மெட்டல் சீரிஸ் [Metal Series] ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகப்படுத்துகிறது

ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட் அறிமுகப்படுத்தும் ஸ்டைலின் அடுத்த பரிணாமம்! கண்களைக் கவரும் கம்பீரம் மற்றும் ஃபேஷனை வெளிப்படுத்தும், மெட்டல் சீரிஸ் அறிமுகம்!!

சென்னை: இளைய தலைமுறையினருக்கான இந்தியாவின் முன்னணி ஃபேஷன்-டெக் பிராண்டான ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட் [Fastrack Smart, India’s leading fashion-tech brand], புதிய மெட்டல் சீரிஸ் [Metal Series] ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகப்படுத்துகிறது. தொழில்நுட்பத்தில் மிகவும் மேம்பட்ட, கண்களைக் கவரும் அசத்தலான ஸ்டைலில், மெட்டாலிக் பிரிவில் இந்த ஸ்மார்ட் வாட்ச்சை வடிவமைத்திருக்கிறது ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட். இளம் இந்தியாவுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட உற்சாகத்தை அளிக்கும் ஒன்றாக அறிமுகமாகி இருக்கும் இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் தொகுப்பு, உயர் தரத்திலான வடிவமைப்பையும், மலிவு விலையில் அதிநவீன அம்சங்களை ஒன்றிணைக்கும் வகையில் அறிமுகமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஸ்மார்ட் வாட்ச் பிரிவில் இதுவரையில்லாத ஒரு புதிய பாணியிலான வரையறையை உருவாக்கி இருக்கிறது.

டைட்டன் தயாரிப்புகளில் ஒன்றான ஃபாஸ்ட்ராக், இந்தியாவின் இளைய தலைமுறையினர்களுக்காக நவீன ஃபேஷனை முன்னெடுக்கும் வகையிலான கைக்கடிக்காரங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது, கண்களைக் கவரும் கம்பீரமான தொகுப்பாக வெளியாகி இருக்கும் மெட்டல் சீரிஸ் டைட்டனின் மரபுக்கு ஒரு அடையாளமாக அமைந்திருக்கிறது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் பிரீமியம் மெட்டாலிக் அழகியலைக் கலந்திருப்பது, நவீன பாணியையும், தயாரிப்பின் நேர்த்தியையும் கலந்திருக்கும் ஃபாஸ்ட்ராக்கின் குணாதியசயத்தை வெளிப்படுத்துகிறது. ஃபாஸ்ட்ராக்கின் துருப்பிடிக்காத ஸ்டெய்ன்லெஸ்-ஸ்டீல் கடிகாரங்களின் கம்பீரம் மற்றும் உறுதி ஆகியவற்றினால் ஈர்க்கப்பட்டு, இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் தொகுப்பு பிரீமியம்-தரத்திலான மெட்டலை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கைக்கடிகாரம் அணிவதற்கான கைப்பட்டையும் துருப்பிடிக்காத மெட்டலினால் வடிவமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. ஸ்டெய்ன்லெஸ்-ஸ்டீல் மெட்டலின் தரம் நீடித்து உழைக்கக்கூடியதாகவும், நீண்ட ஆயுளை உடையதாகவும் இருப்பதை, பல கடுமையான சோதனை செயல்முறைகளுக்கு உட்படுத்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டைட்டன் நிறுவனத்தின் வியரபிள்ஸ் என்றழைக்கப்படும் அணியும் பயன்பாட்டு உபகரணங்கள் [Wearables] பிரிவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் ஆதித்யா ராஜ் [Adithya Raj, Head – Sales & Marketing – Wearables, Titan Company Ltd] தி மெட்டல் சிரீஸ் அறிமுகம் குறித்து பேசுகையில், “ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட் [Fastrack Smart],இந்திய இளைய தலைமுறையினரின் ஃபேஷன் அம்சங்களை, தனது தனித்துவமான பாணி மற்றும் உயர் தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் மிகச்சரியான விகிதத்தில் கலந்து புதிய வரையறையை உருவாக்கியுள்ளது. ஜெனரேஷன் இசட்-டின் எதிர்பார்புகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும் தயாரிப்புகளில் ஒன்றாக, நவீன போக்கை உருவாக்கும் ட்ரெண்ட் செட்டிங் தயாரிப்பாக மெட்டல் சீரிஸ் அறிமுகப்படுத்தி இருப்பது எங்களின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் தொகுப்பு, ஸ்மார்ட்வாட்ச் பிரிவை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்து செல்வதோடு மட்டுமல்லாமல், இன்றைய நவீன தலைமுறையினர்களால் மிகவும் அதிகம் நேசிகப்படும் ஒரு பயன்பாட்டு உபகரணமாகவும் முக்கியத்துவம் பெறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட்டை பொறுத்தவரையில், வியரபிள் டெக்னாலஜி எனப்படும் அணியும் பயன்பாட்டு உபகரணங்களுக்கான தொழில்நுட்பத்தில் நாங்கள் தொடர்ந்து முன்னணியில் இருப்பதோடு,அனைவரையும் கவரும் நவீன பாணியிலான வடிவமைப்புகளுடனான தயாரிப்புகளை, எல்லோரும் வாங்க கூடிய விலையில் வழங்குவதை எங்களது இலக்காக கொண்டு, அதற்கான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். இந்த புதிய மெட்டல் சிரீஸ் ஸ்மார்ட் வாட்ச்களுடன் இன்றைய இளைய தலைமுறையினர் கம்பீரமாக வலம் வருவதைக் காண ஆவலுடன் இருக்கிறோம்’’ என்றார்.

ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட் மெட்டல் சீரிஸ் என்பது உத்வேகமிக்க, உற்சாகமளிக்கும் வகையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டிருக்கும் உங்கள் வாழ்க்கைமுறையில், உங்களை எந்தவித தடையுமின்றி ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அசாத்தியமான தொழில்நுட்ப அம்சமாக இருக்கிறது.

● பிரீமியம் வடிவமைப்பு மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் இணைந்திருக்கிறது [Premium Design Meets Advanced Technology]

துல்லியமாக வடிவமைக்கப்பட்ட, மெட்டல் சீரிஸ், பிரீமியம் மெட்டாலிக் வடிவமைப்பு மற்றும் நீடித்து உழைக்கும் துருப்பிடிக்காத- மெட்டல் கைப்பட்டைகள் ஆகியவற்றுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் அசத்தலான பாணி மற்றும் நீடித்த ஆயுள் ஆகிய இரண்டு அம்சங்களின் நேர்த்தியான கலவையை உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகவும் நவீனமான சிப்செட் இதன் அசாத்திய செயல்திறனை மேம்படுத்துகிறது. இதன் மூலம் எந்தவிதமான தடைகளும், பிரச்சினைகளும் இல்லாத செயல்பாடு மற்றும் நீடித்து தாக்குப்பிடிக்கும் ஆற்றலுக்கான வாய்ப்பையும் வழங்குகிறது.

● உங்கள் பாணியில் எப்பொழுதும் இணைந்திருங்கள் [Stay Connected, Your Way]

ஒரே ஒருங்கிணைக்கப்பட்ட இணைப்பு அம்சமான SingleSync BT அழைப்பின் [SingleSync BT calling] மூலம் ஈடுஇணையற்ற வசதியையும், செளகரியத்தையும் நீங்கள் அனுபவிக்க முடியும். உங்கள் தொலைபேசியை எடுத்து பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லாமல் உங்களுக்கு வரும் குரல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை எந்தவித சிரமமும் இல்லாமல் நிர்வகிக்க உதவுகிறது.

● நிபுணத்துவமிக்க திரை [Brilliance in Display]

ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட் வழங்கும் ஸ்மார்ட்வாட்ச்களுக்காக தனிப்பயனாக்கப்பட்ட அடுத்த தலைமுறை சென்சார் உடனான தயாரிப்புகள், AMOLED திரை [AMOLED displays], அதிவேக செயல்பாட்டு இயங்குதள [UI] அனுபவம் மற்றும் மேம்பட்ட பயன்பாட்டு அனுபவத்தை அளிக்கும் துல்லியமான தெளிவுடன் பார்க்கும் வசதி ஆகிய அம்சங்களுடன் புதிய அனுபவத்தை வழங்குகின்றன.

இந்த அம்சங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, ஸ்மார்ட்வாட்சை மிக அழகாக தோற்றமளிக்க செய்வதோடு மட்டுமல்லாமல், ஈடுஇணையற்ற வகையில் செயல்படும் ஒரு உச்சக்கட்ட பயன்பாட்டு உபகரணமாக ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட் மெட்டல் சிரீஸை முக்கியத்துவம் பெற வைத்திருக்கின்றன. ’உங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது’ என்று பொருள்படும் [‘Designed to Flex’] என்ற பிரச்சாரமானது, நம் நாட்டு இளைய தலைமுறையினரால் அதிகம் விரும்பப்படும், எதிர்பார்புகளை உருவக்கி வரும் ஸ்டைலை பூர்த்தி செய்வதோடு, ஃபேஷன் மற்றும் பயன்பாட்டு வசதியையும் முன்னிலைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்ட்ராக் ஸ்மார்ட் அறிமுகப்படுத்தி இருக்கும் மெட்டல் சிரீஸ் கைக்கடிகாரங்கள், அனைத்து டைட்டன் வேர்ல்ட் விற்பனை நிலையங்கள், fastrack.in, விற்பனை நிலையங்கள், ஷாப்பர்ஸ் ஸ்டாப், லைஃப் ஸ்டைல் பை இண்டர்நேஷனல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல-பிராண்ட் சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கின்றன. மேலும் fastrack.in, Amazon & Flipkart. ஆகியவற்றின் மூலமாக ஆன்லைனிலும் வாங்கமுடியும்.