கொண்டு அவர்களுடைய குடும்பத்திற்கு பெரும் தலைவலி கொடுத்து வருகிறார். அந்த சமயம் பருத்திவீரன் சரவணன் உடைய மகன் சந்திப் கிஷன் உடன் ஆனா சண்டையில் கொல்லப்படுகிறார். அந்த பழி சந்திப் கிஷன் மேல் விழ, பருத்திவீரன் சரவணன் மற்றும் அவருடைய கேங் சந்திப் கிஷனை கொல்ல துடிக்கிறது…

பருத்திவீரன் சரவணனின் மொத்த கேங்கையும் போட்டுத் தள்ள தனுஷ், மற்றும் அவரது இரு தம்பிகள் களத்தில் குதிக்கின்றனர்…

இதனால் அவருக்கும், அவர் குடும்பத்திற்கும் எந்த அளவு பாதிப்பு ஏற்பட்டது? ரவுடிகளிடமிருந்தும், போலீஸிடம் இருந்தும் தனுஷ் மற்றும் இரு தம்பிகள், மற்றும் தங்கை ஆகியோர் தப்பித்தார்களா….. இல்லையா? என்பதே ராயன் படத்தின் மீதி கதை.

அலசல்

ஒரு திரைப்படம் தயாரிக்கும் போது அத்திரைப்படத்தை, தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு மற்றும் இயக்குனருக்கு அத் திரைப்படம் பார்வையாளர்களின் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன…? என்பதைப் பற்றிய ஒரு புரிதல் இருக்க வேண்டும்…

குறிப்பாக தாங்கள் தயாரிக்கும் திரைப்படம் மக்களுக்கு நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்துகின்றனவா…? அல்லது எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்துகின்றனவா….? என்ற அக்கறை இருக்க வேண்டும்.

குறிப்பாக நல்ல விஷயங்களை சொல்லுகின்றோமா இல்லையோ…?ஒரு தவறான விஷயத்தை சொல்லிவிடக்கூடாது என்ற புரிதல் கண்டிப்பாக இருக்க வேண்டும்…

இத் திரைப்படம் அதைப்பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல், ஆரம்பம் முதல் இறுதி வரை ரத்தம்

தெறிக்க, தெறிக்க ஆட்களை கூறு போடுவதோடு மட்டுமல்லாமல், நம் இதயங்களையும் கூறு போட்டு விடுகிறது… ரத்தம் தெறிக்க, தெறிக்க.

தனுஷின் நடிப்பு, அபர்ணா பால முரளி யின் நடிப்பு, எஸ் ஜே சூர்யா வின் நடிப்பு,ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் இன் ஒளிப்பதிவு, ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை இதெல்லாம் சிறப்பு என்றாலும், படத்தின் கதையும் – கதைக்களமும் மிக மோசமானதாக, அருவருக்கத்தக்க வகையில், பார்க்கும் இளைஞர்களின் மனதில் வன்முறையை தூண்டும் விதத்தில் அமைந்திருக்கிறது இத் திரைப்படம்.

அண்மையில், ஒரு கட்சியின் தலைவர் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கும் வேளையில், இதுபோன்ற வன்முறையை தூண்டும் விதத்தில் அமைந்திருக்கிற இது போன்ற திரைப்படங்களை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும்.

ஒன்றிய அரசின், திரைப்படத் தணிக்கை துறையினரின் முக்கிய வேலை நல்ல திரைப்படங்களை மக்களிடம் கொண்டு செல்லாமல் பார்த்துக் கொள்வது…

அதேபோல தடை செய்யப்பட வேண்டிய, வன்முறையை தூண்டும் விதத்தில் அமைந்திருக்கக் கூடிய,இது போன்ற திரைப்படங்களை மக்களிடம் கொண்டு செல்வது…

அந்த விதத்தில் அத் திருப்பணியை மிகச் சிறப்பாக செய்திருக்கிறது ராயன் திரைப்படம்…

மிகச் சிறப்பான, ரத்தம் தெறிக்க,தெறிக்க ஆரம்பம் முதல் இறுதி வரை எத்தனை பேர் கத்தியால் குத்தப்பட்டு அல்லது வெட்டப்பட்டு இறந்தார்கள்… என்பதை கண்டுபிடித்து தெரிவிப்பவர்களுக்கு ஒரு அருமையான விலை உயர்ந்த காரை சன் பிக்சர்ஸ் அளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை..?

அந்த வகையில், ரத்தம் தெறிக்க- தெறிக்க, ஆரம்பம் முதல் இறுதி வரை எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்ற விறுவிறுப்புடன், ஒரு அருமையான, திரைப்படத்தை எடுத்திருக்கும்

சன் பிக்சர்ஸ் யும் – இயக்குனர் தனுஷ் அவர்களையும், எவ்வளவு பாராட்டினாலும் 😆😆😆😆😆 தகும்…

Movie review by B4U media team.