ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் அனைத்திந்திய படத்திற்கு ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ என பெயரிடப்பட்டுள்ளது

ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் அனைத்திந்திய படத்திற்கு ‘டைகர் நா கேஸ்வர ராவ்’ என பெயரிடப்பட்டுள்ளது

ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்

‘மாஸ் மகாராஜா’ என அன்புடன் அழைக்கப்படும் ரவி தேஜா பல படங்களில் பிஸியாக இ ருந்து வருகிறார். ஒவ்வொரு திரைப்படமும் மற்ற படங்களில் இருந்து வித்தியாசமாக இ ருக்க வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்து வருவதோடு, ஒவ்வொரு கதாபாத்தி ரத்திற்கும் மாறுபாடு காட்டி வருகிறார்.

இதற்கிடையே, புதிய படமொன்றில் ரவி தேஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார். ‘டைகர் நாகேஸ் வர ராவ்’ என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் கதை, 1970-களில் வாழ்ந்த துணிச்சல் மிகுந்த பலே திருடன் மற்றும் ஸ்டூவர்ட்புரம் மக்கள் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப் படையாகக் கொண்டதாகும்.

மாஸான இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரவி தேஜா தன்னை முழுவதுமாக தயா ர்ப டுத்தி வருகிறார். இப்படத்தில் அவரது உடல் மொழி, வசனம் மற்றும் தோற்றம் முன் னெ ப்போதிலும் இல்லாத வகையில் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.

படத்தை இயக்கவிருக்கும் வம்சி கடந்த 3 ஆண்டுகளாக தனது குழுவினருடன் இணைந்து திரைக்கதை மற்றும் இதர முன்-தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த பிரம் மாண்டமான படத்தை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரில் அபிஷேக் அகர்வால் தயா ரிக்கிறார், தேஜ் நாராயண் அகர்வால் வழங்குகிறார்.

கதையின் மகத்துவத்தை புரிந்துகொண்ட தயாரிப் பா ளர் கள், இந்திய அளவில் அதிக பொ ருட்செலவில் இப்படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளனர். இது ரவி தேஜாவின் முதல் அகில இந்திய படமாகும். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலை யாளம் மற்றும் இந்தி மொழிகளில் இது உருவாகும்.

டைகர் நாகேஸ்வர ராவின் வாழ்க்கை கதை திரைப்படமாக எடுக்க மிகவும் தகுதி யா னதாகும். இதுபோன்ற மாஸான, வ லுவான பாத்திரங்களில் நடிப்பதற்கு மிகவும் பொ ருத்த மானவர் ரவி தேஜா என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

டைட்டில் போஸ்டரை பொருத்தவரை, ரவி தேஜாவின் கால் அடையாளங்கள் புலி பாத த் தைக் குறிக்கின்றன. கதா பா த்திரத்தின் சக்தியையும், ஆழத்தையும் அது தெளிவாக சொல்கிறது. போஸ்டரில் அவர் ரயிலை துரத்துவது போல் தெரிகிறது. ‘வேட்டைக்கு முன் அமை தியை உணருங்கள்’ (Feel the silence before the hunt) என்ற வாசகம் போஸ்டருக்கு மே லும் சுவாரஸ்யம் ஊட்டுகிறது.

இப்படத்திற்காக அற்புதமான ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டு தேவையான அனைத்து வ ணிக விஷயங்களும் சரியான விகிதத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. படத்தில் அதிரடி கா ட்சிகள் நிரம்பியிருக்கும். 70-களில் நடக்கும் கதை என்பதால், அந்த காலகட்டத்தை மீ ண்டும் உருவாக்க பிரபல தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆர் மதி ஐஎஸ்சி ஒளிப்பதிவை கையாள, ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பை கவனிக்க, ஸ்ரீகாந்த் விசா வசனம் எ ழுதுகிறார். மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக இருப்பார். படம் குறித்த மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும்.

நடிப்பு:

ரவி தேஜா

தொழில்நுட்ப கலைஞர்கள்-;

எழுத்து & இயக்கம்: வம்சி ,தயாரிப்பு: அபிஷேக் அகர்வால் ,பேனர்: அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் ,வழங்குபவர்: தேஜ் நாராயண் அகர்வால் ,இணை தயாரிப்பாளர்: மயங்க் , ,சிங்கா னியா ,வசனம்: ஸ்ரீகாந்த் விசா ,இசையமைப்பாளர்: ஜி வி பிரகாஷ் குமார் ,ஒளிப்பதிவு: ஆ ர் மதி , தயாரிப்பு வடிவமைப்பு: அவினாஷ் கொல்லா ,மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)