“ முன்னா “ திரைப்படம் விமர்சனம்
நடிகர்கள், நடிகைகள்
சங்கை குமரேசன் ( முன்னா )நியா கிருஷ்ணா ( ஹீரோ தங்கை ) , ரம் யா(சங்கீதா), ராஜு ( ஹீரோ அப்பா ), சிந்து( சக்கு ),கென்னடி( தண்ணிபாம்பு முருகன் ), சண்முகம்,வெங்கட் ஆகி யோர் முக்கிய கதாப்பாதிரங்களில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு – ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் (ராமுமுத்துச்செல்வன்) ,பாடல்களுக்கான இசை – D.A.வசந்த்தும்.பின்னணி இசை – சுனில் லாசர். ஒளிப்பதி – ரவி,நடனம் – கென்னடி எடிட்டிங் – பத்மராஜ்,மக்கள் தொடர்பு – மணவை புவன்,கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இய க்கம் – சங்கை குமரேசன்,மற்றும் பலார் பண்ணியாடி ற்றினார் .
திரை கதை-;
நாடோடிகளாக வாழும் கழைக்கூத்தாடி குடும்பத்தைச் சேர்ந்த கதாநாயகன் சங்கை கும ரேசன், தங்களது சமூகம் இப்படியே இருந்துவிடாமல், மற்றவர்களைப் போன்று நாகரீக வாழ்க்கைக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக சிறு வயதிலேயே பெற் றோ ர்களை எதிர்த்து அக்கூட்டத்தில் இருந்து வெளியேறுபவர், கோடீஸ்வரனாக வேண் டும் என்ற கனவோடு பயணிக்க, அவருடைய கோடீஸ்வர கனவு நிறைவேறியதா, இல்லை யா என்பதே படத்தின் கதை.
படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;
திரைப்பட விமர்சனம்-;
‘‘கலைக்கூத்து நடத்தி பிழைப்பு நடத்தும் நாடோடி கூட்டத்தை சேர்ந்த ஒருவன் நாகரிக வாழ்க்கையை அனுபவிக்க ஆசைப்படுகிறான். அதிர்ஷ்டவசமாக அந்த வாழ்க்கை அவ னுக்கு அமைகிறது. அந்த வாழ்க்கையில் அவன் மகிழ்ச்சி அடைந்தானா, இல்லையா? என் பதற்கான விடை, ‘முன்னா’ படத்தில் இருக்கிறது’’ படத்தில் நாயகனாக நடித்திருப்ப தோ டு, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கிறார் சங்கை குமரேசன். நாடோடிகளாக வாழும் கழைக்கூத்தாடிகளின் துயர வாழ்க்கையை அழுத்தமாக பதிவு செ ய்திருப்பவர், அவர்களிடம் இருக்கும் நேர்மை மற்றும் நற்பன்புகளையும் அழகாக எடு த்துரைத்திருக்கிறார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் சங்கை குமரேசனின் வெகுளித்தனமான நடிப்பும், தோற்றமும் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறது. தனது சமூகம் நாகரீக வா ழ்க்கைக்கு வர வேண்டும், என்ற எண்ணத்தை வெளிப்படுத்தும் போது, ஒட்டு மொத்த க ழை க்கூத்தாடிகளின் வலிகளை எடுத்துரைப்பவர், அதே சமயம், பேராசை எப்படிப்பட்ட இ டத்திற்கு நம்மை அழைத்து செல்லும், என்பதையும் தனது நடிப்பால் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் ராஜு, அம்மாவாக நடித்திருக் கும் சிந்து, நாயகனின் நண்பர் வேடத்தில் நடித்திருக்கும் நடன இயக்குநர் கென்னடி, ரம் யா உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவரும் அளவாக நடித்து கவர்கிறார்கள்.
வாழ்க்கையின் அடித்தட்டில் இருப்பவர்கள் காலம் முழுவதும் இப்படியே இருந்து விடாம ல், உயர் நிலைக்கு வர வேண்டும், என்ற கருத்தை கதையாக்கிய சங்கை குமரேசன், கோ டீஸ்வர கனவு, அதிர்ஷ்ட்டம் போன்ற கூடுதல் விஷயங்களை உற்புகுத்தி கதையின் போ க்கை மாற்றி, சில இடங்களில் திரைக்கதையை சிதைத்திருப்பது படத்திற்கு பெரும் பல வீனம்.இருந்தாலும், மக்கள் அறிந்துக்கொள்ளக் கூடிய நல்ல விஷயத்தை நே ர்மை யான முறையில் சொல்லி யிரு க்கும் இயக்குநர் சங்கை குமரேசனையும், அவரின் சமூக அக்க றையை எடுத்துரைக்கும் விதமாக இருக்கும் ‘முன்னா’ படத்தையும் தாராளமாக வரவே ற்கலாம்.
டி.ஏ.வசந்தின் இசையில் பாடல்கள் புரியும்படியும், சிந்திக்கும்படியும் உள்ளது. சுனில் லா சரின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது.ஒளிப்பதிவாளர் ரவி கதைக்கு ஏற் ப ஒளிப்பதிவு செய்திருப்பதோடு, பாடல் காட்சிகளை படமாக்கியது மற்றும் பட காட்சிக ள் என முழு படத்தையும் குறிப்பிட்ட சில லொக்கேஷன்களை வைத்துக்கொண்டு முடித் தி ருப்பவர், தன்னால் முடிந்தவரை லொக்கேஷன்களை வித்தியாசப்படுத்தி காட்ட முய ற்சி த்திருக்கிறார். நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் நியா கிருஷ்ணன், கொடுத்த வே லையை கச்சிதமாக செய்திருப்பதோடு, காதல் மற்றும் நடனக் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார்.
இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரையரங்குக் சென்றுற்
திரை ப்படத்தை பார்க்கவும்.
எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு – 3.5 / 5