முடக்கறுத்தான் திரை விமர்சனம்
வயல் மூவிஸ் தயாரிப்பில், டாக்டர் வீரபாகு எழுதி – இயக்கி – கதாநாயகனாக அவரே நடித்திருக்க, அவருடன், கதாநாயகியாக மகானா, மற்றும் சமுத்திரக்கனி, சூப்பர் சூப்பராயன், மயில்சாமி, பவாலட்சுமணன், முத்துக்காளை, சாம்ஸ், காதல் சுகுமார் என்று பலர் நடித்திருக்கும் படம் தான் முடக்கறுத்தான்.
கதை நாயகன் டாக்டர் வீரபாகு , மூலிகை மருத்துவம் செய்து வருவதோடு, ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களை ம் பராமரித்து வருகிறார். அவருக்கும், நாயகி மஹானாவுக்கும் திருமணம் நிச்சயம்செய்யப்படுகிறது. திருமணத்திற்காக புத்தாடை வாங்குவற்கு சென்னை செல்லும் டாக்டர் வீரபாகு அங்கு அவருடைய உறவினரை சந்திக்கிறார். உறவினருடைய குழந்தை காணாமல் போன செய்தியை அறிகிறார். காணாமல் போன தனது உறவினரின் குழந்தையை தேடும் முயற்சியில் இறங்கும் வீரபாகு குழந்தை கடத்தல் பின்னணியில் மிகப்பெரிய நெட்வொர்க் இருப்பதை கண்டுபிடிக்கிறார். பிறகு அவர்களை அழித்து அவர்களிடம் இருக்கும் குழந்தைகளை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். அதை அவர் எப்படி செய்தார்…..? குழந்தை கடத்தல் தொடர்பில் இருக்கும் நெட்வொர்க்கை இயக்குவது யார்…..? கடத்தப்படும் குழந்தைகளின் நிலை
என்ன? கடைசியில் குழந்தைகளை காப்பாற்றி அவர்களை உரியவர்களிடம் ஒப்படைத்தாரா என்பதை சொல்லும் கதைதான் ‘முடக்கறுத்தான்’.
கொரோனா பரவல் காலத்தின் போது மூலிகை மருத்துவம் செய்து லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றிய டாக்டர் வீரபாபுக்கு, சினிமா ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆசை வந்தது ஓட விளைவு இப்படம் . ஆனால், நிஜ வாழ்க்கையில் இருக்கும் அவரது ஹீரோ இமேஜை கெடுத்துக்கொள்ளும் விதமாக சினிமாவில் கதாநாயகனாகி தனது நிஜ ஹீரோ பெயரை குறைத்துக் கொண்டு இருக்கிறார் .
நாயகியாக நடித்திருக்கும் மஹானா வழக்கம் போல் பெயர் அளவிற்கு ஒரு கதாநாயகியாக நடித்திருக்கிறார் . வில்லனாக நடித்திருக்கும் சூப்பர் சுப்பராயன், இந்த வயதில் டூப் இல்லாமல் சண்டைக்காட்சியில் நடித்திருப்பது சிறப்பு. சிறப்பு தோற்றத்தில் நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார் சமுத்திரக்கனி. ஒரு சில காட்சிகளில் வரும் மயில் சாமியின் காட்சிகள் சற்று சிரிக்க வைக்கிறது.
நகைச்சுவைக்காக சாம்ஸ், காதல் சுகுமார், அம்பானி சங்கர், வெங்கல் ராவ் போன்றோர் நடித்திருந்தாலும், பல இடங்களில் கடி.
அருள் செல்வன் அவர்களுடைய ஒளிப்பதிவு சுமார். DI, பின்னணி இசை,மிக்சிங் எல்லாம் சுமார் ரகம். சிற்பியின் இசையில்- பழநி பாரதியின் பாடல்கள் சுமார் ரகம். நல்ல கலைஞர்கள் இருந்தும், இயக்குனர் அவர்களை சரியாக பயன்படுத்தாமல் இருப்பது தெரிகிறது.
மொத்தத்தில், ‘முடக்கறுத்தான்’ மூக்கறுத்தான் கதையாக ஆகிவிட்டது.
திரைவிமர்சனம் : ராஜு