மிஸ்டர் & மிஸஸ் மஹி’ (இந்தி) திரைப்பட விமர்சனம்

மிஸ்டர் & மிஸஸ் மஹி’ (இந்தி) திரைப்பட விமர்சனம்

Casting :

Rajkumar Rao, Janhvi Kapoor, Kumud Mishra, Sarina Wahab, Rajesh Sharma, Arjit Taneja, Purnendu Bhattacharya, Yamini Das

Directed By : Sharan Sharma

Music By : Aadesh Shrivastava, Vishal Mishra, Tanishk Bagchi, Jaani, Achint & Yuva, Hunny & Bunny, Dhrruv Dhalla

Produced By : karan Johar, Umesh KR Bansal, Hiroo Yash Johar, Apoorva Mehta,

கதை

நாயகன் கிரிக்கெட்விளையாட்டில் ஆர்வம். கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்காமல் இருப்பதால் தன்னை யாரும் மதிப்பதில்லை, வெற்றி மட்டுமே மகிழ்ச்சியை கொடுக்கும், என்று எண்ணி தாழ்வு மனப்பான்மையுடன் வாழும் ராஜ்குமார் ராவுக்கும், மருத்துவரான நாயகி ஜான்வி கபூருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு மனைவிக்கும் கிரிக்கெட் விளையாட்டு மீது பேரார்வம் இருப்பது தெரிய வருகிறது. தங்கள் குடும்பத்தை பற்றி கவலைபடாமல் இருவரின் ஆசையும் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ராஜ்குமார் ராவ், தன்னால் கிரிக்கெட் விளையாட்டு வீரராக சாதிக்க முடியவில்லை நஎன்றாலும், கிரிக்கெட்டில் ஆர்வமும், நன்றாக விளையாடவும் செய்யும் தனது மனைவிக்கு முறையான பயிற்சியளித்து அவரை சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக்கி, அதன் மூலம் சிறந்த பயிற்சியாளர் என்று தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார். அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

நாயகன் ராஜ்குமார் ராவ்
மகேந்திர அகர்வால் என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் என்பதைவிட அந்த கேரக்டராகவேவாழ்ந்திருக்கிறார்.

மஹிமா குப்தா என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஜான்வி கபூர் கோடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்து நல்ல நடிகை என்று நிரூபித்திருக்கிறார்.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஷரினா வாஹப்,
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் குமுத் மிஷ்ரா, கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்திருக்கும் ராஜேஷ் சர்மா, நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் பூர்ணேந்து பட்டாச்சார்யா, அம்மாவாக நடித்திருக்கும் யாமினி தாஸ், நாயகனின் தம்பியாக நடித்திருக்கும் அர்ஜித் தனேஜா என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் அனய் ஓ கோஸ்வாமியின் கேமரா கிரிக்கெட் விளையாட்டின் விறுவிறுப்பைக் காட்டிலும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், நாயகன், நாயகி இடையிலான காதல் மற்றும் மோதல் ஆகியவற்றின் உணர்வுகளை ரசிகர்களிடத்தில் கடத்திவதில் அதிகம் மெனக்கெட்டு, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்

ஆதேஷ் ஸ்ரீவத்ஸவா, விஷால் மிஷ்ரா, தனிஷ்க் பக்ஜி, ஜானி, அஜிண்ட் & யுவா, ஹன்னி & ஃபண்ணி, துருவ் தல்லா, என ஆறு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளார்கள். படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது.

படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் சரண் சர்மா, மொழிகள் கடந்து எல்லோரும் ரசிக்க கூடிய படமாக கொடுத்திருக்கிறார். பாராட்டுக்கள்